ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, "மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அரசியல் உள்நோக்கத்துடன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த சில முடிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்துடன் மறுபரிசீலனை செய்யும்.
புதிய ராணுவத் தலைமைத் தளபதி நியமிக்கும் முடிவை 16ஆம் தேதிக்கு பிறகு மத்தியில் அமையும் புதிய அரசிடம் விடப்பட்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொறுமை காத்திருக்க வேண்டும். அடடா என்ன சுகமான கனவு ? வெங்காயம் சார் இன்னும் கொஞ்சம் பொறுமை தேவை !
இது முக்கியமான விவகாரம் என்பதால் இது குறித்து தவறான கருத்துகளை கூற விரும்பவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியுடன் சந்தித்து ஆலோசனை நடத்துவார். மூத்த தலைவர் அத்வானிக்கு என்ன மாதிரியான பதவி வழங்க வேண்டும் என்பது குறித்தும் கட்சி ஆலோசனை நடத்தப்படும்.
2004ஆம் ஆண்டு பிரதமராக மன்மோகன் சிங் பதவி ஏற்றபோது நாட்டின் உள்நாட்டு ஒட்டுமொத்த வளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது. தற்போது அவர் பதவி விலகும் நேரத்தில் அது 4.8 சதவீதமாக குறைந்துள்ளது. மன்மோகன் சிங் நேர்மையானவர் என்ற போதிலும், மத்திய அரசில் பிறர் ஊழல் செய்வதற்கு வாய்ப்பு வழங்கி விட்டார்' என்று கூறினார். dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக