சனி, 17 மே, 2014

10 ஆண்டு்களுக்குப் பின் மீண்டும் முதல்வராகிறார் சந்திரபாபு நாயுடு

சீமாந்திராவில் உள்ள 175 சட்ட மன்றத் தொகுதிகளில் 100
தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றி தெலுங்குதேசம் ஆட்சியை பிடித்தது. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் முதல்வர் ஆகிறார் சந்திரபாபு நாயுடு.
சீமாந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம், விஜய நகரம், விசாகப் பட்டினம், கிருஷ்ணா, அனந்த பூர்,குண்டூர், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தெலுங்குதேசம் அதிக தொகுதிக ளைக் கைப்பற்றியது. சித்தூர், கடப்பா, நெல்லூர், பிரகாசம், கர்னூல் மாவட்டங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங் களைக் கைப்பற்றியது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கடப்பா மாவட்டம் புலிவேந் தலா சட்ட மன்றத் தொகுதியில் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நடிகை ரோஜா வெற்றி
நடிகை ரோஜா, சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் 9,626 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதே போன்று, அனந்தபூர் மாவட்டம் ஹிந்துபூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாபுகாரு உங்க முகத்தில் ஏன்  அப்படி ஒரு திருட்டு தனம் தெரிகிறது? ம்ம் உங்களை ஆளாக்கின என்டியாருக்கு அல்வா கொடுத்து கட்சியையும் ஆட்சியையும் திருடினவராசே எப்படித்தான் சாமுத்திரிகா லட்சணத்தை ஏமாத்த முடியும்?
மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம்-பா.ஜ கூட்டணியே சீமாந்திராவில் அதிகபட்ச தொகுதிகளைக் கைப் பற்றியது. 25 மக்களவைத் தொகுதி களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளையே கைப்பற்றியது. தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் இருந்து தொடர்ந்து 6-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். இம்முறை அவர், 50,381 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது இவர் 3வது முறையாக முதல்வர் பதவி வகிக்க உள்ளார்.
மண்ணை கவ்விய காங்கிரஸ்
மாநில பிரிவினைக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் மீது கோபமாக இருந்த சீமாந்திரா மக்கள், தங்கள் கோபத்தை வாக்குச்சீட்டு மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். 175 சட்டமன்ற தொகுதிகளிலும் 25 மக்களவை தொகுதிகளிலும் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: