வெள்ளி, 2 டிசம்பர், 2016

மே.வங்கத்தில் இராணுவம் குவிக்கப்பட்டது ஏன்? உள்நாட்டு கலவரம் உண்டாக்க மத்தியரசு முயல்கிறதா? மம்தா பானர்ஜி கேள்வி .

mamata-banerjeetimestamil.com :  பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. மோடியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பேரணி நடத்தினார். மோடியை அரசியலிலிருந்து நீக்கியே தீருவேன் என ஆவேசத்துடன் பேட்டியளித்தார்.
இந்நிலையில் வங்காளத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் இராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
“நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்… பொருளாதார எமர்ஜென்ஸிக்கு அப்பால் ஜனநாயகத்தின் மீதும் கூட்டாட்சி அமைப்பின் மீதும் தாக்குதல் நடத்துவதன் மூலம், அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுகிறதா?” என தெரிவித்தார் மமதா.

“இன்று வங்காளம், நாளை பிகார், உ.பி.யாக இருக்கலாம். இது அவசரநிலையைவிட மோசமான நிலைமை. உள்நாட்டிலே ரத்தம் சிந்தும் போர் மூள வைக்கும் திட்டம் உள்ளதா?” எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
சுங்கச் சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை திரும்பப் பெறும்வரை தலைமைச் செயலகத்தை விட்டு செல்லப் போவதில்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இராணுவம் வெளியிட்ட குறிப்பில், இது வழக்கமான சோதனை முறைதான் என தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: