சனி, 3 டிசம்பர், 2016

மோடி:ரொக்க பண புழக்கமே ஊழலுக்கு வித்து! அப்படியே மூச்சு இருப்பதால்தான் மூச்சு திணறல் ஏற்படுகிறது ... அடே அடே அடே ...

Cashless economy.. Truth less politicians .. spine less journalists .. Heart less corporates.. Life less people and Brain less prime minister...
புதுடில்லி: ''அதிக அளவில் ரொக்க பண புழக் கம், ஊழல் மற்றும் கறுப்பு பணம் அதிகரிக்க வழிவகுக்கும்,'' என, பிரதமர் மோடி கூறி உள்ளார். செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையில், எதிர்க் கட்சிகள், பிரதமர் மோடியை கடுமையாக விமர் சித்து வருகின்றன. இந்நிலையில், அதுகுறித்து, இணையதளம் ஒன்றில், பிரதமர் மோடி எழுதிய கட்டுரை விபரம்: ஊழலால் நாட்டின் வளர்ச்சி முடங்கி போகிறது. 21ம் நுாற்றாண்டில், ஊழல் இல்லாத நாடாக, இந்தியா திகழ வேண்டும். இனிமேல், ஊழல் ஒழிந்து, வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். நடுத்தர மற்றும் உயர் நடுத்தர பிரிவு மக்களின் கனவு நனவாக வேண்டும்; இதற்கு ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிப்பது அவசியம். அதிக அளவில் ரொக்க பணம் புழக்கத் தில் இருப்பதே, கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு வித்திடுகிறது.


மக்கள், ரொக்க பணம் புழக்கத்தை குறைத்து, பண மில்லா பரிவர்த்தனைக்கு பழகிக் கொள்ள வேண்டும். இந்த மாற்றத்தை இளைஞர்கள் முன் னெடுத்துச் செல்ல வேண்டும்; மற்றவர்கள் பின் தொடரும் வண்ணம்,அவர்கள் செயல்பட வேண்டும். இதனால், நாட்டின் அடித்தளத்தை வலிமையாக்க முடியும்.

தற்போது,மொபைல் போன் உலகில் வாழ்கிறோம்; மொபைல் வங்கி கணக்கு, 'இ - வாலட்' யுகத்தில், இருக்கிறோம்.உணவு,பயணம்,பொருட் களை வாங்குவது என, அனைத்திற்கும், மொபைல்
போன் மூலம், பண பரிவர்த்தனைசெய்கிறோம்; தொழில்நுட்பம் நமக்கு, இந்த வசதியை தந்துள்ளது.

அனைத்து தேவைக்கும், ரொக்க பணமில்லா மல் பரிவர்த்தனை செய்ய முடியும்; மக்கள் அதை நோக்கி நடைபோட வேண்டும். செல் லாத நோட்டு அறிவிப்பால், பணமின்றி மக்கள் தவிப்பது தற்காலிகமே; இது, மக்களுக்கு நீண்ட கால பலனை அளிக்கும். ஊழலையும், கறுப்பு பணத்தையும் ஒழிக்க அனைவரும் ஒத்து ழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: