வியாழன், 1 டிசம்பர், 2016

சேலம் உருக்காலையை பாஜகாவின் கருப்பு பண முதலைகள் விழுங்க துடிக்கின்றன!


சேலம் இரும்பாலை தொடர்பாக மக்களவையில் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, அந்த நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய எஃகு துறை இணையமைச்சர் பதில் தெரிவித்தார். பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1970ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி அன்று சேலம் இரும்பு உருக்காலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த உருக்காலை வருவதற்கு மிகவும் முக்கிய காரணமானவராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்தான். அவரது பெருமுயற்சியால் தொடங்கப்பட்டு, உலகளவில் பிரபலமாகத் திகழும் இந்த உருக்காலை திட்டமிடப்பட்டே நஷ்டத்தில் இயங்கும் அளவுக்கு தள்ளப்பட்டு இன்று மத்திய, மாநில அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்படும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதை கண்டித்து, தமிழக எதிர்க்கட்சி தலைவர்களான கருணாநிதி, வைகோ, திருநாவுக்கரசர், முத்தரசன், நல்லகண்ணு, டி.ராஜா, ராமதாஸ், ஜி.கே.வாசன், ஸ்டாலின் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், நாடாளுமன்றத்தில், ‘இந்திய எஃகு நிறுவனத்துக்குச் சொந்தமான சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதா? அப்படியானால் அதற்கான காரணத்தையும், அதுகுறித்த விவரங்களையும் அளிக்க இயலுமா?’ என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, மத்திய எஃகு துறை இணையமைச்சர் விஷ்ணு தியோ சாய் பதில் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருக்கிறது. சேலம் இரும்பாலை இந்திய எஃகு நிறுவனத்துக்குச் சொந்தமான நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாகும். நவீனமயமாக்கல் மற்றும் விரிவுபடுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த ஆலையில் இந்திய எஃகு நிறுவனம் ரூ.2200 கோடி முதலீடு செய்த பிறகும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சேலம் இரும்பு ஆலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது” என்று அவர் பதில் தெரிவித்தார்.  மின்னம்பலம்,கம்

கருத்துகள் இல்லை: