சென்னை:
மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து
சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லக்கூடிய 48 விமானங்கள் தாமதமாகின.
தற்போது குளிர்காலம் என்பதால் டெல்லியில் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதேபோன்று அருகில் உள்ள மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்திலும் கடும் பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது.< சாலையில் எதிரே வருவோர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ரயில்கள் மிகவும் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. இதேபோல் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடா புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் 48 விமானங்கள் தாமதமாகியுள்ளன. டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக உள்நாட்டு விமானச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. tamiloneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக