வெள்ளி, 2 டிசம்பர், 2016

புதிய சிபிஅய் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா . சீனியர்களை ஓவர்டேக் செய்த குஜராத்தி.

பிரதமர் - குஜராத்தி 
RBI கவர்னர் - குஜராத்தி 
பிஜேபி லீடர்- குஜராத்தி 
அம்பானி - குஜராத்தி 

அதானி - குஜராத்தி 
குஜராத்தின் வளர்ச்சி....!!!!
CBI இயக்குனரும் குஜராத்தி

மத்திய உளவுத்துறையான சிபிஐ-க்கு புதிய இயக்குநராக ராகேஷ் அஸ்தானா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.நாட்டில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கொலை, கொள்ளை வழக்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உளவுத்துறை முகமையான சிபிஐ விசாரித்து வருகிறது. அரசியல் குறுக்கீடு மற்றும் யாருடைய தலையீடுக்கும் இடமளிக்காமல் மிகவும் சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாக இயங்கிவரும் சிபிஐ-க்கான புதிய இயக்குநராக ராகேஷ் அஸ்தானா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்று முன்னர் போலீஸ் துறையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய ராகேஷ் அஸ்தானா, இதுவரை சிபிஐ துணை இயக்குநராக பணியாற்றி வந்தார். தற்போது, சிபிஐ இயக்குநராக அனில்குமார் சின்ஹா பதவி வகித்து வருகிறார். விரைவில் இவரிடமிருந்து பணிப் பொறுப்புகளை ஏற்கும் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ-யின் புதிய இயக்குநராக விரைவில் பதவியேற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: