செவ்வாய், 15 நவம்பர், 2016

சமுக வலைதளங்களில் வெடிக்கும் மக்கள் கோபம் .. விரைவில் அவையும் தடைசெய்யப்படும்?

1. வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கை விரலில் 'மை' வைத்து கருப்பு பணத்தை பிடிக்க மோடி திட்டம், ஒருவரது சுயமரியாதையின் மீது கும்மி அடிப்பது என்பது இது தான், ஜாக்கிரதை மக்களே வங்கிக்கு வருபவர்கள் வாயில் ஸ்ட்ராங்க் டீ யை அல்ல விஷத்தை ஊற்ற திட்டமிடுகிறார் மோடி .. பொது துறை வங்கிகளில் ரூ.7 லட்சம் கோடி கடன் வாங்கி கட்டாத அந்த 500 பேர் முகத்துல மை பூசு வக்கில்லை, மக்களின் விரலை பிடிக்க வந்துட்டானுங்க.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலராம், ஒருவாரத்தில் அது கலர் மெஹ்ந்தியாக மாறிவிடும் என்று கொஞ்சம் நேரத்தில் யோக்கியர்கள் வருவார்கள் உஷார்.முத்து கிருஷ்ணன்

2.விவசாயிகள் --நெசவாளர்கள்--- மீனவர்கள்---பலவகை கிராமிய கைவினைஞர்கள் ----குறு சிறு குடிசை தொழில் செய்வோர்...தொழிலாளிகள் ----சிறு வணிகர்கள்..வணிகர்கள் ...என
எல்லாத்தரப்பு மக்களுக்கும் தொழில் செய்யமுடியாத அளவு பெருத்த பாதிப்புகளை உண்டாகி ...
மக்கள் கண்ணீரில் குளிக்கின்ற மோடி அரசு...
மோடி அரசு மக்களுக்கு எதிரான அரசு..
மக்கள் விழித்துக்கொண்டு எழுச்சி பெறவேண்டும்.

மோடி பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும்...
ஏழை எளிய சாமானிய நடுத்தர குடும்ப மக்களின்...உழைப்பு சேமிப்புகள் சுரண்டப்படும் ..மக்கள் பணம் சூறையாடப்படும்.
இந்திய பொருளாதாரம் சின்னாபின்னமாகிவிடும்..
மோடி உடனே பதவி விலக மக்கள் போராடவேண்டும்..
1975 ல் இந்திராவின் சர்வாதிகார காட்டுமிராண்டி ஆட்சியை எதிர்த்து..
ஜெயப்பிரகாஷ் நாராயண் மொரார்ஜி தேசாய் கிருபளானி..போன்ற மாபெரும் தலைவர்கள் ...வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்களை நடத்தினார்கள்....இந்திராவை வீட்டுக்கு அனுப்பினார்கள்...
அது போல இன்றும் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது...
மக்கள் தன்னெழுச்சி பெற்று இந்த அரசுக்கு எதிராக போராடுவதே உண்மையான தேச பக்தி ஆகும்..
இந்தியாவை மோடியிடம் இருந்து உடனே காப்பாற்றவேண்டும்..சென்னை தாமோதரன் .

கருத்துகள் இல்லை: