புதன், 3 அக்டோபர், 2012

சென்னை EVP World ராட்டினத்திலிருந்து விழுந்து விமான பணிப்பெண் பலி

EVP WORLD பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்திலிருந்து விழுந்து பெண் பலி: சென்னையில் 3 பேர் கைது< சென்னையில் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்திலிருந்து விழுந்து விமான பணிப்பெண் பலியானார்.துதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த சஸ்லாமேக் என்பவரின் மகள் அபியாமேக் (வயது 25). கிங்பிஷர் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். தற்போது சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், கோத்தாரி நகர், 5-வது தெருவில் தன்னுடன் பணிபுரியும் தோழிகளோடு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.>02.10.2012 காலை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள `இ.வி.பி. வேர்ல்டு' என்ற தனியார் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தனது தோழிகள் மற்றும் நண்பர்கள் 12 பேருடன் சென்றார். பொழுதுபோக்கு பூங்காவிற்குள் செல்ல டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு அனைவரும் ஆனந்தமாக உள்ளே சென்றனர்.அப்போது அங்குள்ள `ஆக்டோபஸ்' ராட்டினத்தில் பயணம் செய்ய ஆயத்தமானார்கள். இந்த ராட்டினம் மேலே வளைந்தும், தலைகீழாகவும் செல்லக்கூடியது. இதில் சுமார் 20 பேர் பயணம் செய்வார்கள். பயணம் செய்பவர்கள் அனைவரும் சீட்டில் அமர்ந்து பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும்.>இந்த ராட்டினத்தை ஆபரேட்டர் வில்லியம்ஸ் இயக்கினார். ராட்டினம் இயக்கப்பட்ட சிறிது நேரத்தில் மேலே சென்ற அதிலிருந்து `ஆ' என்று அலறியபடி அபியாமேக் கீழே விழுந்தார்.
இதில் அவர் சுய நினைவை இழந்து மயங்கி விட்டார். இதைக் கண்டதும் ராட்டினத்தை இயக்கிய ஆபரேட்டர் அங்கிருந்து ஓடி விட்டதாகவும், இதனால் ராட்டினம் வேகமாக வந்து தரையில் விழுந்து கிடந்த அபியாமேக்கின் தலையில் மோதியதாகவும் கூறப்படுகிறது.தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அபியாமேக் விழுந்து கிடந்தார். பூங்காவிற்குள் வந்தவர்கள் இதைக் கண்டதும் அலறினார்கள். பின் அங்கிருந்த ஊழியர்கள் ஓடி வந்து ராட்டினத்தை நிறுத்திவிட்டு தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த அபியாமேக்கை வேனில் ஏற்றிக்கொண்டு தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் சித்தார்த்த சங்கர்ராய் (பொறுப்பு) மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.>இந்த சம்பவம் தொடர்பாக ராட்டினம் ஆபரேட்டர் வில்லியம்ஸ், மானேஜர் அசோக், என்ஜினீயர் அராப் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தனது குடும்பத்தோடு இதே பொழுதுபோக்கு பூங்காவிற்கு வந்த சின்மயா நகரை சேர்ந்த ரிச்சாஷா (25) என்ற பெண் `கப் அண்டு சாசர்' ராட்டினத்தில் பயணம் செய்து விட்டு இறங்கிய போது ராட்டினத்திற்கு இடையில் மாட்டிக்கொண்டு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: