திங்கள், 1 அக்டோபர், 2012

Bore Well 520 Feet குழந்தையை உயிருடன் மீட்ட

6 மணி நேர போராட்டம், தவிப்பு, எதிர்பார்ப்பு, பிரார்த்தனை! அதிஷ்டவசமாக  மீட்கப்பட்ட குணா!


















ஆறு மணி நேர போராட்டம், தவிப்பு, எதிர்பார்ப்பு, பொதுமக்கள் பிரார்த்தனை என்று பல கட்டத்தை தாண்டி வெற்றிகரமாக குழந்தை குணாவை உயிருடன் மீட்டெடுத்து காப்பாற்றியுள்ளனர்.  ஆம் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள கும்மளாத்தூர் கிராமம்தான் இந்தனை பரபரப்புக்கும் காரணம்.கடந்த செப்டம்பர் 30ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மொத்த  தமிழகத்தையும் சேகமாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் திரும்ப திரும்ப பார்க்க வைத்துவிட்டது. கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 160 கி.மீ தொலைவு உள்ள இந்த மலைகிராமத்தை சேர்ந்த ஆனந்த் - பத்மா தம்பதியருக்கு சொந்தமான 4ஏக்கர் நிலத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு 520 ஆழத்தில் அமைக்கப்பட்ட ஆழ் துளை கிணற்றை தண்ணீர் வரவில்லை என்று மூடி வைக்காமல் அலச்சியமாக அப்படியே விட்டுவிட்டதே இந்த சோக சம்பவத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.விவசாய குடும்பத்தை சேர்ந்த ஆனந்த்-பத்மா தம்பதியருக்கு பூஜா என்ற நான்கு வயது பெண் குழந்தையும், குணா என்ற மூன்று வயது ஆண் குழந்தையும் உள்ளனர். செப் 30ந் தேதி ஞாயிற்றுகிழமை காலை 9,30 மணிக்கு ரோஜா தோட்டத்தில் ஆன்ந்த்-பத்மா வேலை செய்து கொண்டிருக்க, அங்கும் இங்குமாக பூஜாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும் குணா, தோட்டத்தில் நான்கு பக்கமும் ஓடி விளையாடுகிறான் அப்போது ஆழ் துளை கிணறு பக்கமும் ஓடுகிறான் குழந்தை குணா...?  அப்படியே தடுமாறி தவறி ஆழ்துளை கிணற்றில் விழுகிறான் இதை பார்த்த பூஜா சத்தம் போட்டு அலற ஆனந்த்-பத்மாவும் பாம்புதான் கடித்துவிட்டது என்று அலறிக்கொண்டு ஓடி வருகின்றனர், ஆனால் சற்றும் எதிர்பார்க்காமல் குழந்தை குணா ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பதற்றத்தில் பத்மா கூச்சல் போட்டு கதறியபோது கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆழ் துளை கிணறு குணாவை உள்ளே இழுத்தபோது பத்மாவிற்கு உயிர் கை நழுவி போவதுபோன்ற மரண வேதனையை பத்மா உணர்ந்துள்ளார்.

தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் சித்ரா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மீட்பு குழுவினருடன் வந்தவுடன் ஆழ் துளை கிணற்றில் 20 அடி ஆழத்தில் குழந்தை குணா உயிருடன் இருப்பதை உறுதி செய்து கொண்டு குழந்தை குணாவிற்கு மூச்சு திணறல் ஏற்படமால் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்ட பிறகு பகல் 11 மணிக்கு மீட்பு பணியில் இறங்கினர்.

ஆழ்துளை கிணற்றின் இரண்டு ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு குழி தோண்டி எடுத்த பிறகு 15 அடிக்கு பிறகு கடி பாறை தென்படவே மீட்பு குழுவினர் அதற்கு மேல் பாறையை உடைத்து பள்ளம் தோண்டி ஆழ் துளை கிணற்றை பக்க வாட்டில் சென்று குழந்தை இருக்கும் இடத்தை மதியம் 2.45 மணிக்கு சென்று அடைந்தனர். கொஞ்சம் கொஞ்மாக குழந்தை உள்ள ஆழ்துளை கிணறு பக்கம் மண் எடுத்தபோது குழந்தை குணா உயிருடன் இருப்பது அறிந்த தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு குழந்தை குணா உயிருக்கு போராடியபோது டாக்டர் ராஜ்குமார் தலைமையில் வந்திருந்த மருத்துவ குழுவினர் குழந்தை குணாவிற்கு டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தினர். மறுபுறம் தீயணைப்பு வீரர்கள் பேட்ராஜன், செல்வம் பாறையில் துளையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ளவே மாலை 3.00 மணிக்கு குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர் வெங்கடசாமி ஆழ்துளை கிணற்றில் தலைகீழாக சிக்கிக்கொண்டிருந்த குழந்தை குணாவின் கை, கால் பகுதிகளில் கயிறை கொண்டு கட்டி மேலும் ஆழ்துளை கிணற்றில் உள் நோக்கி இறங்காமல் தடுத்து நிறுத்தி குழந்தை குணாவை உயிருடன் 3.10 மணிக்கு மீட்டெடுத்தார்.சுமார் 6 மணி போராட்டத்திற்கு மருத்துவ குழு, தீயணைப்பு குழு, இரண்டு ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு குழந்தை குணாவை உயிருடன் மீட்டெடுத்த அனைவருக்கும் குணாவின் தாய் பத்மா மனம் உருக நன்றி தெரிவித்து குழந்தை குணாவை வாரி எடுத்து முத்தமிட்டு தாய் பாசத்தை கொட்டி தீர்த்தார். கூடியிருந்த பொதுமக்கள் குழந்தை குணாவை உயிருடன் மீட்க செய்த பிரார்த்தனை வீன்போகமால் காப்பாற்றிய மீட்புக் குழுவினரை பொதுமக்கள் வெகுவாகபாராட்டி ஆரவாரம் செய்தனர். 6 மணி நேரம் உணவின்றி, போதுமான ஆக்சிஜன் இன்றி மயக்க நிலையில் இருந்த குழந்தை குணாவை ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு வந்த கலெக்டர் மகேஷ்வரன் குழந்தையை பார்வையிட்டு பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். குழந்தையை உயிருடன் மீட்ட மீட்பு குழுவினரையும் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை: