வியாழன், 15 மே, 2014

மேனகா காந்தி: நதிகள் இணைப்பை செயல்படுத்த விடாமல் தடுத்தது நானே!

பிலிபிட்: ''நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை, பிரதமராக
இருந்த வாஜ்பாய் செயல்படுத்த முற்பட்டார்; அதை தடுத்தது நான் தான்,'' என, பா.ஜ., - எம்.பி., மேனகா காந்தி கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம், ஆன்லா லோக்சபா தொகுதி எம்.பி.,யான மேனகா, நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, கோம்தி மற்றும் சாரதா நதிகளை இணைப்பது தொடர்பாக, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மேனகா கூறியதாவது: நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டத்தை, வாஜ்பாய் அரசு செயல்படுத்த விடாமல் தடுத்தது நானே. இத்தகைய திட்டங்கள் குப்பையானவை. இதுபோன்ற மோசமான திட்டம் உலகில் வேறு எங்கும் இல்லை. ஒவ்வொரு நதியும், அதற்கென தனி சுற்றுச்சூழல் முறைகளையும், மீன் வளத்தையும் கொண்டுள்ளது. யாரப்பா இந்த அழகு ராணி...நாட்ட உருப்பட விடாம ஆக்குறதே உங்க குடும்பத்துக்கு வேலையா போச்சு இல்ல... ஒன்னு ஆளும் கட்சியா இருந்து கெடுக்குது... இன்னொன்னு எதிர் கட்சியா இருந்து கெடுக்குது?   சந்தடி சாக்கில் இந்த அம்மா புருடா விடுது. சாலைகள் போடும் போதும், அணைகள் கட்டும்போதும் பெரிய தொழிற்சாலைகள் கட்டும் போதும் கூட தான் சுற்று சூழல் பாதிக்கிறது. அதற்காக அவை நிறுத்த பட்டதா. இந்த அம்மா அடிப்படையில் ஒரு மாடல். அவருக்கு இருக்கும் அறிவு அவ்வளவே. இந்த மாதிரி ஆட்களை பாஜக ஊக்குவித்தால் இந்தியா பிற்காலத்தை நோக்கி சென்று விடும்.
ஒரு நதியை மற்றொரு நதியுடன் இணைத்தால், அந்த நதிகளின் சுற்றுச் சூழல் முறைகளும், மீன்வளமும் பாதிக்கப்படும். மேலும், நதிகளை இணைப்பதால், 10 முதல், 15 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாழாகி விடும். அந்த அளவு நிலங்களை யார் கொடுப்பது? இவ்வாறு, மேனகா கூறினார்.

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசும் போதெல்லாம், நாட்டில் வறட்சியையும், வெள்ளத்தையும் தடுக்க, நதிகளை இணைப்பது அவசியம் என, பேசினார். அப்படிப்பட்ட நிலையில், பா.ஜ., கட்சியைச் சேர்ந்த மேனகா, நதிகள் இணைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. dinamalar.com

கருத்துகள் இல்லை: