புதன், 4 ஏப்ரல், 2012

அமெரிக்க கல்லூரியில் 7 பேரை சுட்டுக் கொன்ற முன்னாள் மாணவன்

ஓக்லேண்ட்:  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லூரிக்குள் புகுந்த முன்னாள் மாணவன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 7 மாணவர்கள் இறந்தனர், இந்திய வம்சாவழி மாணவி உள்பட 3 பேர் காயமைடந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஓக்லேண்டில் உள்ளது ஆய்கோஸ் பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழக கல்லூரிக்குள் கொரிய வம்சாவழியைச் சேர்ந்த கோ(43) என்பவன் நேற்று அத்துமீறி புகுந்தான். வகுப்புறைக்குள் புகுந்த அவன் அனைவரும் வரிசையில் நில்லுங்கள், நான் உங்களை எல்லாம் சுட்டுக் கொல்லப் போகிறேன் என்று கூறியுள்ளான். மாணவர்களும் செய்வதறியாது திகைத்தனர். உடனே அவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 7 மாணவர்கள் பலியாகினர். இந்திய வம்சாவழி மாணவியான தேவிந்தர் கௌர்(19) உள்பட 3 பேர் காயமடைந்தனர்.


சம்பவம் நடந்ததற்கு சில கிமீ தொலைவில் உள்ள ஒரு கடையில் இருந்த அவனை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அவன் சரணடைந்துவிட்டான். அவன் கொரியா மற்றும் அமெரிக்கா குடியுரிமை வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் கையில் குண்டடிபட்ட தேவிந்தர் கௌர் கூறியதாக அவரது சகோதரர் பால் சிங் கூறுகையில்,

கோ அந்த கல்லூரியின் முன்னாள் மாணவன். கடந்த 4 மாதங்களில் அவன் வகுப்பறைக்கு வந்தது இது தான் முதல் தடவை. வகுப்பறைக்குள் புகுந்த அவன் மாணவர்களைப் பார்த்து அனைவரும் வரிசையில் நில்லுங்கள், நான் உங்களை கொல்லப் போகிறேன் என்றானாம். அவன் ஏதோ விளையாட்டுக்கு கூறுகிறான் என்று மாணவர்கள் முதலில் நினைத்துள்ளனர் என்றார்

கருத்துகள் இல்லை: