வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஜாதி பக்தியை மறைக்கக் தேசபக்தி கோஷம் ... போலி தேசபக்தர்களின் ஒபினிங் சாங்.

மத்திய அரசின் செயல்பாடுகள் தொல்பொருள்துறையின் செயல்பாட்டினை ஒத்து இருக்கிறது.
வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் வசிப்போர் தங்கள் தேசியக் கொடியை தங்களின் உள்ளாடைகளிலும் செருப்புகளிலும் கூட அணிந்திருந்தாலும் தேசபக்தி என்று வரும் போது நம்மை விட அதிக அளவு கொண்டவராகவே அதை வெளிப்படுத்துகின்றனர்.ஏனெனில் அங்கே அவர்களுக்குள் இங்கே இருப்பது போல பள்ளன், பறையன், வன்னியன், முதலி, ரெட்டி, நாயுடு,பார்ப்பனன் என்ற சாதியோ வர்ண அமைப்போ கிடையாது.ஆனால் இங்கே மனிதரைக் கூறு போட்டு வைக்கின்ற அத்தனை அம்சங்களையும் வைத்துக் கொண்டு போலியாக தேசபக்தியை ஊட்டி தேச ஒற்றுமையைக் கட்டமைக்க நினைக்கின்றனர்.
சாதீய,பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களையும் நடவடிக்கைகளை சீரிய முறையில் தீவிரமாக செயல்படுத்தாமல் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு வளர்க்கின்ற தேசபக்தி தற்காலிகமாகவே வெற்றி பெறும்,அது நிலைத்திருக்காது.


தொன்மை வாய்ந்த பழங்காலக் கட்டிடங்களை ஆங்காங்கே டச்சப் வேலைகள் செய்து அவற்றின் ஆயுளை நீட்டிக்க தொல்பொருள் துறையினர் அவ்வப்போது பணிகளை மேற்கொள்வர்.அதைப் போலத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகளும் இருக்கின்றது.
நாடு நிலைத்திருக்க வேண்டும்,வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற அக்கறை உண்மையில் இவர்களுக்கு இருக்குமேயானால் சாவர்க்கர்,கோல்வால்கர் சித்தாங்களை தூர எறிந்து விட்டு அண்ணல் அம்பேத்கர்,தந்தை பெரியார் ஆகியோரின் சிந்தனைகளையொட்டி மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.  முகநூல் பதிவு
  Rajesh Dee

கருத்துகள் இல்லை: