நேபாளில் சீனாவிற்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டதாக திபெத் மதத்தலைவர் தலாய்லாமாவின் தூதரை காத்மாண்டு பொலிசார் கைது செய்தனர். நேபாளில் திபெத் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அகதிகளாகதங்கியுள்ளனர். இந்நிலையில் திபெத் அகதிகள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்சிக்கு கலந்து கொள்வதற்காக திபெத் மதத்தலைவர் தலாய்லாமாவின் தூதர் தைய்லி லாமா (55) காத்மாண்டு வந்திருந்தார்.
அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது நேபாளில் வரும் 31-ம் தேதி அமையவுள்ள புதிய அரசியலமைப்புசட்டத்தில் திபெத்தியர்களுக்கும் உரிமை வழங்கி, அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . ஏற்கனவே சீனா, தலாய்லாமாவுடன் நேபாளம் எந்த வகையில் தொடர்பு கொள்ளக்கூடாது என கூறியிருந்தது.
இந்த சூழ்நிலையில் அவரது தூதர் பேசியிரு்ப்பது தவறான பிரசாரத்தினை ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. இதனால் தைய்லி லாமாவை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருடன் தனிச்செயலர் சுபாஷ் ஆச்சார்யா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக