500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பலர் வங்கிகளில் கியூவில் நின்று தங்களது பணத்தை மாற்றினார்கள்.
ஆனால், இந்த கியூவில் எந்த மத்திய மந்திரியும் நிற்கவில்லை. இத்தனைக்கும் அவர்களிடமும் பல லட்ச ரூபாய் கையில் ரொக்கமாக இருந்தது. அந்த பணத்தை புதிய பணமாக மாற்ற அவர்கள் என்ன செய்தார்கள்? எப்படி அந்த பணத்தை மாற்றினார்கள்? என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது.
காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு மத்திய மந்திரிகள் சொத்து பட்டியலை சேகரித்தது. அந்த அமைப்பு கேட்ட தகவல்களை மத்திய மந்திரிகள் வழங்கி இருக்கிறார்கள். 2016 மார்ச் மாதம் அவர்களிடம் இருந்த சொத்து பட்டியலை கூறி இருக்கிறார்கள்.
அதன்படி மொத்தமுள்ள 76 மத்திய மந்திரிகளில் 40 பேரிடம் அதிக அளவில் ரொக்க பணம் கையிருப்பில் இருந்துள்ளது.
மந்திரிகளிலேயே மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் தான் அதிக பணம் கையில் இருந்துள்ளது. அவர், ரூ.65 லட்சத்து 29 ஆயிரத்து 400 ரொக்கம் கையில் இருந்தததாக கூறி இருக்கிறார். அதே போல் மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் யசோ நாயக் தன்னிடம் ரூ.22 லட்சம் இருந்ததாகவும், மத்திய இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் தன்னிடம் ரூ.10 லட்சம் இருந்ததாகவும் கூறி இருக்கிறார்கள். மொத்தம் 17 மந்திரிகள் தங்களிடம் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளனர். 23 பேர் ரூ.2 லட்சத்துக்கும் குறைவான பணம் கையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ரூ.89 ஆயிரத்து 700 இருந்ததாக தெரிவித்து இருக்கிறார். இவர்கள் எல்லோரும் தங்கள் பணத்தை எப்படி மாற்றினார்கள்? அல்லது டெபாசிட் செய்தார்கள்? என்பது மர்மமாகவே இருக்கிறது நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக