வியாழன், 1 டிசம்பர், 2016

மக்கள் கவிஞர் இன்குலாப் காலமானார்


தமிழக உழைக்கும் மக்களின் மகத்தான கவிஞர் இன்குலாப் இன்று (1.12.2016) இயற்கையோடு கலந்தார். உடலநலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டிருந்த அவர் காலமானார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்குலாப்பின் இயற்பெயர் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது. மக்கள் கவிஞர் இன்குலாப்பை போலவே அவருடைய கவிதைகளும் உண்மையானவை, எளிமையானவை, சமுதாயத்திற்கானவை. கால காலங்களை கடந்து நிற்பவை. முற்போக்கு கவிஞரான இன்குலாப் கவிஞர் மட்டுமல்ல மிகச்சிறந்த நாடக ஆசிரியர். மனுசங்கடா நாங்க மனுசங்கடா என்ற புகழ்பெற்ற மேடைப்பாடலை எழுதியவர். சூரியனை சுமப்பவர்கள், துடி ,மீட்சி போன்ற நூல்களை எழுதியுள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றவர் இன்குலாப். பல்வேறு விருதுகளை கொள்கை ரீதியாக ஏற்க மறுத்த மக்கள் கவிஞருக்கு நக்கீரனின் வீர வணக்கம். மக்கள் கவிஞர் இன்குலாப் 2015ஆம் ஆண்டு மூத்த பத்திரிக்கையாளர் சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை விருது பெற்று விழாவில் பேசிய வீடியோ.

கருத்துகள் இல்லை: