செவ்வாய், 29 நவம்பர், 2016

என்னாச்சு மோடி உங்களுக்கு? ​பயமா இருக்கு எங்களுக்கு...! சோம்பு சினேகன் கவிதை

அம்பானிக்கு சொம்படிச்சீங்க
​அதானிக்கும் சொம்படிச்சீங்க
டாடா, டயருக்கு கூட பம்படிச்சீங்க
மக்களுக்கு மட்டும் ஏன் ஆப்படிசீங்க?
​​
​என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு...!

நாடு நாடா சுத்துறீங்க
மக்களை ரோட்டுல நிறுத்துறீங்க
வேளைக்கொரு ஆடை உடுத்துறீங்க
நாங்க வேலைக்கு போகாம படுத்துறீங்க...!

என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு...!

​மேட்டை வெட்டி போடாம
பள்ளத்தையெல்லாம் மூடாம
பள்ளத்தை மேலும் வெட்டி வெட்டி
சவக்குழிய ஏன்யா தோண்டறீங்க?



என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு...!

வெறுப்ப உள்ள வெச்சிக்கிட்டு - எங்க
செருப்பு தேய நடக்குறோமே -நிஜ
கருப்பு பணத்தை எடுக்காம - இப்படி
பொறுப்பில்லாம இருக்கீங்களே?

என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு...!

90 சதவீத ஆதரவு
உங்களுக்கிருப்பதா சொல்றீங்களே
தில்லிருந்தா நாளைக்கே
தேர்தலை வெச்சி நில்லுங்களேன்...!

என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு...!  முகநூல் பதிவு A.ஷங்கர்

கருத்துகள் இல்லை: