tamil.oneindia.com -alagesan :
சென்னை: தமிழகத்தில் ரூபாய் 5,010 கோடியில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளாம்பாக்கம் வந்தடைந்தார். அங்கு முதலில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூபாய் 5,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், தமிழகத்தில் ரூ. 5, 010 கோடியில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.



























