வியாழன், 17 நவம்பர், 2016

முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து போலியானதா? அவரது கையெழுத்துதானா?

Image may contain: text ஆங்கிலம் என்றாலும் தமிழ் என்றாலும் நேர்கோட்டில் அமைந்திருப்பதுதான் முதல்வர் ஜெயலலிதா. கையெழுத்தின் தனித்துவம். ஆனால் இடைத்தேர்தலுக்கு வாக்கு கேட்டு அவர் பெயரில் வெளியான அறிக்கையில் இடம்பெற்றிருந்த கையெழுத்து தாறுமாறாக உள்ளது. நோய்வாய்ப்பட்டிருப்பதால், கையெழுத்தில் நடுக்கம் தெரிகிறதா என கிராஃபாலஜி (Graphology) எனப்படும் கையெழுத்து ஆய்வுகளில் வல்லுநர்களாக இருப்பவர்களிடம் கேட்டோம்.
“ஒருவருடைய கையெழுத்தில் நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால் அதில் உள்ள எழுத்துகளின் தன்மை மாறாது. உடல்நிலை காரணமாக நடுக்கம் இருந்தாலும் எழுத்துகளின் வடிவம் மாறாது. முதல்வருடைய கையெழுத்து வலதுபுறம் சாய்ந்தபடி ஒரே நேர்க்கோட்டில் சீராக அமைந்திருக்கும்.
ஆங்கிலத்தில் எழுத்துகளை சேர்த்து எழுதுவது போல தமிழ் கையெழுத்திலும் அதே பாணியை கடைப்பிடிப்பவர் முதல்வர் ஜெயலலிதா.
ஒவ்வொரு எழுத்துக்கும் இடையில் சீரான இடைவெளி இருக்கும். தற்போதைய கையெழுத்தில் அந்த இடைவெளி சீராக இல்லை. வழக்கமாக ஜெ.வில் உள்ள ஜ-வுக்கும் அடுத்துள்ள ய-வுக்கும் ஓர் இணைப்பு இருப்பதுபோலத் தோற்றமளிக்கும். அது இயல்பாக அமைந்திருக்கும். ஆனால் இந்த கையெழுத்தில் ஜ-வுடன் இணைக்க வேண்டும் என்பதற்காக ய-வுக்கு கீழே ஒரு கோடு தேவையில்லாமல் வலிந்து போடப்பட்டுள்ளது. அதுபோல அவரது கடைசி எழுத்தான தா-வில் உள்ள துணைக்கால் மிக அழகான ஓர் ஆர்ச் வடிவில் அமைந்திருக்கும். இந்த கையெழுத்தில் அது சம்பந்தமேயில்லாமல் முற்றிலும் வேறு வடிவத்தில் உள்ளது.. ஆங்கிலம் எழுதிப் பழகாத ஒருவர் முதல்வரின் தமிழ்க் கையெழுத்தைப் போட முயற்சித்திருக்க வேண்டும்” என்றனர்.
முதலில் கையெழுத்தின்றி வெளியான அறிக்கையில் பிறகு கையெழுத்துப் போட்டு சேர்த்து வெளியிட்டது யார் என்பது சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
மேலும் பல மோசடிகளை அம்பலப்படுத்துகிறது இன்று வெளியாகியுள்ள நக்கீரன் இதழ்.
முகநூல் பதிவு Govi Lenin

கருத்துகள் இல்லை: