வெள்ளி, 16 மே, 2014

அத்வானியும் சுஷ்மாவும் சமரசமாகவில்லை ! ஆட்சிக்கு வருமுன்னே ?

நரேந்திரமோடி தலைமையில் அமையும் பா.ஜ.க. அரசில் அத்வானிக்கு
என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் நிறுவனர்களில் ஒருவர் என்ற அந்தஸ்து மட்டுமின்றி தற்போதைய முதுபெரும் முதன்மை தலைவராக அத்வானி திகழ்கிறார்.
வாஜ்பாய் தலைமையில் அமைந்த பா.ஜ.க. அரசில் அத்வானி துணைப் பிரதமராக இருந்தார். அவருக்கு கீழ் மாநில முதல்வராக மோடி இருந்தார்.
எனவே தனக்கு கீழ் இருந்தவரின் தலைமையை அவர் எப்படி ஏற்பார் என்பதை எல்லாரிடமும் உள்ள கேள்வியாக உள்ளது. எனவே மோடிக்கு ஆலோசனை சொல்லும் வகையில் உயரிய பதவி ஒன்றை உருவாக்கி அத்வானிக்கு வழங்கும் முயற்சிகளில் பா.ஜ.க. தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக பா.ஜ.க. கூட்டணியின் தேசிய ஆலோசனைக்குழுவுக்கு அத்வானியை தலைவராக நியமிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே அத்வானி என்ன பொறுப்பை வகிக்க விரும்புகிறார் என்பதை அவரிடமே கேட்டு முடிவு செய்ய பா.ஜ.க. தலைவர்கள் தீர்மானித்தனர். இதையடுத்து அத்வானியை பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் அத்வானியிடம் பாராளுமன்றத்தை வழிநடத்திச் செல்ல சபாநாயகர் பதவியை ஏற்க தயாரா என்று கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதை அத்வானி ஏற்றாரா என்று தெரியவில்லை.
பா.ஜ.க.வில் அத்வானியும் அவரது ஆதரவாளர்களான சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த்சின்கா போன்றவர்கள் முக்கிய பதவிகளை பெற தீவிரமாக உள்ளனர். பதவிகள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் அதிருப்தி அடையக்கூடும்.
அத்வானி, சுஷ்மா இருவரும் தற்போது அந்த மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை சமரசம் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது. malaimalar .com

கருத்துகள் இல்லை: