செவ்வாய், 29 நவம்பர், 2016

மோடி :ரொக்கம் அற்ற பரிவர்த்தனை ஊக்கிவிக்கப்படும் ! ரொக்கம் எல்லாம் வழிச்சு துடைச்சு அம்பானி அதானிக்கு, காப்பறேட்டுகளுக்குதான்

புதுடில்லி:நாடு முழுவதும் ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அமைச்சர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க, மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடம், ரொக்கமற்ற மின்னணு பரிவர்த்தனைகளை அதிகரிக்க வேண்டுமென, பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மக்கள் முன்வர வேண்டும்< ரொக்கப் பணம் பயன்படுத்துவதை வெகுவாக தவிர்த்து, டெபிட் கார்டுகள், மின்னணுவியல்பணம் செலுத்தும் முறை போன்றவை மூலம் அத்தியாவசிய பொருட்களை வாங்க, மக்கள் முன்வர வேண்டும் என, நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.இந்நிலையில், ரொக்கமற்ற பரிவர்த்தனை செய்வது எப்படி என்றும், அவற்றால் விளையும் நன்மைகள் குறித்தும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தக்க நடவடிக்கைகள் எடுக்கும்படி, மூத்த அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் கூறின.


கையெழுத்துஇயக்கம்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கான காரணத்தை விளக்கி, அதற்கு ஆதரவாக வியாபாரிகளிடம், பா.ஜ.,வினர், நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சென்னையில் கடைகளை மூடப்போவதாக, சில வியாபாரிகள் அறிவித்திருந்தனர். அதை தடுக்கும் முயற்சியாக, தமிழக பா.ஜ., இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், வியாபாரிகளை சந்தித்தனர்.
கறுப்புப் பண ஒழிப்புக்கு ஆதரவான துண்டு பிரசுரங்களை, வியாபாரிகளிடம் வினியோகித்தனர். அதைத் தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கைக்கு ஆதரவாக, வியாபாரிகளிடம் கையெழுத்தும் பெற்றனர் தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: