சசி ஒழியணும், தீபா ஆட்சி அமைக்கணும்: பல ஆயிரம் கோடிகளை அள்ளி வழங்கிய காஞ்சி ஜெயேந்திரன்
காஞ்சி
மாநகருக்கும் அரசியலுக்கும் அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து ஒரு பிணைப்பு
உண்டு. அது ஜெ., இருந்தவரை பதுங்கி இருந்து, இப்போது வீறு கொண்டு
எழுந்துள்ளது.
காஞ்சி பெரியவர் ஜெ.,
நட்பு ஆரம்ப காலத்தில் மிக நெருக்கமாக இருந்தது. பின் அந்த உறவில் விரிசல்
அதிகமானது. காரணம் சசி என்கிறது அந்த வார இதழ். என்ன என்று அறிவோம்
வாருங்கள் லைவ் டே வாசகர்களே.
சங்கரராமன்
கொலையும் அதைத் தொடர்ந்து காஞ்சிப் பெரியவா ஜெயேந்திரர் கோர்ட் கேஸ் என்று
அலைக்கழிக்கப்பட்டதையும் யாரும் இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள்.
ஜெயேந்திரரின்
ஆன்மீக வாழ்க்கையையே புரட்டிப்போட்ட கொலை வழக்கு அது. அதன் பின் முட்டி
மோதி அந்த கேசில் இருந்து வெளிவந்தார் ஜெயேந்திரர்.
அத்தனைக்கும்
காரணம் அவரிடம் கொடுக்கப்பட்ட எழுநூறு கோடிகள் பணம் என்று அப்போது
ஊடங்கள் எழுதியது. அந்த கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட சிக்கல் தான் கொலைப்
பழி என்றும் கூறினார்கள்.

இப்போது
கிளம்பியிருக்கும் பூதம் அதை ஒட்டித்தான் என்கிறார்கள். அப்போது நடந்த
அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் சசிகலா கோஷ்டிதான் என்பதை அறிந்த
ஜெயேந்திரர், சசி மீது கடுமையான கோபத்தில் இருந்தார்.
சமயம்
பார்த்துக் கொண்டிருந்தவருக்கு இப்போது சரியான வாய்ப்பு கிடைத்திருகிறது.
சசியை அரசியலில் இருந்து அடித்து விரட்ட வேண்டும் என்பதில் ஜெயேந்திரர்
முழு மூச்சாக இறங்கி விட்டார்.
டெல்லி
ஆளும் தலைமையும் அவருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டது. எத்தனை கோடிகள்
செலவு செய்தாலும் தீபாவைக் களம் இறக்க வேண்டும் என்கிற முடிவோடு பணத்தை
பாய்ச்ச ஆயத்தம் ஆகி வேலையும் துவங்கி விட்டது.
பிப்ரவரி ஐந்தாம் தேதி ஜெ.தீபா தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறார். 24 தேதி புது கட்சியை ஆரம்பிக்கிறார்.
அது புதுக் கட்சியா அல்லது அத்தையின் கட்சியா என்பது இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் மக்கள் பார்வைக்கு வரும்.
ஆக டெல்லி தீபாவை டிக் அடித்து விட்டது என்பதே உண்மை.லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக