புதன், 30 நவம்பர், 2016

12 சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவன் ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவன்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த பப்பு என்ற நபர் கடந்த 2004ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்த அவர், திருந்தி வாழலாம் என்று எதிர்பார்த்த நிலையில், மற்றொரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு நிதின் திவாரி நிருபர்களிடம் கூறியதாவது:- நவம்பர் 26-ம் தேதி 12 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்து ஜான்பூர் மாவட்டம் கேராகட் பகுதியில் உள்ள புதரில் வீசியது தொடர்பாக பப்பு என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்குமுன் 10 ஆண்டு தண்டனை பெற்ற வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி நேரில் ஆஜராகி சாட்சி அளித்ததால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை சாட்சி சொல்ல வந்துவிடக்கூடாது என்பதற்காக சிறுமியை கற்பழித்துவிட்டு கொலை செய்துள்ளார்.


அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது ஸ்கூட்டியில் நீண்ட தூரம் அழைத்துச்சென்று கற்பழித்துவிட்டு, கழுத்தை அறுத்து கொன்று உடலை புதரில் வீசியுள்ளார்.

தனது மகளை பப்பு கடத்திச் சென்றுவிட்டதாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, வாரணாசி ஜெய்த்புரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பப்புவை நேற்று கைது செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: