புதன், 30 நவம்பர், 2016

நாடா :சென்னை,மற்றும் 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை

நடா புயல் எதிரொலி: சென்னை உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறைநடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை அளிப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை: சென்னை அருகே மையம் கொண்டுள்ள ‘நடா’ புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது. இந்தப் புயல் காரணமாக சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நடா புயல் உருவாகியுள்ளதால் நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடா புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் என தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை அளிப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூர் என இரண்டு தாலுகாக்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அளித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் விடுமுறை அளிப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

நாளை மறுநாள் (2-ந்தேதி) அதிகாலை சென்னைக்கும், வேதாரண்யத்திற்கும் இடையே கடலூர் அருகே நடா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: