செவ்வாய், 13 மே, 2014

Sensex 24,000 புள்ளிகளை கடந்தது ! கருத்துக் கணிப்புகள் பங்கு மார்கட் சதி ? பின்னணியில் சந்தேகம் ?

மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியதன் எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டெண் சென்செக்ஸ் 24,000 புள்ளிகள் என்ற உச்சத்தைக் கடந்தது.
கடந்த மூன்று வர்த்தக தினங்களாகவே பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவி வருகிறது. இதற்கு, மத்தியில் உறுதியான ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பே காரணம் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நேற்று முடிவடைந்ததை அடுத்து, பல்வேறு செய்தி சேனல்கள் தங்களது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. அதில், பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைக்கும் என உறுதிபட கணிக்கப்பட்டது.  வளர்ச்சி அடைந்த நாடுகளின் கருத்து கணிப்புகள் ஓரளவு சரியாகவே அமைவதுண்டு, நம்ம நாட்டில் இது பெரும் தில்லுமுல்லு வேலையாகத்தான் இருக்கிறது, பொதுமக்கள் கூட உண்மையான அபிபிராயத்தை சொல்வதிலை . பங்கு மார்கட் சதியாளர்கள் இந்த கருத்து கணிப்பு விவகாரத்தில் நிச்சயமாக இருக்கிறார்கள் என்ற சந்தேகம் வலுக்கிறது 

இதன் எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றம் நிலவி வந்தது.
நண்பகல் 12 மணியளவில், சென்செக்ஸ் 517.94 புள்ளிகள் உயர்ந்து 24,068.94 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இதனிடையே, தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டெண் நிஃப்டி 151.50 புள்ளிகள் உயர்ந்து 7,165.75 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.
பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்குச்சந்தையின் ஏற்றத்தால் கோல் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ, என்டிபிசி, எல் அண்ட் டி, ஐடிசி, மாருதி சுஸுகி மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் பலனடைந்தன.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் சாதகப் போக்கும் இன்றைய எழுச்சிக்கு காரணமாகக் கருதப்படுகிறது.tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: