திங்கள், 2 ஏப்ரல், 2012

திவாகரனுக்கு ஜாமீன்: தொலைந்த சகோதரி, கிடைந்த மகிழ்ச்சியில்!

அடிமைகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிவேக காட்சி மாற்றங்கள் பழுத்த அடிமைகளான அமைச்சர்களையும் கூட தடுமாற வைக்கிறது.
Viruvirupu
சசிகலா மீண்டும் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரியான புனர்ஜென்மம் பெற்ற பின் கோர்ட்டுக்கு வந்த முதலாவது ஜாமீன் மனு, வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வீடு இடிப்பு வழக்கில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.

சசிகலாவின் சகோதரரான திவாகரனை கைது செய்வதற்காக அவர்மீது வீடு இடிப்பு வழக்கு ஒன்று பதிவாகியிருந்தது. திருவாரூர் மாவட்டத்தின் ரிஷியூர் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவரது வீட்டை இடித்ததாக புகார் அளிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் உபரியாக அவர்மீது மிரட்டிப் பணம் பறித்த வழக்கு ஒன்றும் பதிவாகியிருந்தது.
திவாகரன் தரப்பில் இருந்து, இரு வழக்குகளிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த இரண்டு வழக்குகளில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கு கொஞ்சம் வீக்கான நிலையில் இருந்தது. அதனால், அந்த வழக்கில் திவாகரன் ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பால் பெரிதாக எதிர்ப்பு காட்ட முடிந்திருக்கவில்லை. அதையடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்திருந்தது.
ஆனால், வீடு இடிப்பு வழக்கில் திவாகரனுக்கு ஜாமீன் கொடுப்பது தொடர்பாக அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அரசின் எதிர்ப்பு காரணமாக ஜாமீன் கிடைக்காத நிலை இருந்தது.
இப்படியான நிலையில் திடீரென ஒருநாள் சசிகலா, ஒரு சிங்கிள் அறிக்கையோடு இன்ஸ்டன்ட் சகோதரியானார்.
அந்தக் காட்சியே மாறியபின், மற்றைய காட்சிகள் மாறாவிட்டால் எப்படி? எனவே, சசிகலா சின்டிகேட் உறுப்பினர்களின் ஜாமீன் மனுக்கள் கோர்ட்டுக்கு வரும்போது, இனி அரசுத் தரப்பில் எதிர்ப்பு இருக்காது என்பது ஆண்டிப்பட்டி ஆட்டுக்குட்டியால்கூட ஊகிக்கப்பட்டது.
அந்த வகையில், ‘தொலைந்த சகோதரி மீண்டும் கிடைத்தபின்’ கோர்ட்டுக்கு வரும் முதலாவது ஜாமீன் கோரிக்கை மனுவாக, திவாகரனின் மனு இன்று வந்து சேர்ந்தது.
மனுமீது விசாரணை நடத்திய நீதிபதி சுந்தரேஷ், “மனுதாரர் ஜாமீனில் செல்வது தொடர்பான கோரிக்கைக்கு, அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறீர்களா?” என்று சம்பிரதாயமாக கேட்டார்.
அரசுத் தரப்பில் வந்திருந்தவர், மோன நிலையில் இருந்த கௌதம புத்தர்போல, ஒரு தெய்வீகப் புன்னகை பூத்தார். திவாகரனுக்கு ஜாமீன் கிடைத்தது.

கருத்துகள் இல்லை: