புதன், 4 ஏப்ரல், 2012

தமிழகத்தின் `சூயஸ் கால்வாய் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் ஆரியமாயை!

கூடங்குளம் அணுமின் நிலை யத்தைத் தொடங்கும்போது வாயை மூடிக் கொண்டிருந்து விட்டு,பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, அத்திட்டம் முடிவடைகின்ற நேரத்தில் அந்தத் திட்டம் கூடாது என்று எதிர்ப்பது எப்படியோ, அப்படித்தான் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டபோது வாயை மூடி மௌனமாக இருந்துவிட்டு, தற்போது பல கோடி ரூபாய்களைச் செலவழித்து முடித்து விட்ட நிலையில் ராமர் பாலம்; என்ற பெயரைப் பயன்படுத்தி முட்டுக் கட்டைபோட நினைப்பது சரிதானா
தமிழர்களின் நீண்டகாலக் கனவான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற  எண்ணத்தோடு  தி.மு.கழகம் நீண்ட காலமாகத் தொடர்ந்து  முயற்சி செய்து,  2005ஆம் ஆண்டு ஜூலை மாதம்  2ஆம்  தேதி யன்று  அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி மற்றும் என்னுடைய  முன்னிலையிலே  பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மதுரைக்கே வருகை தந்து, அந்தத் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, திட்டப் பணிகளும் வேகமாக நடைபெற்று வந்த நேரத்தில், அந்தத் திட்டம் நிறை வுற்றுவிட்டால்  தி.மு.கழகத்திற்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் மிக முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்திய  சாதனையின் காரண மாகச்  சிறப்பான பெயர் வந்துவிடும் என்ற தீய எண்ணத்தோடு  ஒரு கூட்டம் அதனைக் கெடுக்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு, நீதிமன்றம்வரை சென்று  அந்தச் சேது சமுத்திரத் திட்டத்திற்கு முட்டுக் கட்டைபோடும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டது.

அவர்களின் அந்த முயற்சிக்கு அந்தக் கூட்டம்  ராமர் பாலம் வழியிலே உள்ளது,  சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால்  ராமர் பாலத்திற்கு குந்தகம் ஏற்படும் என்று காரணம் கூறியது.   அவர்களின் அந்த முயற்சிக்கு மேலும் துணை புரியும் வகையில்தான்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு முன்பு  இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,   ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் வகையில் உச்சநீதி மன்றத் தில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும்  என்று தெரிவித்துள்ளார். திட்டத்தை எதிர்க்கும்
அண்ணாவின் முயற்சி!
சேது சமுத்திரத் திட்டம் நிறை வேற்றப்பட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 23.7.1967 அன்று முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கூட் டணிக் கட்சிகளுடன் சேர்ந்து எழுச்சி நாள் கூட்டங்கள் நடத்த முடிவு செய்தார்.  அதனையொட்டி, தமிழக சட்டப் பேரவையில் அனைவருடைய ஆதர வையும் கோரினார். அப்பொழுது அண்ணா அவர்கள்,
சேது கால்வாய் திட்டம் - தூத்துக் குடி துறைமுகத் திட்டம் இரண்டும் ஒருங்கிணைந்தால் அதைத்  தமிழகத்தின் `சூயஸ் கால்வாய் என்று கருதலாம்.  இப்போது சிலோனைச் சுற்றி கொழும்பு துறைமுகத்திற்குப்போய் கிட்டத்தட்ட 600 மைல்கள் சுற்றிக்கொண்டு வருகின்ற வெளிநாட்டுக் கப்பல்கள், இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் அந்நிலை மையை தவிர்த்துவிட இயலும்.
வெளிநாட்டுக் கப்பல்கள் - பிரமாண்ட மான கப்பல்கள் இப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் நிற்க முடியாது.  ஆழ்கடல் துறைமுகமாக இருக்குமானால் பெரிய கப்பல்கள் வர பல நாட்டுக் கப்பல்கள் வரத்தக்க பெரிய அனைத்து நாட்டுத் துறைமுகமாக மாறும்.  அப்படி மாறும் போது பல்வேறு வகையான தொழில்கள் கிடைக்கும். அப்படி கிடைக்குமானால் பொருளாதார வளர்ச்சி நிரம்ப ஏற்படும் என்று கூறி தமிழக சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தினார்.
இந்தச் சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடைபெற முயன்றனர்.  அது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச்,
தேசிய நலனுக்காக கொண்டு வரப் படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு  மனுதாரர் நீதி மன்றத்துக்கு  விரைந்து வந்து  வழக்கு  தொடுத்துள்ளார்.   சேது சமுத்திர திட்டம்  நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது  எல்லோருக்கும்  தெரிந்த ஒன்றா கும்.   ஏனென்றால்  தற்போது கப்பல்கள்  இலங்கை நாட்டைச்சுற்றி வங்காள விரிகுடா  கடலுக்கு வரவேண்டியுள்ளது. பாக்  ஜலசந்தியிலே  குறுக்காக கப்பல்  கால்வாய்  அமைத்தால்  பெருமளவு  பணமும்,  நேரமும்  சேமிக்கப் பட ஏது வாகும்.  இந்தக் கால்வாய் திட்டம்  நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழா வுக்கு  தடை கிடையாது என்று கூறி தீர்ப் பளித்தது. சேது சமுத்திரத் திட்டம் வந்துவிடக் கூடாது என்று  தற்போது உள்மனதில்  கெட்ட நோக்கோடு  திட்டமிட்டு செய லாற்றும்  அ.தி.மு.க.வினர் 2001  அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இதே சேது சமுத்திரத் திட்டம் பற்றி என்ன குறிப்பிட்டார்கள் தெரியுமா?
அன்னிய முதலீடு அதிகரிக்கும்
சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். வாணிபமும்  தொழிலும்  பெருகும்.  அந்நிய முதலீடு  அதிகரிக்கும்.  அந்நியச் செலாவணி அதிகம் கிடைக் கும். கப்பலின் பயணத் தூரம் பெரு மளவுக்குக் குறையும். எரிபொருளும்  பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி, இறக்குமதி  அதிகரிக்கும்.  குறிப்பாக, ராமநாதபுரம்  போன்ற மிகப் பிற்பட்ட  தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.  வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரி வடையும்.  சுற்றுலா வளர்ச்சி அடையும். இன்ன பிற நன்மைகளைத்தர இருக்கும் இத்திட்டத்தின்  தேவையை முக்கியத்து வத்தை உணர்ந்து,  நிதி நெருக்கடியை  ஒரு சாக்காகக் கூறிக்கொண்டிருக்கா மல், உலக வங்கிபோன்ற  சர்வதேச நிறு வனங்களுடன்  மத்திய அரசு  தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மய்ய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்
அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை என்ன சொல்லுகிறது?
மீண்டும் 10.5.2004 அன்று வெளி யிடப்பட்ட அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிக் கையில்,
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி யிலும்,  நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கிய பங்காற்றவிருக்கும் சேது சமுத்திரத்திட்டத்தினை  நிறை வேற்றுவதற்கு  உரிய நடவடிக்கைகளை  எடுக்க,  மய்ய  ஆட்சியில்,  அமைச்சுப் பொறுப்பில்  அய்ந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டதை  இந்த நாடு நன்கறியும்.  இத் திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி,  ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள்  இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட  வேண்டுமென்று  அமைய இருக்கும் மைய அரசை  அ.தி.மு.க. வலியுறுத்தும். என்று கூறியிருந்தார்கள். இதற்குப் பிறகுதான் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு வேக மாக நடந்து வந்த நேரத்தில், அதனைத் தடுப்பதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்ட நிலையில்,  திராவிட முன்னேற்றக் கழகத் தின்  சார்பில்  2009ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில்-
தமிழர்களின் நீண்டகால கோரிக்கை யான சேதுக்கால்வாய் திட்டம் தமிழக முதல்வர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத் தியதின் காரணமாக 2.7.2005 அன்று தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடையும் நேரத்தில் மத காரணங்களைக் காட்டி தடை செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை மத்திய அரசு விரைந்து முடித்து, இத் திட்டத்தின் எஞ்சிய பணிகளை முடித்து தமிழ்நாட்டின் தென்மாவட்ட பொருளா தார வளர்ச்சிக்கும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் வழிகோல வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும் என்று  தெரிவித்திருந்தோம். ஆனால் 16-4-2009  அன்று, அ.தி.மு.க.  சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி இறுதியாகக் கூறப் பட்டிருப்பது  என்ன?  அதிக   வேகமும்  மிக அதிக  எடைகொண்ட  சரக்குகளை ஏற்றிச் செல்லும்  திறனும் கொண்ட கப்பல்கள் பயணிக்கும்  இன்றைய நவீன யுகத்தில்,  இது தற்காலத் திற்கு  ஒவ்வாத திட்டம் என்ற உண்மை வேண்டுமென்றே  மறைக்கப்பட்டுள்ளது.  இப்போது திட்ட மிட்டுள்ளபடி இந்தக் கால்வாய் திட்டம்  நிறைவேற்றப்படுவ தால்,  நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அள வுக்கு  எந்தப் பொருளாதார  ஆதாயமும் கிடைக்க வாய்ப்பே இல்லை.
மேலும்,  நாடு முழுவதும்  உள்ள கோடிக்கணக் கான மக்களின் மத  உணர்வுகளைப் புண்படுத்தும்  என்றெல்லாம் அ.தி.மு.க. கூறி, இந்தத் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றார்கள். சேதுத் திட்டம் வேண்டுமென்று நாமெல்லாம் குரல் கொடுக்கின்ற நேரத்தில் - மதத்தைக் காட்டி சிலர் எதிர்க்கிறார்கள், புராணத்தைக் காட்டி எதிர்க்கிறார்கள்;   கடவுளின் பெயரைச் சொல்லி, அந்தப் பாலத்தை இடித்தால் நாட்டிற்கே ஆபத்து, இந்தியாவிற்கே  ஆபத்து என்றெல்லாம் சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள்;  நீதி மன்றம் செல்கிறார்கள்;  இன்னும் சிலர்  இவர் களுக்கு ராமனைப் பிடிக்காது,  ராம னுக்கு விரோதிகள், ஆகவேதான் ராமர் பாலத்தை இடிக்கத் தொடங்குகிறார்கள் என்று நம்மைப் பார்த்துச்  சொல் கிறார்கள்.  அவர்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
வாஜ்பேயி காலத்தில்...
ராமர் பெயரால் உள்ள எதுவும் இருக் கக் கூடாது என்பதற்காகவா அந்தப் பாலம் வேண்டாமென் கிறோம்.   இல்லாத பாலத்தை இடிப்பதாக ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றுதான் கேட்கிறோம்.  இன்னும் சொல்லவேண்டுமேயானால், வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்திலேயே எங்களின் வலியுறுத் தலின் பேரில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்  மத்திய அரசின் சார்பாக தூத்துக்குடி துறைமுக நிர்வாகம், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சுற்றுச் சூழல் ஆய்வுப் பணியை வழங் கியது.  அக்டோபர் 2002இல், அந்த நீரி நிறுவனத்தின் பரிந்துரையான ஆடம்ஸ் பிரிட்ஜ் எனப்படும் (இதைத்தான் ராமர் பாலம் என்கிறார்கள்) ஆதாம் பாலத்தை வெட்டிச் செல்லும் வழித் தடம்தான்  சிறப்பானது என்று முடிவு செய்யப் பட்டது.
அ.தி.மு.க. தனது  2001ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே பக்கம் 83-84இல்,  இந்திய தீப கற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக் குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து  கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டு மானால்  இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.   இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேதுசமுத்திரத் திட்டம்.  இரட்டை வேடம் ஏன்?
இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற் கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று  ஆடம்ஸ் பிரிட்ஜ்  என்றும்  மணல் மேடுகள், பாறைகள் என் றெல்லாம் வர்ணித்து விட்டு,  இப்போது திடீரென பிரதமருக்கு,  ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறி விக்க வேண்டும் என்று தமிழக  முதலமைச்சர் கடிதம்  எழுதியிருக்கிறார் என்றால்  ஏன் இந்த இரட்டைவேடம் -  முன்னுக்குப் பின் முரண்பாடு என்று  தமிழகமக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
கூடங்குளம் அணுமின் நிலை யத்தைத் தொடங்கும்போது வாயை மூடிக் கொண்டிருந்து விட்டு,  பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து,  அத்திட்டம் முடிவடைகின்ற நேரத்தில்  அந்தத் திட்டம் கூடாது  என்று எதிர்ப்பது எப்படியோ, அப்படித்தான்  சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டபோது வாயை மூடி மௌனமாக இருந்துவிட்டு,  தற்போது பல கோடி ரூபாய்களைச் செலவழித்து  முடித்து விட்ட நிலையில்  ராமர் பாலம்  என்ற  பெயரைப் பயன்படுத்தி முட்டுக் கட்டைபோட நினைப்பது சரிதானா -  தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏற்றது தானா -   அறிவியல் ரீதியாக ஏற்புடையது தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  அதனால்தான்  நமது கழக  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  திருமதி சோனியா காந்தி அவர்களையும், பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங் அவர்களையும் நேரில் சந்தித்து சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் முடித்திட உதவிட வேண்டு மென்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.  கழகத்தின் சார்பில்  நானும்  அந்தக் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆரிய மாயை
அதேநேரத்தில் ஏதாவதொரு கற் பனைக் காரணத்தை முன்வைத்து, இத்திட்டத்திற்கு ஊறுவிளைவிக்க நினைப்போர் யார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.   அவர்கள் கொள்கைக் குழப்பவாதிகளா? தமிழ் நாட்டின்  பொருளாதார வளர்ச்சிக்கு குழி தோண்டும் குதர்க்க வாதிகளா? என் செய்வது? ஆரிய மாயை - எழுதிய அண்ணாவின் கனவையே அழிக்கத் துடிக்குதே ஆரியமாயை!
அன்புள்ள,
மு.க.

கருத்துகள் இல்லை: