வியாழன், 2 பிப்ரவரி, 2017

குவைத் தடை :சிரியா, ஈராக்,பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகளுக்குத் குவைத் அரசு தடை உத்தரவு .


மின்னம்பலம் :அமெரிக்காவைத் தொடர்ந்து சிரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாட்டு அகதிகளுக்குத் தடைவிதித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று தீவிரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு உலக நாடுகள் அனைத்தும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தன. இந்நிலையில், அமெரிக்காவைத் தொடர்ந்து சிரியா, ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய ஐந்து முஸ்லிம் நாட்டு மக்களும் குவைத்துக்குள் நுழையத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட 5 நாடுகளிலிருந்து வருவோருக்கு விசா வழங்குவதை நிறுத்திவைத்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு ஒருபோதும் குவைத் மண்ணில் இடம் இல்லை என்றும் அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு, ஷியா மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு விபத்தில் 27 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்று இனி நிகழாமல் இருக்க தடை விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு சிரியா நாட்டு மக்களுக்கு மட்டும் தடை விதித்திருந்த குவைத் அரசு தற்போது மேலும் 4 நாடுகளுக்கு தடைவிதித்துள்ளது. இந்த அறிவிப்பு உலக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: