டெல்லி
: நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500
ரூபாய் நோட்டுகள் செல்லும் என மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது. ஏற்கனவே
டிசம்பர் 15ஆம் தேதி வரை செல்லும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது
நாளை வரை மட்டுமே என மத்திய அரசு மாற்றம் செய்து அறிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதைத்தொடர்ந்து மின் கட்டணம் செலுத்த மற்றும் பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தது. டிசம்பர் 15ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும் என இந்நிலையில் பெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் இதேபோல் விமான டிக்கெட்டுகளும் பழைய 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தி நாளை வரை மட்டுமே பெற முடியும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் இன்னும் பணத் தட்டுப்பாடு தீராத நிலையில், பழைய நோட்டுகளுக்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வழங்கப்பட்ட அவகாசத்தையும் அரசு தடாலடியாக, அடாவடியாக குறைத்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. tamiloneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக