சனி, 12 மார்ச், 2022

இமயமலை மர்ம சாமியார் இவர்தானா? உண்மையை போட்டுடைத்த CBI..!

tamil.goodreturns. :  இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தையில்

ஒன்றான தேசிய பங்கு சந்தையில் நடந்த முறைகேடுகள், பங்கு சந்தை முதலீட்டாளர்களிடையெ பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இன்றும் முக்கிய எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் தேசிய பங்கு சந்தையில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளும் இருந்து வருகின்றது.
இப்படி ஒரு மாபெரும் நம்பகமான எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் NSEயில் நடந்த மோசடிகள், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
அதிலும் நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் அனைத்தும் ஒரு சாமியாரின் முடிவினைக் கேட்ட பிறகு அறிவிக்கப்பட்டவை என்பது தான் முதலீட்டாளர்களை இன்னும் அதிர வைத்தது.
மர்மமான இமயமலை சாமியார்   

என்.எஸ்.இயின் நிர்வாக இயக்குனராக 2013 - 2016 வரையில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, மர்மமான இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டுக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி தரப்பு வாதம் கூறியது. குறிப்பாக என்.எஸ்.இயின் முக்கிய முடிவுகள் அனைத்தும் யாரோ ஒரு இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டு நடந்துள்ளது. அனுபவமில்லாத ஆனந்த் சுப்ரமணியன் பணியமர்த்தல் என்எஸ்இ ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது.
யார் அந்த இமயமலை யோகி
யார் அந்த இமயமலை முறைகேடு வழக்கில் யார் அந்த இமயமலை யோகி என்ற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த இமயமலை சாமியார் என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் ஆனந்த் சுப்ரமணியனை கைது செய்து டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவள் ஒரு ஆண்..என்னால் வாழ முடியாது..’ உச்ச நீதிமன்றத்தை மிரள வைத்த பாலியல் உறவு வழக்கு..

 tamil.asianetnews.com - Raghupati R  :  தனது மனைவிக்கு ஆண் பிறப்புறுப்பு இருப்பதால் அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும் என்ற ஆணின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
முதலில் மனுவை விசாரிக்கத் தயங்கிய நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய பெஞ்ச், அந்த நபர் தனது மனைவிக்கு ஆண்குறி மற்றும் கருவளையம் இருப்பதாக மருத்துவ அறிக்கையை வெளிப்படுத்தியதை அடுத்து,
மனைவியிடம் பதில் கேட்டனர். ஒரு குறைபாடுள்ள கருவளையம் என்பது ஒரு பிறவி கோளாறு ஆகும்.
இதில் ஒரு திறப்பு இல்லாத கருவளையம் யோனியை முழுமையாகத் தடுக்கிறது.
மூத்த வழக்கறிஞர் என்.கே. மோடி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 (ஏமாற்றுதல்) இன் கீழ் ஒரு கிரிமினல் குற்றம், மனைவி "ஆணாக" மாறியதால் செய்யப்படுவதாக பெஞ்ச் முன் கூறினார்.

பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை – சர்ச்சை தகவல்களால் மெளனம் கலைந்த நாடுகள் – முழு விவரம்

BBC - Tamil :  பாகிஸ்தான் வான் பகுதியில் 124 கி.மீ ஊடுருவி அங்குள்ள மண்ணில் விழுந்த இந்திய ஏவுகணை, தற்செயலாக நடந்த விபத்து என்று கூறியிருக்கிறது இந்திய அரசு.
நடந்த சம்பவத்துக்கு இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகக் கூறும் அரசு, அது குறித்து விசாரிக்க உயர்நிலைக்குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் என்ன நடந்தது?
முன்னதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அழைத்து தங்கள் நாட்டு வான் பகுதியில் விழுந்த இந்திய ஏவுகணை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
பயணிகள் விமானங்களுக்கும் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்துமாறும் அதன் தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.

ராகுல் காந்தி குறித்து சர்ச்சை கருத்து! அமெரிக்கா நாராயணன் மீது நடவடிக்கை.. கே.எஸ் அழகிரி

 Vigneshkumar  -   Oneindia Tamil  : சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து அமெரிக்கா நாராயணன் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு வலுவான கம்பேக்கை கொடுக்க முடியும் என 5 மாநில தேர்தலைச் சந்தித்த காங். கட்சிக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தத் தோல்வி காங்கிரஸ் கட்சியில் தலைமை குறித்த பேச்சுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ள நிலையில், பலரும் தலைமை குறித்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Social media-வில் வன்மக் கருத்துகளை பதிவிட்டால்..” : முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!

 கலைஞர் செய்திகள் - விக்னேஷ்  : குற்றங்களின் விழுக்காட்டைக் குறைப்பது அல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
குற்றங்களை தடுப்பது மட்டுமல்லாமல், குற்றவாளிகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது போலிஸாரின் கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் இறுதி நாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற- மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அமைந்திருக்கிறது.
எல்லோரும் மனம் திறந்து பல்வேறு கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள். அரசுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் சொல்றதா இருந்தா- இந்த ஆட்சி சரியான திசையை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது என்பதை- உங்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன்.

துணை நடிகை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்.. சென்னையில் .. இருவர் கைது .

மாலைமலர் : சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் பகுதியில் சினிமா துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் துணை நடிகை வீட்டில் இருந்தபோது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனடியாக துணை நடிகை வெளியில் சென்று பார்த்த போது அங்கு 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்பதற்குள் இருவரும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தனர்.

கார்த்திகை செல்வனின் நேர்பட பேசு நிகழ்ச்சியால் வசமாக சிக்கிய கொலை குற்றவாளி கோகுல்ராஜ்

 Karthigaichelvan  :  வணக்கம் நண்பர்களே...
உங்கள் அத்தனை பேரின் அன்புக்கும், வாழ்த்துக்கும்  நன்றி !
 கோகுல்ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பில் "நேர்படப்பேசு" நிகழ்ச்சி சாட்சியமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது... குரலற்றவர்களின் குரலாக இயங்கி வரும்  புதிய தலைமுறை குழுவுக்கான அடையாளம் இது.  உண்மையின் பக்கம் நின்று  பேசும் பல ஊடகவியலாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் நிகழ்வு இது....
 கோகுல்ராஜ் வழக்கின் சாட்சியம் என்பது ஊடக அறத்திற்கான ஒரு சாட்சியமும் கூட...

மாயாவதி : எங்கெல்லாம் சமாஜ்வாதி முன்னணியில் இருக்கிறதோ அங்கெல்லாம் பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும்.

 Vijayasankar Ramachandran :  தேங்க் யூ பெஹன்ஜி!
வரவிருக்கும் ஃபிரண்ட்லைன் இதழில் பத்திரிக்கையாளர் நளின் வர்மா எழுதியிருக்கும் கட்டுரையிலிருந்து சில துளிகள்:
பிஎஸ்பி தொண்டர் ரன்வீர் ஜாத்தவ்: “தேர்தலில் பஹுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாகர் இருங்கள் என்று சொன்ன பெஹன்ஜி (மாயாவதி), எங்கெல்லாம் சமாஜ்வாதி கட்சி தேர்தல் களத்தில் முன்னணியில் இருக்கிறதோ அங்கெல்லாம் நாம் பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும்.
பட்டதாரி இளைஞரான முகேஷ் குமார்: “எங்கள் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள்தான் முன்னணியில் இருக்கிறது.
அகிலேஷ் வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். நான் ஏன் சைக்கிளுக்கு வாக்களிக்கக் கூடாது?”
ரன்வீர்: “மாயவதிக்கு கணிசமான தொகுதிகள் கிடைத்தால் அமைச்சரவை அமைப்பதிலும், பஹுஜன்களுக்கு ஆதரவான கொள்கைகளை வகுப்பதிலும் அவர் பிஜேபிக்கு கட்டளையிட முடியும்.”

வெள்ளி, 11 மார்ச், 2022

தெலுங்கானா முதலவர் சந்திரசேகர ராவ் ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்ட காணொளி

 Noorul Ahamed Jahaber Ali -  e Oneindia Tamil  :  ஐதராபாத்: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவுக்கு இடது கையில் வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் சோர்வுடன் காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், தலைநகர் ஐதராபாத்தின் சோமாஜிகுடாவில் அமைந்துள்ள யசோதா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது மனைவி ஷோபா, மகள் கவிதா, மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் ஆகியோர் உடன் சென்றனர்.

உபியில் 10 அமைச்சர்கள் படுதோல்வி.. 47 இடங்களை இழந்த பா.ஜ.க : உபி யில் செல்வாக்கை இழந்த யோகி!

 கலைஞர் செய்திகள் : உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருந்தாலும் 10 அமைச்சர்கள் படுதோல்வியடைந்திருப்பது யோகிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 7 கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில், 273 தொகுதிகளை வெற்றி பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ.க ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தாலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட வாக்கு சதவீதம் கடுமையாக சரித்துள்ளது.

மம்தா பானர்ஜி : காங்கிரஸ் விரும்பினால் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் இணையலாம்-

 மாலைமலர் : சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024ல் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை என மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:-
கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட மூன்று மாதங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது போதும்.
உத்தர பிரதேச தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருட்டு மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சோர்ந்துவிடாமல், அந்த இயந்திரங்களை தடயவியல் சோதனை நடத்தும்படி வலியுறுத்த வேண்டும். அகிலேஷ் யாதவின் வாக்கு சதவீதம் இந்த முறை 20 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை - கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்கிற விஷயம்?

May be an image of 1 person, outdoors and monument

Arul Raj :  ராஜீவ் கொலைக்குற்றாவாளி பேரறிவாளனின்  ஜாமீன் விசயத்தில் திமுக இனியாவது  உஷாராக வேண்டும்…
பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைக் கண்டு திமுகவினர் ஆர்ப்பரிக்கின்றனர். மு க ஸ்டாலின் செம கெத்து, மாஸூ என்றெல்லாம் மார் தட்டுகின்றனர். ஆனால் இவர்கள் எல்லாம் ஒரு முக்கியமான வரலாற்று விஷயத்தை அடியோடு மறந்து விட்டார்கள்.
கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்கிற விஷயம்தான் அது.
முதலில் பேரறிவாளன் விவகாரத்தை விட்டுவிட்டு இலங்கையின் புலிகள் விவகாரத்தை பார்ப்போம். பிரபாகரன் தலைமையிலான புலிகள் எப்போதுமே திமுக தலைவர் கலைஞர் அவர்களைக் கண்டு கொண்டதே கிடையாது. அவர்கள் நெருக்கம் காட்டியது எல்லாமே அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரிடம் தான்.
புலிகள் திமுகவை முழு அளவில் எப்போதுமே மதித்ததும் கிடையாது. நம்பியதும் கிடையாது.

பிரியங்கா தேர்தலில் போட்டியிட்டிருந்தால்...

பிரியங்கா தேர்தலில் போட்டியிட்டிருந்தால்...

மின்னம்பலம் :உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக பெற்ற மிகப் பெரிய வெற்றியைப் போலவே காங்கிரஸ் பெற்ற மிகப்பெரிய தோல்வியும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
403 இடங்கள் கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில்
காங்கிரஸ் கட்சி வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். உத்தரபிரதேச மாநில தேர்தல் பணிகளை அவரே முழுமையாக கவனித்தார்.

கூட்டு பாலியல் பலாத்காரம்.. பாஜக ஆட்சிக்கு எதிராக கொந்தளிப்பு நடந்த உ பி - ஹத்ராசில் பாஜக அமோக வெற்றி

 Logi  - e Oneindia Tamil    : முழு நாட்டையே கலங்க வைத்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்த ஹத்ராஸில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
2020 செப்டம்பர் மாதம் 14-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பட்டியலின இளம்பெண் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால், மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றுகிறார்கள். ஆனாலும் அந்த பெண் சிகிச்சை பலனின்றி 2020 செப்டம்பர் 29-ம் அப்பெண் உயிரிழந்தார்.

107 ஆண்டுகளுக்கு பிறகு அண்டார்டிகா பனிப்பாறைக் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு

May be an image of text that says '107 ஆண்டுகளுக்கு பிறகு அண்டார்டிகா பனிப்பாறைக் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு'

Chinniah Kasi  : தீக்கதிர்  :  1915 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கி காணாமல் போன அண்டார்டிக் ஆய்வாளர் சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் என்டூரன்ஸ் கப்பல் 107 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.  
கடல்சார் வரலாற்றில் மிக உயரமான கப்பல் விபத்துகளில் ஒன்று அண்டார்டிகா கடற்கரையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
1915 ஆம் ஆண்டில் அண்டார்டிக் கண்டத்தை கடக்க ஒரு பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது எண்டூரன்ஸ் கப்பல் பனிக்கட்டியால் நசுக்கப்பட்டது.  
தற்போது இந்த கப்பலை கண்டறிய 2022 பிப்ரவரி ஒரு பயணக் குழு, பெருமளவில் சேதமடையாத நிலையில் இந்த கப்பலை அப்படியே 3,008 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்துள்ளது.

வியாழன், 10 மார்ச், 2022

காங்கிரஸ் கட்சிக்கு RSS,VHP, ABVP, பஜ்ரங்தள் போல் targeted vote bank என்று எதுவும் இருக்கிறதா?

UP Elections: Priyanka Gandhi To Address Congress Rally In Mahoba,  Bundelkhand

விஜய்  :  2014-ல் இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய போது கூட பஞ்சாபில் அருண் ஜெட்லியை எதிர்த்து போட்டியிட்ட அமரீந்தர் சிங் 1 லட்சம் ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றார். 2017- ம் ஆண்டு அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தார் அமரீந்தர் சிங். நவ்ஜோத்சிங் சித்து பேச்சை கேட்டு அவரை மாற்றி சன்னியை முதல்வராக்கி பிறகு அமரீந்தரர் சிங் கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி இன்று அவரும் தோற்று காங்கிரஸ்ம் தோற்று விட்டது.

திமுக எம்.பி. என் ஆர் இளங்கோவின் மகன் விபத்தில் உயிரிழப்பு!

 மின்னம்பலம் : திமுக மாநிலங்களவை எம்.பி. என்.ஆர்.இளங்கோவின் மகன் இன்று அதிகாலை கார் விபத்தில் உயிரிழந்தார்.
திமுக மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ். வயது 21. சென்னை விஐடி கல்லூரியில் சட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். ராகேஷின் நண்பர் ஈரோட்டைச் சேர்ந்த வேத விக்னேஷ். இவரும் சட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவருக்கும் வயது 21.
இருவரும், TN 02 CC 1000 என்ற பதிவெண் கொண்ட மகேந்திரா தார் ஜீப்பில், சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றுள்ளனர். ராகேஷ் ஜீப்பை ஓட்டியுள்ளார்.

4 மாநிலங்களில் பாஜக ஆட்சி- உபி . உத்தரகாண்ட் கோவா மணிப்பூரில் . பஞ்சாபில் ஆம் ஆத்மி அசுர வெற்றி

 மாலைமலர் : 5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது.
காலை 8.30 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் வெளிவரத் தொடங்கின. 5 மாநில தேர்தலில் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச தேர்தல் முடிவைத்தான் நாடு முழுவதும் மக்கள் அதிகமாக எதிர்பார்த்தனர்.
உத்தரபிரதேசத்தில் இந்த தடவை 4 முனைப்போட்டி ஏற்பட்டு இருந்தது. ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அப்னாதளம், நிசாத் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.
4 முனைப்போட்டி ஏற்பட்டாலும் ஆட்சியை கைப்பற்றுவதில் பா.ஜனதாவுக்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையில்தான் நேரடி போட்டி நிலவியது. இதில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை தொடர்கிறது.
ஓட்டு எண்ணிக்கையின் போது உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா கட்சி தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

தமிழ்நாட்டை ஏற்கனவே பல ஒவைசிக்களும் மாயாவதிகளும் சீரழித்துவிட்டார்கள் - எல் ஆர் ஜெகதீசன்

May be an image of 4 people
May be an image of 5 people, people standing and indoor

LR Jagadheesan  : “தமிழ்நாட்டிலயும் ஒரு மாயாவதி ஒரு ஒவைஸி இருந்தா போதும் … சோலிய முடிச்சிர்லாம்” ஆதிஷா விநோத்.
தமிழ்நாட்டிலும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே செய்யவேண்டிய சோலிகளை ஏறக்குறைய முடித்தும் விட்டார்கள்.

2001 தேர்தலில் தமிழ்நாட்டின் ஒவைசிகள் பாபர் மசூதியை இடிக்கும் கரசேவைக்கு ஆதரவாக அனைத்திந்திய அளவில் ஒன்றிய அரசின் கூட்டத்திலேயே கர்ஜித்த “பெண் சிங்கத்தை”
மதசார்பற்ற மாணிக்கம் என்று தலைமேல் தூக்கி கொண்டாடி
தேர்தலில் நிற்கவே நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட குற்றவாளியை தமிழ்நாட்டின் முதல்வராக்கி
நம் சமகால தமிழ்நாட்டின் அரசியல்/சமூக/பொருளாதார சீரழிவை வேகப்படுத்தும்

பேரறிவாளனுக்கு கிடைத்த ஜாமீன் மகிழ்ச்சியடையக் கூடியதா..!??

 Kandasamy Mariyappan : பேரறிவாளனுக்கு கிடைத்த ஜாமீன் மகிழ்ச்சியடையக் கூடியதா..!??
எனது பார்வை  !
என்னவோ, பழனி முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரை சென்று கொண்டு இருந்தவர்களைப் பிடித்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சேர்த்தது மாதிரி எல்லாரும் ஓவர் பில்டப் கொடுக்கின்றனர்.!
இந்தியாவில் ஏதேனும் உருப்படியாக ஒரு வேலையாவது செய்கிறார்களா?
லஞ்சம் வாங்கியவர்களை பிடித்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களை தண்டிக்க சரியான ஒரு சட்டம் இல்லை.!
பல மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்சனைகளை தீர்க்க வக்கில்லை.!
சுண்டக்கா மாதிரி இருக்கிற இலங்கை நம் மீனவர்களை தூக்கி கொண்டு போவதை தடுக்க திராணி இல்லை.!
ஒவ்வொரு நீதிமன்றத்திலும் தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து முடிக்க தெம்பில்லை.!

Election Results 2022 Live 5 மாநில தேர்தல்:வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

 மின்னம்பலம் : உத்தரப் பிரதேசம் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
பஞ்சாப், கோவா உத்தரப் பிரதேசம், மணிப்பூர் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.
இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை தேர்தல் நடந்தது. இங்கு 60 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவித்தன. இங்கு ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், ராஷ்ட்ரிய லோக் தளம், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
பாஜக சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராகவும் சமாஜ்வாதி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ் முதல்வர் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

மணிமுத்தாறு பேரூராட்சி தலைவியாக ஒரு தேயிலை தொழிலாளியும்.. திமுகவின் மற்றோரு சாதனை

“தேயிலை தொழிலாளியும் சேர்மன் ஆக முடியுமென்றால் அது தி.மு.கவால் மட்டும்தான்”: பேரூராட்சி தலைவி நெகிழ்ச்சி!

கலைஞர் செய்திகள்  :  சேர்மன் ஆக முடியுமென்றால் அது தி.மு.கவால் மட்டும்தான்”: பேரூராட்சி தலைவி நெகிழ்ச்சி!
“தேயிலைத் தோட்டத் தொழிலாளியும் உயர்பதவிக்கு வர முடியுமென்றால் அது தி.மு.கவால் மட்டும்தான் சாத்தியம்” என மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி தெரிவித்துள்ளார்.
தி.மு.க ஆட்சியில்தான் ஒரு சாதாரண மனிதர்கூட உயர் பதவிக்கு வரமுடியும் என மணிமுத்தாறு பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளி அந்தோணியம்மாள் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகத்தில் 45 கோடி மோசடி 11 பேர் கைது!

 மின்னம்பலம் : சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் நிரந்தர வைப்பு நிதியில் ரூ.45 கோடி பணம் மோசடி செய்த விவகாரத்தில் இந்தியன் வங்கி கிளை முன்னாள் மேலாளர் உட்பட 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, நிரந்தர வைப்பு நிதியாக ரூ.100 கோடி செலுத்தப்பட்டது.

புதன், 9 மார்ச், 2022

இஸ்லாமிய திருமண விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தங்களின் ( Muslim Marriage Divorce and Acts - MMDA Reform)

No photo description available.

Sharmila Seyyid  :  சட்டம் பயின்ற/ பயின்று கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தவர்களுக்கும், மார்க்கம் பயின்ற/ பயின்று கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தவர்களுக்கும் இஸ்லாமிய திருமண விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தங்களின் ( Muslim Marriage Divorce and Acts -  MMDA Reform) அவசியம் குறித்து அறிவூட்டும் இரு நாள் வதிவிட நிகழ்வொன்று கொழும்பில் நடந்தபோது நானும் அங்கு இருந்தேன்.
”எங்களுக்கு மெய்யாகவே இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டம் குறித்துத் தெரியவில்லை” என்பதை பெரும்பாலான சட்டம் படித்தவர்களும், மார்க்கம் படித்தவர்களும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதைக் காண முடிந்தது.
அனுபவமிக்க சட்டத்தரணிகளையும், மார்க்க அறிஞர்களையும் கொண்டு இவர்களுக்கான முதல்நாள் நிகழ்வு நெறிப்படுத்தப்பட்டிருந்தபோதும் இரண்டாம் நாள் நிகழ்வின் கலந்துரையாடல் பகுதியில் சில இளைஞர்கள் எழுப்பிய கேள்விகள் பெரும் ஏமாற்றத்தையே அளிப்பதாக இருந்தன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

 மாலைமலர் : சிறை விடுப்பில் இருந்தபோது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதற்கிடையே விடுதலை கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் ஏற்கனவே பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமின் வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது.