புதன், 21 ஆகஸ்ட், 2019

அமித் ஷாவின் ஷேரபுதீன் தம்பதிகள் கொலை வழக்கு .. பழிவாங்கப்படும் சிதம்பரம் ... வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?

இது முன்னாள் உள்துறை அமைச்சர் மீது இந்நாள் உள்துறை அமைச்சரின் கணக்கு தீர்க்கும் படலம். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருக்கும்போதுதான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அன்றைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மீது ஷொரபுதீன், அவரது மனைவி கவுசர் பி போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. 2010 ஜூலை மாதம் அமித் ஷா மீது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் பதவியை இழந்த அமித் ஷா, காந்தி நகர் சிபிஐ ஆபீசில் சரண்டர் ஆனார். அதன் பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்? மின்னம்பலம் : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்
முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு நேற்று (ஆகஸ்டு 20) நிராகரிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை சிபிஐ, அமலாக்கத்துறையினர் சிதம்பரத்தின் டெல்லி வீட்டுக்கு சென்றனர். அங்கே அவர் இல்லாததால் நோட்டீசை ஒட்டிவிட்டுச் சென்றனர்.
சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு இன்று (ஆகஸ்டு 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணிக்கு மீண்டும் சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரத்தின் ஜோர் பக் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால் இன்று காலையும் ப.சிதம்பரம் அங்கே இல்லை. இன்று காலை சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணாவின் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுவை அவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பினார். அதனால் முன் ஜாமீன் தொடர்பான சிக்கல் தொடர்கிறது.
இந்நிலையில் டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, “இது முன்னாள் உள்துறை அமைச்சர் மீது இந்நாள் உள்துறை அமைச்சரின் கணக்கு தீர்க்கும் படலம். ப.சிதம்பரம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக 2008 நவம்பர் முதல் 2012 ஜூலை வரை இருந்தார்.

ப.சிதம்பரம் வெளிநாடு செல்லத் தடை!

ப.சிதம்பரம் வெளிநாடு செல்லத் தடை!மின்னம்பலம் : முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் தொடர்பான மனுவை நீதிபதி ரமணா விசாரிக்க மறுத்து, தலைமை நீதிபதி அமர்வுக்குப் பரிந்துரைத்த நிலையில், ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அமலாக்கத் துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம் அந்த தடையை நீட்டித்தும் வந்தது. ஆனால் நேற்று (ஆகஸ்ட் 20) அதிரடியாக முன் ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்துவிட்டது. இதனால் சிதம்பரத்தைக் கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தீவிரம் காட்டி வருகிறது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்தில் ப.சிதம்பரம் வீட்டுக்கு விரைந்த சிபிஐ 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று அவரது வீட்டுச் சுவரில் சம்மன் ஒட்டிவிட்டுச் சென்றது.
இதற்கிடையே சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் காலை 10.30 மணிக்கு நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது.

அணு ஆயுத கொள்கையில் தேவையில்லாமல் உலக நாடுகளை பகைத்து கொள்கிறாதா இந்தியா .

ஸ்பெல்கோ : ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் அணு ஆயுத கொள்கை மாறலாம். அணு ஆயுத பயன்பாடு இல்லை என்பதுதான் இப்போது கொள்கை. எதிர்காலத்தில் அது மாற வாய்ப்பு இருக்கிறது, என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
;அணு ஆயுதத்தை பயன்படுத்தும் கொள்கையை மாற்றிக்கொள்ள தயார் என்று இந்தியா கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது இந்தியாவிற்கு எதிராகவே திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் பிரச்சனை நிமிடத்திற்கு நிமிடம் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யா கூட நடுநிலையை எடுத்தது அமெரிக்க பாகிஸ்தான் சீனா நாடுகளின் நிலைக்கு ஆதரவகவே கருதப்படுகிறது >காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல் சரியா தவறா என்று முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நீதிபதி வைத்தியநாதன் கிறிஸ்தவ மிஷனரிகள் பற்றிய வெறுப்பு பேச்சை மீளப் பெற்றார்

Chennai high court : கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன என்ற கருத்தையும் நீக்குகிறோம்
tamil.indianexpress.com : சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் மாணவ – மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு, மைசூரு, கூர்க் போன்ற ஊர்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதில் 7 பேராசிரியர்கள் இவர்களை சுற்றுலா அழைத்து சென்றனர். கல்வி சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, இரு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் 8 மாணவிகள் பேராசிரியரருக்கு எதிராகவும், 3 பேராசிரியர்கள் குற்றசாட்டுக்கு உள்ளான பேராசிரியருக்கு ஆதரவாகவும் கல்லூரி சார்பில் அமைக்கப்பட்ட விசாகா குழுவில் சாட்சியம் அளித்தனர். அதன் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக பேராசிரியர்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இளம்பெண் உடல் தண்டவாளத்தில் வீச்சு... உடன் வந்த இளைஞர் யார் ? வேலூர்

incident நக்கீரன் -ாஜ்ப்ரியன்  :  வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் ரயில் நிலையம் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு உடல் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு உடல் வீசப் பட்டிருந்துள்ளது. இதனை ரயில்வே பாதையில் ஆய்வு மேற்கொண்ட ஊழியர்கள் பார்த்துள்ளனர். அவர்களைப்போல் அந்த வழியாக சென்ற பொதுமக்களில் சிலர் பார்த்துள்ளனர். இதுப்பற்றி உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்துக்கு தகவல் கூறினர். அந்த தகவல் கிடைத்ததும் போலிஸார் வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இறந்த பெண் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் யார் என சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் ஒரு சிசிடிவி கேமராவில், தற்போது கொலை செய்யப்பட்ட பெண்ணோடு ஒரு இளைஞர் சென்றது பதிவாகியுள்ளது. அந்த இளைஞர் யார் என போலீசார் தேடிவருகின்றனர்.<

3 மாதத்தில் சரிந்த ஜெகன் மோகன் ரெட்டியின் செல்வாக்கு!.. சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களை ஜெயா பாணியில் கடாசி வருகிறார்

வெப்துனியா :  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து டிவிட்டரில் #YSJaganFailedCM என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வென்று மாபெரும் வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார. தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பு போன்ற சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததால், இப்போது வெளிநாட்டு நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய தயாராக இல்லை என கூறப்படுகிறது.எது தேவை எது தேவையில்லை என்ற யோசனையில்லாமல் கண்மூடித்தனமாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு செய்த திட்டங்கள் அனைத்தையும் பயனற்றதாய் ஆக்கி வருகிறார்.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்’ ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழாவில் - முகுல் வாஸ்னிக் பேச்சு

'தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்’ ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழாவில் - முகுல் வாஸ்னிக் பேச்சு  தினத்தந்தி : ‘நாடாளுமன்ற   தேர்தல் போலவே தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’ என்று முகுல் வாஸ்னிக் பேசினார். சென்னை, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75-வது ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். காங்கிரஸ் தேசிய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, செயல் தலைவர் எச்.வசந்தகுமார், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா உள்பட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கலந்துகொண்டு, ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

காஷ்மீரிகளின் பக்கமாக நாம் ஏன்? எதிர்நோக்கும் அபாயங்கள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி .. வீடியோ

கிருபா முனுசாமி : காஷ்மீரின் மீதான இந்திய ஆதிக்கத்தை கொண்டாடிக்கொண்டே, இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டாடுவது போன்றதொரு மூடத்தனம் இல்லவே இல்லை.
உண்மையில் இது சுதந்திர நாடு என்று அழைக்கப்பட தகுதியுடையது தானா? ஒருவித ஆதிக்கத்தை ஆதரித்தபடியே மற்றொரு ஆதிக்கத்தை எதிர்க்க முடியாது. ஆதிக்கத்தின் வடிவம் மாறலாம். ஆனால், தன்மை மாறுமோ?
While celebrating the Indian occupation of Kashmir on one hand, how could you celebrate Indian independence on the other? Does this country even have the moral right to be called independent? Kashmir is landlocked, its occupation has happened in all our names, casteism and communalism has taken a new shape ever, freedom of speech and expression is curtailed, right to choice of food is unexercisable, democracy is dead, secularism is murdered in all possible ways, and I wonder what independence you are celebrating!
"உண்மையான சுதந்திர இந்தியா என்பது ஜாதியத்திலிருந்து விடுதலையடைந்ததாக இருக்க வேண்டும்" என்று நம்பினார் பெரியார். இந்திய சுதந்திரம் என்பது ஆங்கிலேயர்களிடமிருந்த ஆட்சி இந்தியாவில் உள்ள பிராமணர் உள்ளிட்ட முற்பட்ட சாதியினரின் கைகளுக்கு மாறிய ஒரு சம்பவம் தானே ஒழிய, அது ஜனநாயகத்தின் வருகை அல்ல; பிராமணிய நாயகத்தின் வெற்றி என்று வர்ணித்த பெரியார், ஆகஸ்ட் 15, 1947-ஐ ஒரு துக்க நாள் என்றும் அழைத்தார்.

2 மணித்தியாலங்களுக்குள் சி பி ஐ செயலகத்தில் வருமாறு உத்தரவு ... தேடிச்சென்ற சிபிஐ: சிதம்பரம் தலைமறைவு?

மின்னம்பலம் :
தேடிச்சென்ற சிபிஐ: சிதம்பரம் தலைமறைவு?
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் ஆகஸ்டு 20 மாலை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மறுக்கப்பட்டது. உனடியாக ப.சிதம்பரம் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை மேல்முறையீட்டுக்காக அணுகினார்.
இதற்கிடையில் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்த சில மணித்துளிகளில் ஆகஸ்டு 20 மாலை 7 மணிக்கு சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய மத்திய அரசின் அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் டீம் டெல்லியில் ஜோர் பக் பகுதியிலுள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குச் சென்றனர்.
டெல்லி உயர் நீதிமன்றம் தனது முன் ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்து, இதை அவசரமாக விசாரிக்குமாறு கோரப்பட்டது. சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவரச வழக்காக எடுத்துக் கொள்ள வலியுறுத்தி தனது சக்தி முழுவதையும் பயன்படுத்தியும் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. உச்ச நீதிமன்றப் பதிவாளர், ‘இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது. நாளை (ஆகஸ்டு 21) காலை வாருங்கள்’ என்று கூறிவிட்டார்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

அமித் ஷா : சிதம்பரத்தை உடனே கைது செய்யாதது ஏன்? கடுகடுத்த அமித் ஷா ..

amith shap.chidambaram`உடனே கைதுசெய்யாதது ஏன்?' - ப.சிதம்பரம் விவகாரத்தில்  கடுகடுத்த அமித் ஷா . 
vikatan.com - கலிலுல்லா.ச - ஆர்.பி.: `ஜாமீன் வாங்கியிருந்தால் விட்டுவிடலாம். அப்படி இல்லாதபோது ஏன் கைது செய்யவில்லை?’ ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிதம்பரமும் இடம்பெற்றிருப்பதால், அவரும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
அதேபோல, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கையும் கருத்தில்கொண்டு, இரண்டு வழக்கிலும் தன்னைக் கைது செய்யக்கூடாது என்று டெல்லி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார் சிதம்பரம்.

டெல்லி தரியாகன்ச் பழைய புத்தக கடைகள் மூடப்படுகிறது? ஆர்வலர்கள் அதிர்ச்சி!


ரீகன் நெ : இதை படித்தவுடன் அதிந்து விட்டேன தோழர்களே... டெல்லி தரியாகஞ்ச் புத்தக சந்தை (Kitab Bazar)......
20 வருடங்களாக டெல்லி சென்று வருகிறேன், எப்பொழுது டெல்லி சென்றாலும நான் திரும்புவது ஞாயிறு இரவு ரயிலில் தான். இந்த ஞாயிறுக்காக பல நேரம் நான்கு ஐந்து நாட்கள் டெல்லியை சுற்றியலைந்து காத்திருந்ததும் உண்டு. யமுனைக்கரையில் ஷாஜகான்பாத் பகுதியில் பெரும் மதில் சுவர்கள் சூழ தரியாகஞ்ச் பகுதி அமைந்திருக்கும். ஞாயிறு காலை விடுமுறை நாள், அன்று வழக்கமான கடைகள் ஏதும் இருக்காது ஆனால் டெல்லி முழுவதும் இருந்து நுற்றுக்கணக்கான பழைய புத்தக வியாபாரிகள் இங்கு சாலையின் இருபுறமும் கடை போடுவார்கள்.
காலை 6 மணியில் இருந்தே மெல்ல மெல்ல வியாபாரிகள் வந்து தங்களின் புத்தகங்களை இறக்கி வைத்து கையில் தேநீர் கோப்பையுடன் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தபடி இருப்பார்கள். மெல்ல மெல்ல பெரும் தார்பாய்கள் விரித்து விதவிதமான தினுசுகளில் புத்தகங்களை அடுக்கத் தொடங்குவார்கள். ஒரு கனிம சுரங்கத்தில் தங்கம், வைரம் கிடைப்பது போல் தரியாகஞ்சு கடைகளில் மூழ்கி எழுந்தால் நிச்சயம் உங்கள் விருப்பம் போல் ஒரு புதையல் காத்துக்கிடக்கும்.

சிறகொடிந்த காதலியைப் பார்க்க 5000 மைல்கள் தாண்டி வரும் நீர்ப்பறவை! - குரோசியாவில் ஒரு எபிக் காதல்கதை

Rescued Stork Malena  and Vokic Rescued Stork Malena with Klepetanvikatan.com - அஸ்வினி.ச : மலேனாவுக்காக வோகிக் மீன்கள் பிடித்து வருவார். இலை தழைகளைக் கொண்டு வருவார். தன் 4 பிள்ளைகளைவிடவும் பாசமாகப் பார்த்துக் கொண்டார். Rescued Stork Malena with Klepetan. எனக்கு பெட் அனிமல்ஸ் பிடிக்கும், நான் விலங்கு நல ஆர்வலர் என யார் வேண்டுமானாலும் சோசியல் மீடியாவில் சொல்லிக் கொள்வது சுலபம். ஆனால், நிஜ வாழ்க்கையில் மற்ற உயிரினங்களின் மீது அளவு கடந்த அன்பு காட்டுபவர்கள் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் குரோசியாவைச் சேர்ந்த ஸ்டெஜபன் வோகிக். கடந்த 27 ஆண்டுகளாகத்தான் தத்தெடுத்த நாரையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இந்தக் கட்டுரை வோகிக் பற்றியது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கட்டுரையின் முடிவில் ஒரு அற்புதமான ரொமாண்டிக் மூவி பார்த்த உணர்வு உங்களுக்கு இருக்கும் என்பது நிச்சயம்.

வேலூரில் 40 வேளாங்கண்ணி யாத்திரிகர்களை தாக்கிய இந்து முன்னணி ரவுடிகள் வீடியோ


Shalin Maria Lawrence : வருடா வருடம் ஆகஸ்ட் மாதம் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு நடைப்பாதையாக மக்கள் செல்வது வழக்கம்.இதில் சிறப்பு என்னவென்றால் இதில் செல்லும் பாதி பேர் ஹிந்துகள்தான்.அதுவும் இல்லாமல் எந்த வித கூச்சலும் மக்களுக்கு இடையூறும் இல்லாமல் மிக அமைதியாக ஆண்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகள் இந்த பாதயாத்திரையை மேற்கொள்ளுகின்றனர்.
பொதுவாக அவர்கள் போகும் வழிகளில் அவர்களுக்கு உணவு அளித்து உபசரிப்பது ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும்தான்.
அவர்கள் தங்குவதும் தர்கா ,கோவில்களில் தான்.
இப்படி சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழுகிறது இந்த நிகழ்வு.
ஆனால் நேற்று கோலார் தங்கவயலில் இருந்து இருந்து இப்படி அமைதியாக புறப்பட்ட 40 பாதயாத்திரிகளை தமிழகத்தின் வேலூரில் கடுமையாக அடித்து தாக்கி, அவர்கள் உடமையை சூறையாடி அவர்கள் கொண்டு சென்ற சிறு மாதா சிலையை உடைத்து இருக்கிறாரார்கள் ஹிந்து முன்னணியினர்.

BBC : ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த இரண்டு முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவரது வழக்குரைஞர் மொஹித் மாத்தூர் 3 நாள் நேரம் கேட்டுள்ளார்.
அது பற்றி பரிசீலிப்பதாகக் கூறிய நீதிபதி சுனில் கௌர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.< இதற்கிடையே, தாம் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். சிதம்பரத்தின் வழக்குரைஞர் கபில் சிபல் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றப் பதிவாளரிடம் கோரியுள்ளார்.
2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.

ஏடிஎம் கார்டுகள் தேவையில்லை பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்

tamilthehindu :மும்பை வாடிக்கையாளர்கள் இனிமேல் ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதியை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்போவதாக நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் வங்கியின் கிளைகளுக்குச் செல்லாமல் தேவைப்பட்ட நேரத்தில் பணம் எடுக்க முடிகிறது. இதனால் வங்கிகளுக்கும் பணியாளர்கள் மிச்சமாகிறனர். வங்கிக் கிளைகளிலும் கூட்டம் குறைகிறது.
இதில் வசதிகள் இருந்தாலும் மோசடிகளும் நடக்கின்றன. வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களைத் திருடி போலியான பிளாஸ்டிக் கார்டுகள் உருவாக்கப்பட்டு பணம் திருடும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் ஏடிஎம் கார்டுகளை எடுத்துச்செல்ல வேண்டிய தேவையும் இருந்து வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்களின் சிரமங்களைப் போக்கும் பொருட்டு, ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் நடைமுறையை எஸ்பிஐ வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் குறிப்பிட்ட எஸ்பிஐ வங்கி கிளைகளில் இந்த வசதி பரிசோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வேளாங்கண்ணி யாத்திரிகர்கள் மீது இந்து முன்னணி வெறியாட்டம் .. மாதா சிலைக்கு செருப்பு மாலை ...

mமாதா சிலைக்கு செருப்பு மாலை; இந்து முன்னணியை சேர்ந்த சேர்ந்த 6 பேர் கைது
 nakkheeran.in - ராஜ்ப்ரியன் : கர்நாடகா மாநிலம் கே.ஜி்.எப் நகரை சேர்ந்த சூசையப்பா நகரில் வசிக்கும் தேவசகாயம் ஜோசப் தலைமையில் 40 பேர் கொண்ட கிருஸ்துவர்கள் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு மாதா சிலையை ஒரு வாகனத்தில் வைத்து பாதயாத்திரையாக வந்தனர். வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள பங்களாமேடுக்கு ஆகஸ்ட் 17ந்தேதி இரவு வரும்போது, வழியில் மடங்கிய அதேபகுதியை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பிரபு, சிவக்குமார், சிங்காரவேலன், சாமூண்டிஸ்வரன், மணி, இளங்கோவன் என 6 பேரும் பாதயாத்திரையாக வந்த குழுவிடம் தகராறு செய்துள்ளனர். அதோடு, அந்த சிறிய வண்டியை உடைத்ததோடு, மாதா சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
 மாதா சிலை மற்றும் வண்டியை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில், பாத யாத்திரை வந்த கிருஸ்துவர்கள் குழு புகார் எழுதி தந்துள்ளனர். அந்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலிசார் சம்மந்தப்பட்ட 6 பேரை கைது செய்தனர்.    அவர்களை ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கதிரவன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

வன்முறையை தூண்டுகிறது பாக்கிஸ்தான்... அமெரிக்க அதிபர் டிரம்ப் இடம் மோடி முறையீடு !


வன்முறையை, தூண்டுகிறது, பாக்.,: டிரம்ப்,  மோடி, பேச்சுதினமலர் : புதுடில்லி: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.
காஷ்மீர் விகாரத்தில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன் வந்த நிலையில் இந்தியா நிராகரித்துவிட்டது. இதையடுத்து காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி , அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஆகியோர் தொலை பேசி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
30 நிமிடம் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது./
இதில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானில் சில தலைவர்கள் வன்முறையையும், பயங்கரவாதத்தையும் தூண்டிவிடுகின்றனர். இது அமைதிக்கு உகந்தது அல்ல.இதனை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும், இரு தரப்பு வர்த்தகம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

காஷ்மீர் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் என்ன பயனை தரும்?

காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் உட்பட ஏராளமான தலைவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ள நிலையில் ,
அங்கு என்ன நடக்கறது என்பதே தெரியாமல் மர்மமான ஒரு ராணுவ அடக்குமுறை ஆட்சி நடகிறது .
காஷ்மீர் மக்களும் இந்திய மக்கள்தான் என்ற ஒரு சிறு நம்பிக்கையை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அந்த மக்களின் மனதில் விதைக்க இந்த ஆர்ப்பாட்டம் பேருதவி செய்யும் ..
இவர்களின் டெல்லி ஆர்ப்பாட்டம் நிச்சயம் சர்வதேசத்தின் கவனத்தை பெறும்...
Ramasamy Jayaprakash வடஇந்தியாவில் உள்ள மக்களுக்கு அதீத பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாடு உள்ளது.
இந்த விஷயத்தை உணர்வு பூர்வமாக அணுகும் வடஇந்தியர்களிடம் கெட்ட பெயர் எடுக்க கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூட பாஜக அரசு தாக்கல் செய்த இந்த மசோதாவை எதிர்க்க முடியாமல் குழம்பியது.
ஆனாலும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது.

இலங்கை 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா... இறுதி யுத்த தளபதி .

_108365160_c14ccbad-bcdb-4b1f-a13c-30f68cf7acef ஷவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - போர்க்குற்றப் புகார் ஷவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - போர்க்குற்றப் புகார் 108365160 c14ccbad bcdb 4b1f a13c 30f68cf7acefஷவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – போர்க்குற்றப் புகார்  BBC  :  இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
கெடெட் அதிகாரியாக 1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் இணைந்துக் கொண்ட ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமையாற்றியிருந்தார். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவின் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.

பிலிம் நியூஸ் ஆனந்தனின் அந்தப் பொக்கிஷங்கள் கேட்பாராற்று தரமணி பிலிம் சிட்டியில்...

பாண்டியன் சுந்தரம் : < "என் குழந்தை என்னை விட்டுப் போவது போல
கலங்கினேன்"-தமிழ்சினிமாவின் தகவல் களஞ்சியம் பிலிம்நியூஸ் ஆனந்தன்! அப்போது சென்னை இராயப்பேட்டை நியூ காலேஜ் அருகில் குடியிருந்தார் பிலிம்நியூஸ் ஆனந்தன். அவர் வீட்டுக்கு
சென்று வராத சினிமா நிருபர்களே இருக்க முடியாது. பலதகவல்களுக்காக, பலமுறை அவரைத் தொந்தரவு
செய்தாலும் ஒவ்வொரு முறையும் முகம் சுளிக்காமல், குறிப்பாக, எந்த பலனையும் எதிர்பாராமல் திரைப்படம் சம்பந்தமான புகைப்படங்கள், செய்திகள், விளக்கங்களைத் தருவார். தமிழ் திரைப்படம் பற்றி எந்த சந்தேகம் என்றாலும், அவருக்கு போன் அடிக்கலாம்.

‘ஆனந்தன்’ என்று மறுமுனையில் அவரே பேசுவார். வீட்டுக்குச் சென்றால், அவருடைய உயிரான மனைவி வாஞ்சையுடன் உபசரிப்பார்கள். சில ஆண்டுகளாக அவர் பார்வைக் கோளாறில் கஷ்டப்பட்டபோது, அந்தம்மா படித்துத் தகவல்களைச் சொல்ல, பிலிம் நியூஸ் ஆனந்தன் அவற்றை ஆவணமாக்கினார்.
இந்த ஆண்டு, இந்தப் படம் வெளியானது எனப் பல தகவல்களை மனிதர் புட்டு, புட்டு வைப்பார். நடிகர்கள், நடிகைகள்,
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அவரிடம் தகவல்கள் பெறாத நபர்களே

இந்தியாவிற்கு எச்சரிக்கை மணி.. ரகுராம் ராஜன் அதிரடி கருத்து..!

சீர்திருத்தம் தேவைஇந்தியப் பொருளாதாரம்tamil.goodreturns.in - prasannavenkateshkrishnamoorthy-lekhaka : இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி வகித்தவர்களின் மிக முக்கியமானவர் ரகுராம் ராஜன், இவரது தலைமையில் நாட்டுப் பொருளாதாரத்திலும், வர்த்தகச் சந்தையிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக நாடு முழுவதும் சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தப் பல நடவடிக்கையை எடுத்தார். அதுமட்டும் அல்லாமல் இவரது தலைமையில் தான் யூபிஐ பணப் பரிமாற்ற முறை கொண்டு வரப்பட்டது.
இதுமட்டும் அல்லாமல் 2009ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை விடுத்த திறன் வாய்ந்த பொருளாதார வல்லுனர். தற்போது இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு மிகவும் கவலைக்குரிய விஷயம், இதை மத்திய அரசு உடனடியாகச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிலும் முக்கியமான பவர், வங்கியியல் அல்லாத துறைகளை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல உடனடி நடவடிக்கை அவசியம்.

காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி திமுக ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

mk stalin article 370 protest, mk stalin protest jantar mantar, jammu kashmir article 370, dmk article 370 protest, திமுக ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு, மு.க.ஸ்டாலின், opposition article 370 protest, DMK MPs Protesttamil.indianexpress.com : ஜம்மு - காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, திமுக மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.-க்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் .
.DMK announced protest at Jantar Mantar: ஜம்மு – காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, திமுக மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.-
க்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாத்திட, அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணக்கண்டம் முழுதும் வழங்கிய மொழி தமிழே! அசோகனின் கல்வெட்டு தமிழிடம் இருந்து கடன் பெற்றது ..

Sundar P‎ .. Studies on Tamils' Antiquity, Records, Culture and History (STARCH)
நடன காசிநாதன் : இரண்டாயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணக்கண்டம் முழுதும் வழங்கிய மொழி தமிழே! அசோக மன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் தனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான்.
தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது" என்று கூறியுள்ளார் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.
நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய “தமிழ்நாட்டுத்
தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும்” என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படி அவர் பேசினார்.
அவர்தான் திரு.நடன காசிநாதன்.
திரு. நடனகாசிநாதன் கூறுவது இதுதான்,
• ‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன”
• ‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன.

நிர்மூலமாக நிற்கும் நீலகிரிப் பழங்குடிகள்!" வீடியோ


மின்னம்பலம் -நரேஷ் : சிறப்புக் கட்டுரை: ஒவ்வொரு பழங்குடியும் ஒரு வனம். ஒரு பழங்குடி இறந்தானா நூறு மரம் இறந்துடுச்சுன்னு பொருள். நீலகிரியில பழங்குடிகள் தனித்துவிடகொள்ளாத நீலகிரியின் வன மனிதர்களைப் பற்றிப் பேசத்தொடங்கினார் பேராப்பட்டிருக்காங்க” என்று எந்த ஓர் ஊடகமும் கண்டுசிரியர் போ.மணிவண்ணன். பேரிடர் காலங்களின்போது, சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களின் நிலையைப் பார்த்து ‘உச்சு’ கொட்டிவிட்டு நகர்வது நம் வழக்கமாக இருக்கிறது. ஆனால், அவர்கள் பொறுத்துக்கொண்டிருக்கும் சிரமங்களை நம்மால் ஒரே ஒரு நாள்கூட பொறுத்துக்கொள்ள முடியாது. வெள்ளத்தால் வீசியெறியப்பட்ட பாத்திரங்களை விலக்கிக் கொண்டு அக்குடியிருப்பை அடைந்தோம். கூடலூரிலிருந்து முதுமலை வனத் துறை சோதனைச்சாவடி செல்லும் வழியில் இருக்கிறது தொறப்பள்ளி எனும் பணியர் பழங்குடியினர் குடியிருப்பு. நெடுஞ்சாலையிலிருந்து நெடுந்தொலைவில் அமைந்திருக்கிறது அவ்வூர். நெடு வாகனங்கள் நெருங்க முடியாத பாதை. ஒரு சிற்றாற்றின் அருகிலிருந்ததால் முக்கால்வாசி மூழ்கடிக்கப்பட்ட குடியிருப்பு அது.

காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு - 4 ஆயிரம் பேர் கைது

காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு - 4 ஆயிரம் பேர் கைதுகாஷ்மீர் தினத்தந்தி : காஷ்மீரில் மாநிலத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு பக்கத்து மாநில சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீநகரில் வெறிச்சோடிய சாலையில் ராணுவ பாதுகாப்பு.< காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ந்தேதி ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இதனால் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அங்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொலை தொடர்பு மற்றும் இணைய தள சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. உமர்அப்துல்லா, மெகபூபா உள்பட 400 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதோடு கூடுதலாக 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இத்தகைய அதிரடி காரணமாக காஷ்மீரில் வன்முறை ஏற்படுவது ஒடுக்கப்பட்டது. கடந்த 2 வாரமாக காஷ்மீரில் திருப்தி அளிக்கும் வகையில் அமைதி நிலவுகிறது.