vinavu.com :லைக்கா மொபைல் குறித்து ஐரோப்பிய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தும் ஒரு கார்ப்பரேட் கிரைம் தில்லருக்கு உரியவை. இங்கிலாந்து உள்ளிட்டு இந்த ஊடகங்கள் அனைத்தும் சுபாஷ்கரண் நிறுவனத்தை சர்ச்சைக்குரிய லைக்கா மொபைல் என்றே அழைக்கின்றன.
பத்தாண்டுகளில் ஒரு பில்லியன் யூரோவை நிறுவன மதிப்பாக கொண்டிருப்பது எப்படிப் பார்த்தாலும் சாத்தியமில்லை. அது நிச்சயம் இருண்ட பக்கத்தைக் கொண்டிருக்கும்.
நவம்பர் 2015-ல் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவிடும் பொருட்டு 6.6 மில்லியன் பவுண்ட் நிதியை – கிட்டத்தட்ட 56 கோடி இந்திய ரூபாயை அளிப்பதாக அறிவிக்கிறார். கன்சர்வ்வேட்டிவ் கட்சிக்கு இலங்கை மீதான இந்த திடீர் பாசத்தின் பின்னணி என்ன? இந்த அறிவிப்புக்கு முந்தைய வருடத்தில் அக்கட்சிக்கு அங்கே வாழும் தொழிலதிபரான சுபாஷ்கரன் அல்லிராஜா ஒரு மில்லியன் பவுண்டை அதாவது 8.5 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருக்கிறார். அவர் பிறந்து வாழ்ந்த வடக்கு இலங்கைக்குத்தான் இங்கிலாந்து உதவி செய்வதாக அறிவித்தது. காமரூன் கட்சிக்கு அவர் கொடுத்த நன்கொடையும் இங்கிலாந்து அரசு இலங்கைக்கு அளித்த உதவியும் இப்படி பிரச்சினைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுவதற்கு காரணம், சுபாஷ்கரன் நிறுவனத்தின் வரி ஏய்ப்பும், சட்ட விரோத வருமானமும் ஆகும். இலங்கை அரசின் போருக்கு பிறகு 2009-ம் ஆண்டில் பிரிட்டன் அரசு மனிதாபிமான உதவிகளை செய்வதாக அறிவித்தது. லைக்கா மொபைல் நன்கொடை விவகாரத்திற்கு பிறகு இந்த உதவி சூடு பிடித்தது ஏன்?
2011-ம் ஆண்டில் டோரிக் கட்சி (கன்சர்வேட்டிவ் கட்சி) லைக்கா மொபைலிடமிருந்து பெற்ற தொகை 1,76,000 பவுண்ட் – கிட்டத்தட்ட ஒன்றரை கோடி இந்திய ரூபாய். இதே நன்கொடை 2012-ம் ஆண்டில் இரண்டு கோடியே 13 லட்சம் இந்திய ரூபாயாகவும் உயர்ந்தது. இதே ஆண்டில் இங்கிலாந்து அரசு இலங்கைக்கு அளித்திருக்கும் தொகை 47 கோடி இந்திய ரூபாயாக உயர்ந்தது. 2013-ம் ஆண்டு வரை இங்கிலாந்தின் உதவி 87 கோடி இந்திய ரூபாயை தொட்டது. இதே உதவி ஈராக்கைப் பொருத்த வரை மூன்றில் ஒரு பங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஈராக்கின் அதிபர்கள் யாரும் இலண்டனில் தொழில் செய்து டோரிக் கட்சிக்கு நன்கொடை கொடுக்குமளவு இல்லை.
நவம்பர் 2013-ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த காமரூன், 1948 இலங்கை சுதந்திரத்திற்கு பிறகு வடக்கு இலங்கைக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவராக பேசப்பட்டார். அப்போது இலங்கை அரசு சுயேச்சையான நீதி விசாரணை நடத்தி தமிழ் மக்களுக்கு மீதான போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றார். அப்போதே கண்ணிவெடி நீக்கத்திற்காக முல்லைத் தீவு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு 18 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார். அவரது அறிவிப்புக்களைப் பார்த்து ராஜபக்சே பயந்து நடுங்குவதாகவும், ஐ.நா சபை அவரைப் பிடித்து கூண்டிலேற்றி தண்டிக்கப் போவதாகவம் ஈழ ஆர்வலர்கள் இங்கேயும், புலத்திலும் பேசினர்.
மார்ச் 2014-ல் பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹூகோ ஸ்வைர், இலங்கையில் கைது செய்யப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் குறித்து கவலை தெரிவித்தார். அதற்கு 13 நாட்கள் கழித்து காமரூன் இலங்கைக்கு 56 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவிக்கிறார். இதே காலத்தில்தான் டோரிக் கட்சியினர் லைக்கா மொபைல் நிறுவனத்திடமிருந்து எட்டரை கோடி ரூபாயையும், சுபாஷ்கரனிடமிருந்து தனிப்பட்ட முறையில் 85 இலட்சம் ரூபாயையும் பெறுகின்றனர். கம்பெனி சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் இரு நன்கொடைகள்!
சரி, இலங்கைக்கு உதவி அளிப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்ததே அதில் இதுவரை எவ்வளவு பணம் இலங்கையில் எங்கே என்னவாக சென்றடைந்திருக்கிறது என்று மெயில் பத்திரிக்கை இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேட்ட போது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டார்கள். ஏன் பதிலளிக்கவில்லை? மனிதாபிமானத்திற்கு கணக்கு கேட்காதீர்கள் என்றா? இல்லை அந்த அறிவிப்பில்லாம் வந்த நன்கொடைகளுக்கான வெறும் மொய்யா?
லைக்கா மொபைல் நிறுவனம் 2011-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 18 கோடி ரூபாயை டோரி கட்சிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இதில் நான்கில் ஒரு பங்கு நன்கொடைப் பணம் 2016-ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது எந்திரனின் 2.0 பாகத்தின் முதல் பார்வை நடந்த காலத்தில்.
போரிஸ் ஜான்சன் என்பவர் 2012-ம் ஆண்டில் இலண்டன் மேயராக போட்டியிட்ட போது லைக்கா மொபைல் தனது கால் சென்டரை அவருக்கு இலவசமாக பயன்படுத்த அளித்தது. இப்படி உள்ளூர் கவுன்சிலர், மேயர் முதல் நாடாளும் பிரதமர் வரை லைக்காவின் ‘விருந்தோம்பல்’ கொடிகட்டிப் பறந்திருக்கிறது.
BuzzFeed எனும் செய்தி ஊடகத்தின் வீடியோ பதிவு விசாரணைப்படி லைக்கா மொபைல் நிறுவனம் மூன்று ரொக்க கூரியர்களின் மூலம் பை நிறைய பல்லாயிரம் மதிப்பிலான பணத்தை அன்றாடம் கடத்தியிருக்கிறது.
இதே காலத்தில் அதாவது ஜூன், 19, 2016 இல் லைக்கா மொபைலின் 19 ஊழியர்கள் பிரான்சில் ஒரு சோதனையின் போது கைது செய்யப்பட்டனர். வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணம் சேர்ப்பிற்காக இந்த கைது நடந்தது. பாரிசில் கைது செய்யப்பட்ட 19 பேர்களில் லைக்கா மொபைல் இயக்குநர் அலைன் ஜோகிமெக், அங்கே உள்ள யூத சமூகத்தின் முன்னணியான தலைவரும் கூட. அங்கே இஸ்ரேலுக்கு ஆதவாக ஒரு சேவை நிறுவனத்தை B’nai B’rith நடத்தி வருகிறார். இந்த புகாரில் லைக்காவின் மோசடி 13 மில்லியன் பவுண்ட் அதாவது 111 கோடி ரூபாயாகும். இந்தியாவில் சங்க பரிவாரங்களுக்கு பிரியத்திற்குரிய இஸ்ரேல் ஈழத்தமிழ் தொழிலதிபரான சுபாஷ்கரணின் கிச்சன் கேபினெட்டிலும் இருக்கிறது.
இதைத் தொடர்ந்து லைக்கா மொபைலின் பாரிஸ் தலைமையகத்தில் நடந்த சோதனையில் பண மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கூடவே நகரின் பல்வேறு குடியிருப்பு மற்றும் வணிக முகவரிகளில் சோதனை நடத்தப்பட்டு பண மூட்டைகள் பிடிபட்டன. லைக்கா மொபைலின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது.
இந்த பணமூட்டைகளெல்லாம் வழக்கமான வங்கி இருப்புக்கு கொண்டு செல்லப்பட்டது என்று லைக்கா மொபைல் கூறியது. ஆனால் Buzzfeed செய்தி தளத்தின் விசாரணை உதவிப்படி பிரெஞ்சு அதிகாரிகள் மூலம் சட்டவிரோத பணம் பல்வேறு நிழலான நிறுவனங்களிடமிருந்து பிரான்சின் லைக்கா கம்பெனி கணக்கிற்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை குற்ற நடவடிக்கைகள் மூலம் திரட்டப்பட்ட பணமாகும். Buzzfeed புலனாய்வின் படி 19-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல பத்து மில்லியன் யூரோக்களை லைக்கா வங்கிக் கணக்கில் கொட்டியிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் சுபாஷ்கரணது முன்னால் அம்பானி கூட போட்டி போட முடியாது.
லைக்கா இப்படி திருட்டுத்தனம் செய்யும் போதுதான் அதற்கு ஆதரவளித்த டேவிட் காமரூன் சட்டவிரோத மற்றும் குற்ற நடவடிக்கை பணத்தை முறியடிப்போம் என்று உலகளாவிய ஊழல் எதிர்ப்பு மாநாடு ஒன்றில் முழங்கினார்.
Buzzfeed புலனாய்வின் படி லைக்கா மொபைல் பிரிபெய்டு அட்டைகளை கள்ள சந்தையில் விற்று அந்த பணத்தை பினாமி நிறுவனங்களின் ரசீதுகளாக மாற்றி பல சட்ட விரோத ரொக்க பரிவர்த்தனைகளை செய்துள்ளது. Buzzfeed தகவல்களின் படி லைக்கா மொபைல் நிறுவனத்தின் சொந்த ஆடிட்டர்களே கடந்த இரண்டு வருடங்களாக சுமார் 646 மில்லியன் பவுண்ட் அதாவது 55 ஆயிரம் கோடி ரூபாய் லைக்கா மொபைல் கணக்கில் வராமல் பத்து வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். லைக்காவினுடைய வர்த்தக வலைப்பின்னல் சிக்கலானதும், குழப்பமானதும் கூட என்கிறார்கள்.
உலகின் மிகப்பெரிய விர்ச்சுவல் மொபைல் நிறுவனமான லைக்கா, சர்வதேச வான்வெளி அலைக்கற்றைகளை மொத்தமாக வாங்கி இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒப்பீட்டளவில் மலிவான பிரீபெய்டு கார்டுகளாக விற்கிறது. அதனுடைய வருடாந்திர வர்த்தகம் உலக அளவில் 1.5 பில்லியன் பவுண்டாகும் – ஒரு இலட்சத்தி 28 ஆயிரம் கோடி ரூபாய். ஐக்கிய அரசனா பிரிட்டனில் சட்டபூர்வமான கார்ப்பரேட் வரியை தவிர்ப்பதற்காக அதனுடைய பணத்தை வரியில்லா சொர்க்கமான போர்ச்சுகீஸ் அருகில் இருக்கும் மதீரா தீவுகளுக்கு கொண்டு செல்கிறது.
இடையில் பிரான்சில் கைது செய்யப்பட்ட 19 பேரில் 9 பேர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அதிதல் எட்டு பேருக்கு பிணை கிடைத்து, ஒருவர் நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டார். லைக்கா மொபைல் சோதனையில் 1,30,000 யூரோ ரொக்கமாகவும், 8,50,000 யூரோ வங்கிக் கணக்கிலும் கைப்பற்றப்பட்டது. இது போக வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணம் பல மில்லியன் யூரோ இருக்கும் என இப்பத்திரிகை தெரிவிக்கிறது.
பத்தாண்டுகளில் ஒரு பில்லியன் யூரோவை நிறுவன மதிப்பாக கொண்டிருப்பது எப்படிப் பார்த்தாலும் சாத்தியமில்லை. அது நிச்சயம் இருண்ட பக்கத்தைக் கொண்டிருக்கும்.
நவம்பர் 2015-ல் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவிடும் பொருட்டு 6.6 மில்லியன் பவுண்ட் நிதியை – கிட்டத்தட்ட 56 கோடி இந்திய ரூபாயை அளிப்பதாக அறிவிக்கிறார். கன்சர்வ்வேட்டிவ் கட்சிக்கு இலங்கை மீதான இந்த திடீர் பாசத்தின் பின்னணி என்ன? இந்த அறிவிப்புக்கு முந்தைய வருடத்தில் அக்கட்சிக்கு அங்கே வாழும் தொழிலதிபரான சுபாஷ்கரன் அல்லிராஜா ஒரு மில்லியன் பவுண்டை அதாவது 8.5 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருக்கிறார். அவர் பிறந்து வாழ்ந்த வடக்கு இலங்கைக்குத்தான் இங்கிலாந்து உதவி செய்வதாக அறிவித்தது. காமரூன் கட்சிக்கு அவர் கொடுத்த நன்கொடையும் இங்கிலாந்து அரசு இலங்கைக்கு அளித்த உதவியும் இப்படி பிரச்சினைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுவதற்கு காரணம், சுபாஷ்கரன் நிறுவனத்தின் வரி ஏய்ப்பும், சட்ட விரோத வருமானமும் ஆகும். இலங்கை அரசின் போருக்கு பிறகு 2009-ம் ஆண்டில் பிரிட்டன் அரசு மனிதாபிமான உதவிகளை செய்வதாக அறிவித்தது. லைக்கா மொபைல் நன்கொடை விவகாரத்திற்கு பிறகு இந்த உதவி சூடு பிடித்தது ஏன்?
2011-ம் ஆண்டில் டோரிக் கட்சி (கன்சர்வேட்டிவ் கட்சி) லைக்கா மொபைலிடமிருந்து பெற்ற தொகை 1,76,000 பவுண்ட் – கிட்டத்தட்ட ஒன்றரை கோடி இந்திய ரூபாய். இதே நன்கொடை 2012-ம் ஆண்டில் இரண்டு கோடியே 13 லட்சம் இந்திய ரூபாயாகவும் உயர்ந்தது. இதே ஆண்டில் இங்கிலாந்து அரசு இலங்கைக்கு அளித்திருக்கும் தொகை 47 கோடி இந்திய ரூபாயாக உயர்ந்தது. 2013-ம் ஆண்டு வரை இங்கிலாந்தின் உதவி 87 கோடி இந்திய ரூபாயை தொட்டது. இதே உதவி ஈராக்கைப் பொருத்த வரை மூன்றில் ஒரு பங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஈராக்கின் அதிபர்கள் யாரும் இலண்டனில் தொழில் செய்து டோரிக் கட்சிக்கு நன்கொடை கொடுக்குமளவு இல்லை.
நவம்பர் 2013-ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த காமரூன், 1948 இலங்கை சுதந்திரத்திற்கு பிறகு வடக்கு இலங்கைக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவராக பேசப்பட்டார். அப்போது இலங்கை அரசு சுயேச்சையான நீதி விசாரணை நடத்தி தமிழ் மக்களுக்கு மீதான போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றார். அப்போதே கண்ணிவெடி நீக்கத்திற்காக முல்லைத் தீவு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு 18 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார். அவரது அறிவிப்புக்களைப் பார்த்து ராஜபக்சே பயந்து நடுங்குவதாகவும், ஐ.நா சபை அவரைப் பிடித்து கூண்டிலேற்றி தண்டிக்கப் போவதாகவம் ஈழ ஆர்வலர்கள் இங்கேயும், புலத்திலும் பேசினர்.
மார்ச் 2014-ல் பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹூகோ ஸ்வைர், இலங்கையில் கைது செய்யப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் குறித்து கவலை தெரிவித்தார். அதற்கு 13 நாட்கள் கழித்து காமரூன் இலங்கைக்கு 56 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவிக்கிறார். இதே காலத்தில்தான் டோரிக் கட்சியினர் லைக்கா மொபைல் நிறுவனத்திடமிருந்து எட்டரை கோடி ரூபாயையும், சுபாஷ்கரனிடமிருந்து தனிப்பட்ட முறையில் 85 இலட்சம் ரூபாயையும் பெறுகின்றனர். கம்பெனி சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் இரு நன்கொடைகள்!
இதற்கு பிறகு 2015
இலங்கை பொதுத் தேர்தலுக்கு முந்தை இரண்டு மாதத்தில் காமரூன் இலங்கையின்
அதிபர் மைத்ரிபால் சிரிசேனாவை சந்தித்து தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய
நிலம் குறித்து வாக்குறுதியைப் பெறுகிறார். இதற்கு ஆறு நாட்கள் கழித்து
டோரிகள் லைக்கா மொபைலிடமிருந்து 3 கோடியே 17 இலட்சம் ரூபாயை பெறுகின்றனர்.
மார்ச் 2015-ல் சுபாஷ்கரன் டோரிகளின் கட்சி நிதி சேகரிப்பு “பிளாக்
அண்ட் ஒயிட்” நிகழ்வில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் டோரிக் கட்சி
தலைவர்களோடு இரவு விருந்தில் சிக்கன் சாப்பிடுவது, காலையில் ஓடுவது, என்று
தலைக்கேற்ற முறையில் நன்கொடை வைத்திருக்கிறார்கள். அதில் 1990-களில்
நாடாண்ட மார்க்கரெட் தாட்சரின் வெண்கலச் சிலையை ஒரு கோடியே என்பது இலட்ச
ரூபாய் கொடுத்து வாங்குவோருக்கு அனைவரும் கைதட்டி ஆரவரிப்பார்கள்.
சுபாஷ்கரனும் அந்த ஆரவாரத்தைப் பெறுகிறார்.சரி, இலங்கைக்கு உதவி அளிப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்ததே அதில் இதுவரை எவ்வளவு பணம் இலங்கையில் எங்கே என்னவாக சென்றடைந்திருக்கிறது என்று மெயில் பத்திரிக்கை இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேட்ட போது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டார்கள். ஏன் பதிலளிக்கவில்லை? மனிதாபிமானத்திற்கு கணக்கு கேட்காதீர்கள் என்றா? இல்லை அந்த அறிவிப்பில்லாம் வந்த நன்கொடைகளுக்கான வெறும் மொய்யா?
லைக்கா மொபைல் நிறுவனம் 2011-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 18 கோடி ரூபாயை டோரி கட்சிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இதில் நான்கில் ஒரு பங்கு நன்கொடைப் பணம் 2016-ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது எந்திரனின் 2.0 பாகத்தின் முதல் பார்வை நடந்த காலத்தில்.
போரிஸ் ஜான்சன் என்பவர் 2012-ம் ஆண்டில் இலண்டன் மேயராக போட்டியிட்ட போது லைக்கா மொபைல் தனது கால் சென்டரை அவருக்கு இலவசமாக பயன்படுத்த அளித்தது. இப்படி உள்ளூர் கவுன்சிலர், மேயர் முதல் நாடாளும் பிரதமர் வரை லைக்காவின் ‘விருந்தோம்பல்’ கொடிகட்டிப் பறந்திருக்கிறது.
-
லைக்கா மொபைல் கம்பெனியின் நிழல் வருமானம்
BuzzFeed எனும் செய்தி ஊடகத்தின் வீடியோ பதிவு விசாரணைப்படி லைக்கா மொபைல் நிறுவனம் மூன்று ரொக்க கூரியர்களின் மூலம் பை நிறைய பல்லாயிரம் மதிப்பிலான பணத்தை அன்றாடம் கடத்தியிருக்கிறது.
இதே காலத்தில் அதாவது ஜூன், 19, 2016 இல் லைக்கா மொபைலின் 19 ஊழியர்கள் பிரான்சில் ஒரு சோதனையின் போது கைது செய்யப்பட்டனர். வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணம் சேர்ப்பிற்காக இந்த கைது நடந்தது. பாரிசில் கைது செய்யப்பட்ட 19 பேர்களில் லைக்கா மொபைல் இயக்குநர் அலைன் ஜோகிமெக், அங்கே உள்ள யூத சமூகத்தின் முன்னணியான தலைவரும் கூட. அங்கே இஸ்ரேலுக்கு ஆதவாக ஒரு சேவை நிறுவனத்தை B’nai B’rith நடத்தி வருகிறார். இந்த புகாரில் லைக்காவின் மோசடி 13 மில்லியன் பவுண்ட் அதாவது 111 கோடி ரூபாயாகும். இந்தியாவில் சங்க பரிவாரங்களுக்கு பிரியத்திற்குரிய இஸ்ரேல் ஈழத்தமிழ் தொழிலதிபரான சுபாஷ்கரணின் கிச்சன் கேபினெட்டிலும் இருக்கிறது.
இதைத் தொடர்ந்து லைக்கா மொபைலின் பாரிஸ் தலைமையகத்தில் நடந்த சோதனையில் பண மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கூடவே நகரின் பல்வேறு குடியிருப்பு மற்றும் வணிக முகவரிகளில் சோதனை நடத்தப்பட்டு பண மூட்டைகள் பிடிபட்டன. லைக்கா மொபைலின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது.
இந்த பணமூட்டைகளெல்லாம் வழக்கமான வங்கி இருப்புக்கு கொண்டு செல்லப்பட்டது என்று லைக்கா மொபைல் கூறியது. ஆனால் Buzzfeed செய்தி தளத்தின் விசாரணை உதவிப்படி பிரெஞ்சு அதிகாரிகள் மூலம் சட்டவிரோத பணம் பல்வேறு நிழலான நிறுவனங்களிடமிருந்து பிரான்சின் லைக்கா கம்பெனி கணக்கிற்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை குற்ற நடவடிக்கைகள் மூலம் திரட்டப்பட்ட பணமாகும். Buzzfeed புலனாய்வின் படி 19-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல பத்து மில்லியன் யூரோக்களை லைக்கா வங்கிக் கணக்கில் கொட்டியிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் சுபாஷ்கரணது முன்னால் அம்பானி கூட போட்டி போட முடியாது.
லைக்கா இப்படி திருட்டுத்தனம் செய்யும் போதுதான் அதற்கு ஆதரவளித்த டேவிட் காமரூன் சட்டவிரோத மற்றும் குற்ற நடவடிக்கை பணத்தை முறியடிப்போம் என்று உலகளாவிய ஊழல் எதிர்ப்பு மாநாடு ஒன்றில் முழங்கினார்.
Buzzfeed புலனாய்வின் படி லைக்கா மொபைல் பிரிபெய்டு அட்டைகளை கள்ள சந்தையில் விற்று அந்த பணத்தை பினாமி நிறுவனங்களின் ரசீதுகளாக மாற்றி பல சட்ட விரோத ரொக்க பரிவர்த்தனைகளை செய்துள்ளது. Buzzfeed தகவல்களின் படி லைக்கா மொபைல் நிறுவனத்தின் சொந்த ஆடிட்டர்களே கடந்த இரண்டு வருடங்களாக சுமார் 646 மில்லியன் பவுண்ட் அதாவது 55 ஆயிரம் கோடி ரூபாய் லைக்கா மொபைல் கணக்கில் வராமல் பத்து வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். லைக்காவினுடைய வர்த்தக வலைப்பின்னல் சிக்கலானதும், குழப்பமானதும் கூட என்கிறார்கள்.
உலகின் மிகப்பெரிய விர்ச்சுவல் மொபைல் நிறுவனமான லைக்கா, சர்வதேச வான்வெளி அலைக்கற்றைகளை மொத்தமாக வாங்கி இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒப்பீட்டளவில் மலிவான பிரீபெய்டு கார்டுகளாக விற்கிறது. அதனுடைய வருடாந்திர வர்த்தகம் உலக அளவில் 1.5 பில்லியன் பவுண்டாகும் – ஒரு இலட்சத்தி 28 ஆயிரம் கோடி ரூபாய். ஐக்கிய அரசனா பிரிட்டனில் சட்டபூர்வமான கார்ப்பரேட் வரியை தவிர்ப்பதற்காக அதனுடைய பணத்தை வரியில்லா சொர்க்கமான போர்ச்சுகீஸ் அருகில் இருக்கும் மதீரா தீவுகளுக்கு கொண்டு செல்கிறது.
Buzzfeed Labour MP Tom Blenkinsop told the Huffington Post UK: “The Prime Minister knows his party has received over £420k from a company closely associated with the Sri Lankan regime. He was obviously so concerned that his own MPs were recently prevented from visiting there.விசாரணையைத் தொடர்ந்து இங்கிலாந்தின் லேபர் கட்சி எம்.பியான டாம் பிளென்கின்சாப் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் லைக்கா மொபைலிடம் வாங்கிய நன்கொடைகளை முடக்க வேண்டும், அந்த நிறுவனத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரினாலும் கன்சர்வேடிவ் கட்சி அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
The MP, who has written directly to the Prime Minister, added: “So in the interests of transparency I want to know if the Prime Minister is going to investigate why his party has received over £420k from this company so closely associated with the Sri Lankan government.”
இடையில் பிரான்சில் கைது செய்யப்பட்ட 19 பேரில் 9 பேர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அதிதல் எட்டு பேருக்கு பிணை கிடைத்து, ஒருவர் நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டார். லைக்கா மொபைல் சோதனையில் 1,30,000 யூரோ ரொக்கமாகவும், 8,50,000 யூரோ வங்கிக் கணக்கிலும் கைப்பற்றப்பட்டது. இது போக வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணம் பல மில்லியன் யூரோ இருக்கும் என இப்பத்திரிகை தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக