புதுடில்லி: ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து தான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என பில்கேட்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா வருகை :
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், 'மைக்ரோசாப்ட்' மென்பொருள் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலபதிருமான, பில்கேட்ஸ், இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியின், கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு, அவர் ஆதரவு தெரிவித்திருப்பதாக, செய்திகள் வெளியாகின. ஆனால், தான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, என, அவர் மறுத்துள்ளார்.
பணியாற்ற தயார்:
இது பற்றி அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை குறித்து, நான் எதுவுமே கூறவில்லை.
ஆனால், இந்தியா, 'டிஜிட்டல்'மயமாக மாறி வருகிறது என, தெரிவித்தேன். இந்தியாவின், ஆதார் அடையாள அட்டை சிறப்பான திட்டம். அமெரிக்காவின், புதிய அதிபராக, டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி, எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. யார் அதிபராக இருந்தாலும், அவருடன் இணைந்து பணியாற்ற தயார் இவ்வாறு அவர் கூறினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக