
கூட்டணிக்கு, 220 இடங்களுக்கும் குறைவாக கிடைத்தால், அந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. 'பி' பிளான் என்ற பெயரில், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட, முக்கிய தலைவர்களுடன், காங்., தலைவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கருத்து கணிப்பு முடிவு;லோக்சபா தேர்தல் முடிவுகள், நாளை மறுநாள் வெளியாகவுள்ளன. ஆனாலும், 'எக்சிட் போல்' என, அழைக்கப்படும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.அவற்றில், 'பா.ஜ., தலைமையிலான தே,ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 'இறுதி முடிவுகள் வெளிவரட்டும்' என, முக்கிய அரசியல் கட்சிகள், மவுனம் சாதிக்கின்றன. இந்நிலையில், டில்லியில், காங்கிரஸ் தலைவர்கள், நேற்று காலையில் இருந்தே, முக்கிய ஆலோசனைகளில் இறங்கியுள்ளனர்.
<>இதுகுறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:
அ.தி.மு.க.,வை நெருங்கும் காங்கிரஸ்?*(ம்ம் பேரம் படியனுமே ?) தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், 'தமிழகத்தில், அ.தி.மு.க.,வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்., கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, தமிழகத்தை சேர்ந்த காங்., தலைவர்கள் சிலர் கூறியதாவது:இத்தனை காலமும், தி.மு.க.,வுடன் இருந்ததால் தான், அ.தி.மு.க., எங்களை நெருங்காமல் இருந்தது; இனி, அப்படி இருக்காது. தேர்தலில், அ.தி.மு.க., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், மத்தியில் பா.ஜ., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், சிக்கல் தான். அ.தி.மு.க., எதிர்க்கட்சி வரிசையில் தான், அமர வேண்டும். இதனால், அ.தி.மு.க., எங்களுடன் இணக்கமாக செயல்படும் என, நம்புகிறோம். இந்த இணக்கம், 2016ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும். இனி, தமிழக சட்டசபையிலும் காங்கிரசின் நிலையில் மாற்றம் இருக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
- நமது டில்லி நிருபர் - dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக