திங்கள், 14 நவம்பர், 2016

அப்போலோவில் தீவிர சிகிச்சை பிரிவில் துரைமுருகன்! (அங்கிருந்தே அரவக்குறிச்சி தஞ்சாவூர் தேர்தல்... நாமளும் சொல்லுவோம்ல?)


சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவரும், திமுக மூத்தத் தலைவருமான துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா 50 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியும் ஒவ்வாமை காரணமாக கட்சியினர் யாரையும் சந்திக்காமல் வீட்டில் இருந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் சுகவீனத்தால் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கவில்லை. இந்நிலையில்தான், திமுக மூத்தத் தலைவர்களில் ஒருவரும் சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகனுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இன்று சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மயங்கி விழுந்தார். துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அங்கு திமுக-வினர் ஏராளமானோர் கூடியிருக்கின்றனர். ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளநிலையில், திமுக-வினரும் திரண்டதால் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் அப்பல்லோ மருத்துவனை வளாகம் முழுவதும் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக நிர்வாகி ஒருவர், “அவருக்கு ஏற்கெனவே தோள் வலி கடுமையாக இருந்தது. அதனால், திடீரென ஏற்பட்ட தலைச்சுற்றலைத் தொடர்ந்து மயங்கிவிட்டார். உடனே அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்துள்ளோம். தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்” என்று தெரிவித்தார். மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: