மத்திய
அரசின் புதிய கல்விக்கொள்கையைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களைச்
சேர்ந்தவர்களும் கலந்துகொண்ட பேரணி தில்லியில் இன்று நடந்தது.மக்கள் விரோதக்
கல்விக்கொள்கை யெதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட
இப்பேரணியை, மண்ட அவுஸ் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்
பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தொடங்கிவைத்தார். தில்லி பல்கலைக்கழக,
கல்லூரி மாணவர் அமைப்பினர், கிறிஸ்துவ கல்வி நிலையங்களைச் சேர்ந்த
ஆசிரியர்கள், கல்வியாளர்கள், திராவிடர் கழகம், த.பெ.தி.க., சிபிஎம் எல்
மக்கள் விடுதலை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமானவர்கள்
பேரணியில் கலந்துகொண்டனர். கவிஞர் மாலதிமைத்ரி, மே 17 இயக்கத்தின்
ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த
செயற்பாட்டாளர்களும் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியின் நிறைவாக ஜந்தர்மந்தர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.சிபிஎம்
கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கனிமொழி, டி.ராஜா, விஜிலா
சத்யானந்த் உட்பட ஏழு நா.ம. உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக