திங்கள், 14 நவம்பர், 2016

இயக்குனர் அமீர் : கபாலிக்கு கணக்கு ரஜினி காட்டுவாரா? கபாலி டிக்கெட் எப்படி விற்கப்பட்டது? மோடிக்கு வாழ்த்து சொன்னவரே கபாலி கணக்கை காட்டுவீரா ?

சென்னை: கபாலி பட வருமானம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா? என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8ந் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்து ரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்து அறிவிப்பு வெளிவந்த சிலமணி நேரங்களில் ட்விட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.நரேந்திர மோடி அவர்களுக்குப் பாராட்டுகள். புதிய இந்தியா பிறந்துள்ளது. ஜெய் ஹிந்த்' என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த ட்வீட்டுக்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இயக்குநர் அமீர், பிரதமர் மோடியின் அறிவிப்பு புரட்சி என ரஜினி எப்படி கூறுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கபாலி பட வருமானம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா? என்றும் கூறினார். கபாலி படம் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதா, மொத்த படத்தின் வருமானம் எவ்வளவு என்று ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா ? எனவும் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காத ரஜினி மோடியின் 500, 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்தற்கு வரவேற்பு அளித்தது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read more a//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: