இயக்குனரும், நடிகருமான விசு தனுஷ்,
கஸ்தூரி ராஜாவின் மகன் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். இதுகுறித்த
செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்..
விசு வெளியிட்ட போட்டோ ஆதாரம்<
நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற
சர்ச்சை கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது. நடிகர் தனுஷ் எங்களுடைய
மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாள் தம்பதியினர் கூறி பரபரப்பை
ஏற்படுத்தினர். இதற்காக அவர்கள் நீதிமன்றத்துக்கே சென்றுள்ளனர்.
தனுஷ் எங்களுடைய மகன் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யவும் நாங்கள்
தயார் என கூறுகின்றனர் அந்த திடீர் பெற்றோர்கள். இந்நிலையில் பிரபல
நடிகரும் இயக்குனருமான விசு அளித்த பேட்டியில் தனுஷ் கிருஷ்ணமூர்த்தியின்
மகன் தான் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.
அவர் கூறுகையில், என்னிடம் 15 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்தூரி ராஜா வேலை செய்தார். இவரின் குடும்பம் ஏழ்மையில் இருந்தபோதிலிருந்து பார்த்து வருகிறேன். தனுஷை நான் சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன் என்று அடித்து கூறுகிறார். மேலும் அவர் தன்னுடன் தனுஷ் குடும்பம் இருந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அதில் சிறு வயது தனுஷும் உள்ளார். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக