திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில்
ஆத்தூரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கு சொந்த மான வெடிமருந்து
தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது.
இன்று காலை 7.30 மணிக்கு இரவு ஷிப்ட் முடிந்து 15 தொழிலாளர்கள்
தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தனர். காலை ஷிப்ட் ஊழியர்கள் 15 பேர்
தொழிற் சாலைக்குள் சென்றனர்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி மருந்து குடோன் வெடித்து
சிதறியது.இதில் தொழிற் சாலை உருக்குலைந் தது. வெடி சத்தம் கேட்டு
முருங்கப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டு பார்த்தனர். வெடி
மருந்து நெடியுடன் பல கி.மீ தூரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்தது.
அப்போது தொழிலாளர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து
ஆங்காங்கே சிதறி கிடந்தது. வெடி மருந்து வைக்கப்பட்டிருந்த 3 குடோன்களும்
தரைமட்டமானது.
வெடிமருந்து வெடித்து சிதறியதில் 15 தொழிலாளர் களும் பலியாகி விட்டனர். முருங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி, வாகர்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மூர்த்தி, செந்தில், குமார், ஆகிய 5 பேர் உடல் சிதறி பலியானது உறுதி செய்யப் பட்டது.
இரவு ஷிப்ட் முடிந்த 5 தொழிலாளர்கள் தங்கள் உடைகளை எடுப்பதற்காக தொழிற்சாலைக்குள் சென் றுள்ளனர். அவர்களும் இதில் சிக்கி கொண்டனர்.
எனவே தொழிற் சாலைக்குள் இருந்த 20 தொழிலாளர்களும் உடல் சிதறி பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. பலரது உடல் 2 கி.மீ சுற்று வட்டாரத்திற்குள் கை வேறு, கால் வேறு என துண்டு துண்டாகி சிதறி கிடந்தது.
பலரது முகம் உள்பட அனைத்து உறுப்புகளும் உருக்குலைந்து போனதால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
6 வாகனங்களில் தீய ணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 10 ஆம்புலன்ஸ் வேன்களும் வரவழைக்கப் பட்டது. சிதறி கிடந்த உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று காலை மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது.
திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துறையூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார், மற்றும் அதிகாரிகள் விரைந்தனர்.
எங்கும் மக்கள் கண்ணீர் ஓலத்துடன் உறவினர்கள் உடல்களை தேடி அலைந் தனர்.
தொழிற்சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாலும் ஒரு கிராமமே பாதிக்கப் பட்டதாலும் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அதிகாரிகளை கண்டித்து திருச்சி - சேலம் சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை அதிபர் வெற்றிவேல் மற்றும் தொழிற்சாலை மேலாளர் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். தினத்தந்தி.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக