சனி, 17 மே, 2014

பாஜக வெற்றி இந்தியாவுக்கு ஆபத்து: மணிசங்கர் அய்யர் பேட்டி

பாஜக.வின் வெற்றி இந்தியாவுக்கு ஆபத்து என்றார் மயிலாடுதுறை
தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் அய்யர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் மையத்திற்கு தனது மனைவி மற்றும் மகளுடன் வெள்ளிக்கிழமை வந்திருந்த மணிசங்கர் அய்யர் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டவுடன் அவருக்கும், அதிமுக வேட்பாளர் பாரதிமோகனுக்கும் 22,500 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்ட நிலையில் நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளி யேறினார்.
அப்போது அவர் ‘தி இந்து’விடம் கூறியது:
“தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்தான். வாஜ்பாய் காலத்தில் காங்கிரஸ் தோற்றபோது கூட வருத்தம் இல்லை. ஆனால், இந்த நேரத்தில் இப்படிப்பட்ட தோல்வி கிடைத்திருப்பதுதான் வருத்தம். 1885-ல் இருந்து காங்கிரஸ் கட்சி காப்பாற்றி வந்த அமைதிக்கு ஆபத்து, நாட்டின் சித்தாந்தத்துக்கு ஆபத்து.
இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்கள் மோடிக்கு பணத்தை அள்ளி இறைத்து இந்த வெற்றியைப் பெற்றுத் தந் துள்ளனர். கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் இந்த தேர்தலில் பாஜக செலவழித்திருப்பதாக சொல்லப் படுகிறது. அந்த பணம் என்ன வெள்ளையா? ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு வெற்றி பெற்ற வர்கள் நாட்டில் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?.
எனது கணக்குப் படி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மோடிக்கு வாக்களிக்கவில்லை. அத்தனை பேர் ஏற்றுக் கொள்ளாத மோடி எப்படி நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும்? சிறிய பிரச்சினைகளைகூட ஊதிப் பெரி தாக்குபவர்களால் நாட்டில் எப்படி அமைதி நிலவச்செய்ய முடியும். பேராபத்தாகத்தான் எதுவும் முடியும்.
தற்போது வெற்றிபெற்றுள்ள பாரதி மோகன் டெல்லிக்குப் போவ தால் ஒன்றுமே பலன் கிடைக்கப் போவதில்லை. என் கணக்குப்படி சட்டமன்ற தேர்தலுடனே சேர்த்து மக்களவைக்கும் தேர்தல் நடக்க லாம்” என்றார் மணிசங்கர் அய்யர். tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: