வியாழன், 4 ஏப்ரல், 2019

பான்பராக் போட்டுக்கொண்டு, எதிர் சீட்டில் கால் வைத்துக்கொண்டு, இடதும் வலதும் எச்சில் துப்பிக்கொண்டு ஹிந்தி மட்டும்

Shankar Ji : தன் பதின்ம வயது வரை தமிழே தெரியாத ஒரு ிழைக்க முடியும். ஆகவே, ஹிந்தி கற்காததால் என் வாழ்க்கையே வழுக்கிவிட்டது என்று அங்கலாய்க்கும் அன்பர்கள் கீழே உள்ளவைகளை ஆழ்ந்து யோசிப்பது நலம்.
வடநாட்டுவாலாவால் தேமே என்று முகத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பிழைக்க முடியுமென்றால், ஹிந்தியே தெரியாமல் வடநாட்டிலும் ப
01. ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியும் கற்க யாருக்கும் தடையில்லை.
02. இந்தியா போன்ற நாடுகளில் பள்ளிகளில் ஒரு மாநில மொழியும், ஆங்கிலமும் போதும்.
03. மாநில மொழி தன் மக்களிடையே உரையாடவும், ஆங்கில மொழி நாட்டில் பல மொழி பேசும் இந்தியர்களுடன் இந்தியாவிற்கு வெளியேயும் உரையாடவும் போதும்.
04. பிற மொழிகள் உங்கள் வாழ்க்கை, வசதி, வேலை சார்ந்து நீங்கள் கற்றுக்கொண்டு முன்னேறலாம். அல்லது உங்கள் தாய் மொழி மற்றும் ஆங்கிலம் கொண்டு பிழைப்பு நடத்தலாம்.

இந்திய ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை

vinavu.com - சுகுமார் : தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் பலியானதற்கு பதிலடி தருவதாகக் கூறிக்கொண்டு பாகிஸ்தானிற்குள் அத்துமீறி நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதலை நடத்தியது. இதில் இந்திய விமானப்படை தவறுதலாக தமது சொந்த இராணுவ ஹெலிகாப்டரையே ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதில் ஆறு விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட எழுவர் பலியாகியுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்னதாக 25 பாகிஸ்தானிய போர்விமானங்கள் இந்திய வான் எல்லையை கடக்க முயற்சி செய்ததாகவும் அப்பொழுது தற்காப்பிற்காக ஏவப்பட்ட ஏவுகணை இலக்குத் தவறியிருக்கலாம் என்றும் இந்திய அதிகாரிகள் கூறினர். Mi-17 V5 ஹெலிகாப்டர் ஒன்று தன்னுடைய சுற்றோட்டத்தை முடித்து திருப்பும் நேரத்தில் இந்த ஏவுகணை தாக்குத

தமிழகத்தின் குரலாக ஒலிக்கிறாரா ராகுல் காந்தி?

ஆர்.முத்துக்குமார் தமிழகத்தின் குரலாக ஒலிக்கிறாரா ராகுல் காந்தி?மின்னம்பலம்: வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற முழக்கத்தைக் கடந்த காலங்களில் திமுக எழுப்பியதற்கு முக்கியமான காரணமே காங்கிரஸ் கட்சிதான். அரசின் நலத் திட்டங்கள் முதல் அனைத்து அம்சங்களிலும் வடஇந்தியாவுக்கு, குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் ஆட்சியும் தென்னிந்தியாவைக் கண்டுகொள்வதில்லை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது என்ற விமர்சனத்தைத் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக முன்வைப்பதுண்டு.

தமிழச்சி தங்கபாண்டியனை குறிவைத்து தேர்தல் ஆணையம் அதிமுக பாஜக கூட்டு தாக்குதல்!

தமிழ்சமயா  : துரைமுருகன் மகன் கதிரானந்தை தொடர்ந்து தென் சென்னையில் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மீது தேர்தல் ஆணையம் தனது தகிடு தத்தங்களை அரங்கேற்றி உள்ளது .
தென்சென்னை தொகுதி வேட்பாளர்களாக  அதிமுக அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தனன் போட்டி இடுகிறார்.
உலகம் அறிந்த பெரும் ஊழல் அமைச்சரின் மகனை தேர்தலில் வெற்றி பெற வைக்க தேர்தல் ஆணையம் தற்போது அவரது தொகுதியில் போட்டி இடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை குறிவைத்து தனது அதிமுக பாஜக சேவைகளை ஆரம்பித்து உள்ளது.
இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்
சென்னை மேடவாக்கம் - ஆதம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகள் அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரில் கட்டு காட்டாக தென் சென்னை பகுதியை சேர்ந்த புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் . 220 வாக்காளர் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது .

ஜெயலலிதாவின் ரூ 913 கோடி விவரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு... சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட

splco.me/tam : சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் ரூ 913 கோடி விவரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு< ஜெயலலிதா சொத்து, கடன் விவரங்களை ஏப்.25ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.< ஜெயலலிதாவின் ரூ. 913 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெ. சொத்து விவரத்தை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  பெயருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கோட நாடு எஸ்டேட் என்று சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்து உள்ளன. சொத்துக்கள் யாருக்கு என்று ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அதனால், இந்த சொத்துக்களை  எல்லாம் நிர்வகிக்க ஒரு நிர்வாகியை உயர் நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 
வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் உள்ளதால், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க முடியாது என்று நீதிபதி உத்தரவில் கூறியிருந்தார்.

தமிழகத்தில் 50 வீதம் வட இந்திய அதிகாரிகள் .. தேர்தல் பூத் அதிகாரிகளாக (RSS) இவர்களே ..? தமிழ் பணியாளர்களை தவிர்க்க முயற்சி ....

ஆர் எஸ் எஸ் ஊடகங்கள்
Subaguna Rajan  : தேர்தல் அவசரம் . திமுக தலைமை தேர்தல் பணிக்குழு கவனத்திற்கு . ஒன்றிய(மத்திய) அரசு அலுவலகத்தில் பணிபுரியும்
வடக்கத்திய தமிழ் தெரியாத அதிகாரிகளை ( அவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டு ஒன்றிய அரசு அலுவலகங்களில் 50%ஆகி விட்டது. )
பூத் தலைமை தேர்தல் அதிகாரியாக (Presiding Officers )ஆக பணியமர்த்த திட்டமிட்ட சதி மும்முரமாக நடக்கிறது. அவர்களில் 90% பேர் சங்கிகள் என்பதும் உண்மை.
இதற்கான காரணம் , தமிழக அரசு ஊழியர்களை/ ஆசிரியர்களைத் தவிர்க்கவே. தேர்தல் ஆணையம் இருக்கும் லட்சணத்தில் , மேற்படி சங்கி அதிகாரிகள் எந்த கோளாறும் செய்யத் தயங்க மாட்டார்கள். பூத்களில் நிற்கும் CSIF காவல் படையினரின் மொழியறியாமை மற்றும் behavioural காரணங்களால் செய்யும் அடாவடிகளே தாங்க இயலாது . இந்த கொள்ளையில் , பூத் தலைமை தேர்தல் அதிகாரியும் இந்திக்காரனென்றால் தாங்க முடியாது. அவர்களது செயல்களே இயல்பான அடாவடித்தனமானது . அது கலாச்சார சிக்கல் . இதில் அதிகாரமும் சேரும் போது ஆபத்து அதிகம் . எனவே இன்று நடக்கும் தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான கூட்டத்தில் இந்த பிரச்னை பேசப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் . மொழியறியாதவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என உறுதிப் படுத்த வேண்டும்
சுப குணராஜன் அவர்கள் கூறும் இந்தத் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது, அல்லது அதிர்ச்சி அளிக்கவில்லை. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
வட நாட்டு அதிகாரிகளையும் ஊழியர்களையும் ஒன்றிய நிறுவனங்களில் போடுகிறார்கள், நிறைக்கிறார்கள் என்று கத்திக் கொண்டுவந்தோம். ஏனோ இவர்கள் எல்லாம் இதுவரை அதிகம் காதில் போட்டுக் கொண்டதில்லை. கத்திக்கொண்டிருந்த எங்களை இனவாதிகள் என்று நினைத்திருப்பார்கள் போல. 2014 இலிருந்து ஆதாரபூர்வமாக எத்தனை முறை இதைப்பற்றி பேசியும் எழுதியும் வருகிறோம்?
இப்போதைக்கு சகோதரச் சண்டை போட நேரமில்லை.
திமுக கூட்டணிக் கட்சிகள், அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை உடனடியாக இதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டில் வட இந்தியர் புலப்பெயர்ச்சியால் ஏற்பட்டு வரும் டெமாகிரபிக்கல் மாற்றமும் நிர்வாகத்தில் அவர்களால் ஏற்பட்டுள்ள மாற்றமும் இனவழிப்பின் கூறுகள். முட்டாள் தமிழா, முட்டாள் திராவிடா, முட்டாள் தோழா - இப்போதாவது விழித்துக்கொள். குரல் கொடு.
பாஜக-அதிமுக அணியை கூண்டோடு காலி செய்யவேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதன்மையானது இதுதான்.

அதானி - டாட்டா நிறுவனத்தின் 35,000 கோடி ரூபாய் கடனை மத்திய அரசின் பரிந்துரையுடன் ரத்து.. flashback

Saravanaperumal Perumal : உங்களுக்கு நினைவிருக்கிறதா?
ராகுல் காந்தி ஏன் மோடியை நீ காவல்காரன் அல்ல பக்கா திருடன் என்று சொல்கிறார் என்பது?
மத்திய அரசின் பரிந்துரையுடன் “ அதானி - டாட்டா நிறுவனத்தின் 35,000 கோடி ரூபாய் கடனை ரத்து செய்ய தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் ஓப்புதல் கொடுத்த ஸ்டேட் பேங்க் இந்தியா அந்த கடனை சாமானியர்கள் தலையில் கட்டியது எப்படி என்று தெரியுமா???? நீங்களும், நானும் இந்த கடனை மறைமுகமாக அடைத்து வருகிறோம் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?
கல்வி கடனை ஒன் டைம் செட்டில்மெண்ட்டில் கட்டினாலே அடுத்து ஏழு வருடங்களுக்கு கடன் வாங்க முடியாது.. அந்த write off கணக்கு சிபிலில் ஏறிவிடும். பிறகு அவன் வாழ்நாள் முழுவதும் கடன் வாங்குவதற்குச் சிரமப்பட வேண்டும். கல்வி கடனுக்கும், விவசாய கடனுக்கும் அவ்வளவு அழுத்தம் கொடுக்கும் வங்கிகள், பெரு நிறுவனங்களுக்கு அள்ளி கொடுத்துவிட்டு, அதையும் சாமானியர்கள் தலையில் கட்டுகிறதை உணர்ந்தீர்களா??? சிந்தியுங்கள் .. .

தங்கதமிழ் செல்வன் : 1000 கோடி செலவு செய்ய பன்னீர்செல்வம் திட்டம்.. மகனை வெற்றி பேரவைக்க இறைக்கும்


o panneerselvam son Ravindranath Kumar Theniநக்கீரன் : தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறனர். ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட தங்க தமிழ்ச்செல்வன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தனதுமகனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.1000 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த பணம் பாதாளம் வரை பாய உள்ளது. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டுகளை மட்டும் எங்களுக்கு போடுங்கள். தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் பணம் கொடுப்பதை தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

புதன், 3 ஏப்ரல், 2019

பாஜகாவின் வெற்றிக்கு SDPI கட்சியும் . அசதுத்தீன் உவைசியின் மஜ்லீஸ் கட்சியும் பேருதவி ...

Mansoor Mohammed : தியாக தலைவி ஆர்எஸ்எஸின் ஊதுகுழலாய்
எங்கெல்லாம் பாஜக
பலவீனபட்டுநிற்கிறதோ அங்கெல்லாம் இஸ்லாமிய வாக்குவங்கியை சிதறவைத்து அதன் நேரடி பலனை பாசிச பாஜகவிற்கு தரும் ஒற்றை வேலையோடு களம் காணுகிற அமைப்பு .. sdpi
கர்நாடகத்தில் அதன் செயல்பாடு மிகப்பெரிய அளவில் பாஜகவிற்கு பலன் தந்தது .. அதேபோல தெலுங்கானாவிலும் உ.பி.யிலும் சில வடமாநிலங்களிலும் இஸ்லாமிய வாக்குகளை பிரித்து வெளிப்படையாகவே பாஜக ஆட்சிக்கு உதவிய அசதுத்தீன் உவைசியின் மஜ்லீஸ் கட்சியும் வெகுவாக பயன்பட்டது . இவர்களுக்கு என்ன வேண்டும் .. இஸ்லாமியர்களுக்கான உரிமைகளா இல்லை பணம் பதவியா .. தொடர்ந்து இவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் அதன் பின்னில் மறைந்திருக்கும் உண்மை இஸ்லாமிய ஒற்றுமையை சிதைப்பது .. அதோ இவர்கள் தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தை காக்க வந்த ரட்சகனை போல பேசி திரிகிறார்கள் .. 

மேற்குவங்கத்தில் சீன மொழியில் பிரச்சாரம்... மம்தா .. திரினாமுல் காங்கிரஸ்

tnm chinanakkheeran.in - santhoshkumar : 1960  மற்றும் 1970ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில்  ‘சீனாவினுடைய தலைவர் நம்முடைய தலைவர்’ என்கிற முழக்கம் கொல்கத்தாவிலுள்ள சுவர்களில் மாவோயிஸ்டுகளால் எழுதப்பட்டிருக்கும். தீவிர இடதுசாரி சிந்தனையாளர்களால் கொல்கத்தாவிலுள்ள சுவர்கள் முழுவதும் இரவு நேரங்களில் இந்த முழக்கங்கள் பெங்காலி மொழியில் ஒரு காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது.> ஐம்பது வருடங்கள் கடந்து தற்போது  மீண்டும் கொல்கத்தா அரசியல் நிலப்பரப்பில் சீனாவின் தொடர்பு முற்றிலும் வேறு கோணத்தில் வெளிப்படுகிறது. “திரிணாமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்” என்கிற முழக்கம் கிழக்கு கொல்கத்தாவிலுள்ள தாங்கரா என்னும் பகுதியில் இருக்கும் சைனாடவுன் முழுவதும் உள்ள சுவர்களில் சீன மொழியில் எழுதப்பட்டு வருகிறது. அந்த நகரத்திலுள்ள சிறுபான்மை சீன மக்களை கவரும் விதத்தில் முதன் முறையாக சீன மொழியில் அரசியல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. சுவர்களில் சீன மொழியில் பிரச்சாரம் செய்வதை தாண்டியும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிடம் மேலும் பல பிரச்சாரங்கள் இருக்கிறது அதில் ஒன்றுதான் சீன மொழியில் துண்டு பிரசுரம் செய்து, அதை தாங்கராவிலுள்ள சீன மக்களிடம் பரப்புவது என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஃபையஸ் அகமது கான் தெரிவித்திருக்கிறார்.

பெரம்பலூரில் விசிக நிர்வாகி காரில் 2.10 கோடி ரூபாய் பறிமுதல்?

ரெய்டு: சிக்கிய விடுதலைச் சிறுத்தைகள்!மின்னம்பலம் : பெரம்பலூரில் விசிக நிர்வாகி காரில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 2.10 கோடி ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருக்கும் நிலையில், இன்று (ஏப்ரல் 3) திருச்சியில் விசிக மாநில நிர்வாகியின் நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
மக்களவைத் தேர்தலையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இல்லாத ரூபாய் நோட்டுகளையும், நகைகளையும் பறிமுதல் செய்துவருகின்றனர். அந்த வகையில் நேற்று நள்ளிரவு பெரம்பலூர் மாவட்டம் பேரளி சுங்கச் சாவடி அருகே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரெங்கராஜன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து அவ்வழியாக வந்த விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்கதுரையின் காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

சிறுமி பாலியல் கொலை: தூக்கு தண்டனை ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம்

மின்னம்பலம் : பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்று கணேசனின் மூத்த மகள் பள்ளி சென்று திரும்பும் வழியில் காணாமல்போனார். மறுநாள் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு கிணற்றில் அந்த 10 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய 3 நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. சுமார் 4 ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது மகளிர் நீதிமன்றம்.

ஆர்.எஸ்.பாரதி : கல்வியாளர் வீட்டில் ரூ.5000 கோடி பதுக்கல்; மத்திய தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்

ஆர் எஸ் பாரதி
கல்வியாளர் ஏ.சி .சண்முகம்
tamil.thehindu.com : தமிழகம் வந்துள்ள தலைமை தேர்தல் ஆணையர்களிடம் திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். அமைச்சர்கள் பதுக்கி வைத்துள்ள பணம், கல்வியாளர் வீட்டில் பதுக்கப்பட்டுள்ள பணம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்களான அலோக் லவசா, சுஷீல் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். இவர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் உயர்அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழக்கறிஞர் வில்சன், கிரிராஜன் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.

இயக்குனர் மகேந்திரன் : இந்த காளிங்கிறவன் பொழச்சுகுவான் சார். கெட்ட பய சார் அவன்!

Karthikeyan Fastura : என் வாழ்வில் எதுவுமே அவ்வளவு எளிதாக கிடைத்து
விடவில்லை. எல்லாம் தட்டு தடுமாறி, முட்டிமோதி தான் வென்றிருக்கிறேன். என்னோட 17 வயதில் சிவில் என்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசைபட்டு என்ட்ரன்ஸ் எழுதியும் கிடைக்கல. மார்க் போதல. தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கவைக்கவும் நிதி ஆதாரம் இல்லை. கல்லூரிகளும் குறைவு.
அப்போது டிவியில் பார்த்த ஒரு படத்தில் இடம் பெற்ற என்னை ரெம்பவும் Inspire பண்ணிய ஒரு சினிமா வசனத்தை என் டைரியில் எழுதி வைத்தேன்.
" ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லேனா கூட இந்த காளிங்கிறவன் பொழச்சுகுவான் சார். கெட்ட பய சார் அவன் " அப்படி ஒரு வைராக்கியமான வசனத்தை அதற்கு முன்னாலும் இன்னாளும் கேட்டதில்லை. இன்றும் அந்த வசனம் எனக்கு மிகவும் Inspire பண்ணுகிறது. அந்த வைராக்கியம் தேவைப்படுகிறது. சௌகர்யமான வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்று Safe Zoneல் மட்டும் Play பண்ணாமல் புதுப்புது விசயங்களை விரட்டி பெரிதினும் பெரிதாக வளர நினைப்பதால் சோதனைகள் தீர்ந்தாலும், புது சோதனைகளுக்குள் நானே விரும்பி செல்வதால் இழப்புகள், காயங்கள், வலிகள், அவமானங்கள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் பார்க்க நேரிடுகிறது. அது அத்தனை மோதிய போதும் " வா இன்னும் கொஞ்சம் அடி.. கலங்கமாட்டேன். ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லேனா கூட இந்த காளிங்கிறவன் பொழச்சுகுவான் சார். கெட்ட பய சார் அவன்" என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். அந்த Affirmation தான் என்னை நிலைநிறுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் அகில இந்திய திமுகவாகிறதா ?

மறுவரையறை செய்யப்படுகிறதா காங்கிரஸின் பாதை?மின்னம்பலம் ::காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முந்தைய காலங்களைப் போலல்லாமல் மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் அமைக்கும் வகையிலான முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று (ஏப்ரல் 2) வெளியானது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, திமுக அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை தானும் செய்வதாக உறுதியளித்துள்ளது. நீட் தேர்வு நீக்கப்படும் என்று திமுக கூறியிருந்தது. நீட் தேர்வு நீக்கப்பட்டு, மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவோம் என திமுகவும், மாற்றுவோம் என காங்கிரஸும் அறிவித்துள்ளன. பயிர்க்கடனை ரத்து செய்வோம் என்று இரு கட்சிகளும் உறுதியளித்துள்ளன.
கல்விக்கடனை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்று திமுக கூறியிருந்தது. மாணவர்கள் வேலைக்குச் செல்லும் வரையில் கல்விக்கடனை வசூலிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் என்று இரு கட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்க வலியுறுத்தப்படும் என்று திமுக உறுதியளித்திருந்த நிலையில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வளையத்துக்குள் கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வலியுறுத்துவோம் என திமுக கூறியிருந்தது. ஜிஎஸ்டி ஒற்றை விகித வரி முறையாக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் மாயாவதி சிலை ...2 ஆயிரம் கோடிக்கு சிலைகள் .. மக்கள் விருப்பமாம்! வீடியோ


மாலைமலர் :மக்கள் விருப்பப்படி தான் என்னுடைய சிலையையும், கட்சியின் சின்னத்தையும் அமைத்தேன் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.
புதுடெல்லி: உத்தரபிரதேச முதல்-மந்திரியாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இருந்தபோது சுமார் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் மாநிலம் முழுவதும் அவருடைய சிலையையும், அவருடைய கட்சி சின்னமான யானை சிலையையும் அமைத்து மக்கள் பணத்தை வீணடித்ததாக சுப்ரீம் கோர்ட்டில் 2009-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த சிலைகள் வைத்த பணத்தை மீண்டும் அரசு கருவூலத்தில் செலுத்த வேண்டும் என மாயாவதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாயாவதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது:-

சேலம்: கல்லூரி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கென்யா மாணவருக்கு ஆயுள் தண்டனை!

snakkheeran.in - elayaraja : சேலத்தில், தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கென்யா நாட்டு மாணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் அம்மாபேட்டையில் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கென்யா நாட்டைச் சேர்ந்த எரிக் (27) என்ற மாணவர், கடந்த 2016ம் ஆண்டு எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கென்யாவைச் சேர்ந்த 22 வயதான மாணவி ஒருவரும், அப்போது இதே கல்லூரியில் பயோ டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அந்த மாணவி, கல்லூரி செல்வதற்கு வசதியாக அதிகாரிப்பட்டி என்ற பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். மாணவர் எரிக்கும், அந்த மாணவியும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் எரிக், ஒரு நாள் இரவில் அந்த மாணவி தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று தங்கி இருந்தார். அப்போது எரிக், அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக புகார் எழுந்தது.

2019 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்.. இன்றைய தேதி உத்தேச கருத்து கணிப்பு

Swathi K : 2019 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? (ஏப்ரல் நிலவரப்படி)
(Please check the image for detailed report)
இன்றைய நிலையில் இருந்து 2019 தேர்தலை பார்க்கும் போது முடிவுகள் எப்படி இருக்கும்..
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனிப்பட்ட அரசியல் கணிப்பாளர்களின், பத்திரிக்கையாளர்களின் தகவல், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்கள் , கல்லூரி/ பல்கலை தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள், சட்டசபை தேர்தல்கள், இப்போதுள்ள கூட்டணி சூழல், கட்சிகளின் ஓட்டு சதவிகிதம் வளர்ச்சி/ வீழ்ச்சி, மக்களின் மனநிலை இதையெல்லாம் ஆய்வில் கொண்டு கணிக்கப்பட்டது..
1. தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சிகளின் கூட்டணிகள் நிலை என்ன?
UPA - Congress + DMK(TN) + NCP(Maharastra) + RJD(Bihar) + JDS(Karnataka) + JMM(Jharkhand) + Communist (statewide decision) + Small parties.
NDA - BJP + Nitish's JDU(Bihar) + Ram Vilas Paswan's LJP(Bihar) + Shiromani Akali Dal (Punjab) + Shiv Sena (Maharashtra) + ADMK, PMK, DMDK in TN + Small parties
Post-Poll Alliance Possibility:
1. UPA - SP, BSP, Trinamool, TDP & Communist
2. NDA - YSR Congress, TRS & BJD
2. பாகிஸ்தான் தாக்குதல் எந்த அளவுக்கு மோடி செல்வாக்கை கூட்டி இருக்கிறது?
கடைசி சில மாதங்களில் தேர்தலுக்காக மோடி செய்யும் நாடகங்கள் எல்லாம் மறுபடி மறுபடி அவரின் பக்தர்களை மட்டுமே உற்சாகப்படுத்தியது.. அதை தாண்டி பெரிய அளவுக்கு எதுவுமே எடுபடவில்லை.. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு வடமாநில மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது உண்மை.. ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்து மறுபடி ஜனவரியில் மோடிக்கு எந்த செல்வாக்கு இருந்ததோ அந்த நிலைக்கு வந்துவிட்டது.

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

பார்ப்பனீயத்தை நொறுக்கிய திருக்குறள் ! நாகசாமிக்கு பதிலடி.. வர்ணதர்மத்தை உடைத்த வள்ளுவம் முனைவர் ம. இராசேந்திரன்.. வீடியோ


திருக்குறளில் வேதங்களின் கருத்துக்கள்தான் இருக்கிறது என்று ஒரு புரளி தற்போது கிளம்பி உள்ளது!
தொல்லியல் துறையில் எந்த ஒரு வரலாற்று சான்று பொருள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அதை முதலில் காஞ்சி சங்கர ஆச்சாரியிடம் கொண்டுபோய் காட்டிவிடுவார்கள்.
அவர் அது சமஸ்கிருதத்திற்கு பின்பு வந்ததாக இருந்தால் அது உலகுக்கு அறிவிக்கப்படும் .. ஆனால் அதுவே சமஸ்கிருதத்திற்கு முந்தைய தமிழ் அகாழாய்வு பொருளாக இருந்தால் அது மறைக்கப்பட்டுவிடும். யார் ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தொல்லியல் துறை இப்படி நடந்து கொண்டிருக்கிறது.
திருக்குறள் என்பது சாஸ்திரங்களின் திரட்டு என்று நாகசாமி எழுதியுள்ளார் . இதற்கு பதில் கூறவேண்டுமா என்ற கேள்வியும் அதற்கு பதிலும்...
இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்கனவே பதில் கூறப்பட்டு தெளிவாக நிருபிக்கப்பட்டவைதான்.
வள்ளுவர் எதிர்த்த வடமொழி சிந்தனை ஓட்டம்!
இப்போது நாம் சொல்வது . திருவள்ளுவர் அந்த காலத்து பெரியார்!
திருவள்ளுவர் சம்ஸ்கிருத சாஸ்திரங்களின் தொகுப்பாக அதை செய்யவில்லை . அதை எதிர்த்து கண்டனம் செய்ய திருக்குறளை இயற்றி இருக்கிறார்

துரைமுருகன் : வருமானவரி அதிகாரிகள் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை

ஸ்பெல்கோ : நீதிமன்றம் கதவை தட்டும் துரைமுருகன் மகன் , வருமானவரி அதிகாரிகள் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை : துரைமுருகன்.; வருமானவரி அதிகாரிகள் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்
தி.மு.. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவிட்டு, இரவு 8.15 மணி அளவில் அதிகாரிகள் சென்றனர். அதைத்தொடர்ந்து வெளியே வந்த துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின் வருமாறு :
சோதனை என்ற பெயரில் 3 நாட்கள் எங்களது தேர்தல் பணிகளை தடுத்துள்ளனர். இவ்வாறு தடுத்தால் நாங்கள் பயந்து விடுவோம் என்று நினைத்துள்ளனர்.
இதற்கு ஒரே காரணம் அரசியல் உள்நோக்கம் தான். அதிகாரிகள் வந்தார்கள் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து கேட்டார்கள், எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றோம். சென்று விட்டார்கள்.
2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை எவ்வாறு நிறுத்தலாம் என்பது அவர்களின் கணக்கு. வெற்றி பெறமுடியாதவர்கள் போடுகிற தப்புக்கணக்கு. இது முட்டாள் தனமான கணக்கு.

மத்திய அரசு தென்னிந்தியாவை புறக்கணிப்பதால் கேரளாவில் போட்டி - ராகுல்காந்தி

தினத்தந்தி :தென்னிந்தியாவை மத்திய அரசு புறக்கணிப்பதால் கேரளாவில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.
புதுடெல்லி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இன்று தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர். பின்னர் ராகுல்காந்தி பேசியதாவது. ஒரு ஆண்டுக்கு முன்பே தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டோம்.அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும் பூர்த்திசெய்யும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும்.   5 முக்கிய அம்சங்களை  கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
 * 2022ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 22 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்

*  தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படாது.நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த முறை  ரத்து செய்யப்படும்.மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வு மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுத்துகிறது.

*  தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை .

உளவுத்துறை உதவியுடன் பணம் வைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களை சிக்க வைக்க சதி: ஆளுங்கட்சி மீது டிடிவி தினகரன் காட்டம்

tamil.thehindu.com - ஆர்.டி.சிவசங்கர் : உளவுத்துறை உதவியுடன் பணம் வைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களை சிக்க வைக்க சதி நடக்கிறது. இதன் மூலம் தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி முயற்சி செய்வதாக அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் எம்.ராமசாமியை ஆதரித்து உதகையில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரச்சாரம் செய்தார். உதகையில் உள்ள ஏடிசி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் இருந்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், "தமிழகத்தில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த இடைத் தேர்தலில் அந்தத் தொகுதிகளில் அதிமுக படுதோல்வியைச் சந்திக்கும். இதன் மூலம் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்.

மறைந்த இயக்குனர் மகேந்திரனுக்கு மக்கள் புகழஞ்சலி ! ஈழத்துக்கு சென்றவர் என வைகோ ... வீடியோ


வெப்துனியா மறைந்த தமிழ்த் திரை முன்னணி இயக்குனர் மகேந்திரனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செய்தியை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் ரஜினியை ஒரு நடிகராக அடையாளம் காட்டிய படமென்றால் அது முள்ளும் மலரும்தான்.  அது மகேந்திரன் இயக்கிய முதல்படமாகும். அதன்  பின்னர் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை, பூட்டாத பூட்டுகள், நண்டு, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என மிகவும் குறைவான படங்களையே இயக்கினார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அட்லி இயக்கிய தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சில நாட்களாக உடல்நலக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார் அவருக்கு வயது 79. அவரின் உடலுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த்திரை உலகில் யதார்த்த இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்லூரிக் காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த 'முள்ளும் மலரும்' படம் மூலம் அறிமுகம் ஆனவர்.

அமமுக : நாங்கள் என்ன அதிமுக, திமுக போல விபரம் தெரியாதவர்களா செல்போனில் பேச? நாங்கள் எல்லாம் வாட்ஸ்-அப் கால்தான்

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: திமுக, அதிமுகவை முந்தும் தினகரன்“தேர்தல் பரப்புரைப் பயணத்தில் ஒரு ரவுண்டு முடித்துவிட்டு நேற்று சென்னை வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்காக வாக்கு சேகரித்துவிட்டு இரவு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். அப்போது, ‘தமிழ்நாடு முழுக்க நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. ஆனா வேலூர்ல இப்படி ஆயிடுச்சே...’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். வேலூரில் துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டும், அதைத் தொடர்ந்த ரெய்டுகளும் ஸ்டாலினை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறதாம்.
ஸ்டாலின் மருமகன் சபரீசன் துரைமுருகனுக்கு போனவாரம் போன் செய்து, ‘அங்கிள்... உங்க வீட்டுக்கு இன்கம் டாக்ஸ் ரெய்டு வர வாய்ப்பிருக்குனு பேசிக்கிறாங்க. கொஞ்சம் அலர்ட்டா இருக்கச் சொல்லுங்க அங்கிள்’ என்று சொல்லியிருக்கிறார். அப்போது துரைமுருகன் தனக்கே உரிய நையாண்டியோடு, ‘அதெல்லாம் நம்மளை மீறி யாரு தம்பி வரப் போறாங்க’ என்று சொல்லிச் சிரித்திருக்கிறார். நேற்று இரவு நடந்த ஆலோசனையில் குறிப்பிட்டு வருத்தப்பட்டிருக்கிறாராம் ஸ்டாலின்.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

மாலைமலர் :நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: பாராளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டு அதில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:- ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டோம். அனைத்து தரப்பு மக்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறோம். 5 முக்கிய அம்சங்களை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.;
நியாய் எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் வழங்கும் வகையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தின்மூலம் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைக் குடும்பங்கள் பயனடையும். பண மதிப்பிழப்பு பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் நியாய் திட்டம் இருக்கும். புதிய தொழில் தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை. கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்