செவ்வாய், 15 நவம்பர், 2016

கறுப்பு வெள்ளையாச்சு .. போக்குவரத்து கழக வங்கி கணக்கில் ரூ.100 கோடி பழைய நோட்டுகள்

சென்னை,: அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 9ம் தேதி முதல் நேற்று வரை, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக, 100 கோடி ரூபாய் வரை வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, போக்குவரத்து கழகத்தினர் கூறியதாவது: கடந்த, 8ம் தேதி நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் அறிவித்தார். அரசு பேருந்துகளில், 9ம் தேதிக்கு பின், 500, 1,000 ரூபாய் < வாங்கப்படவில்லை. ஆனால், 9 முதல், போக்குவரத்து கழகங்களின் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகணக்குகளில், 500, 1,000 ரூபாய் நோட்டுகளாகவே செலுத்தப்படுகின்றன. 100 கோடி.தமிழகம் முழுக்க உள்ள போக்குவரத்து கழகங்களில், தினமும், 20 கோடி ரூபாய் வரை வசூலாகிறது. அதற்கு ஈடாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகள், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்படுகிறது. கடந்த ஆறு நாட்களில், 100கோடி ரூபாய்க்கு மேல் வசூலான பணம், சத்தமில்லாமல் வெள்ளையாகி இருக்கிறது.


சென்னையில் மட்டும் சராசரியாக நாள் ஒன்றுக்கு, மூன்று கோடி ரூபாய் வரை வசூலாகிறது. அத்தொகைக்கு ஈடாக, அதிகாரிகள், அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி உள்ளனர்.மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து, 30 பணம் எண்ணும் இயந்திரங்கள், தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பழைய ரூபாய் நோட்டுகள் எண்ணப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். dinamalar.com

கருத்துகள் இல்லை: