புதன், 12 ஏப்ரல், 2017

கேடி போலீஸ் பாண்டியராஜன் TNPSC தேர்வில் முறைகேடு செய்து போலீஸ் ஆனவர் .. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இன்னும் ..


திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்களின் கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பணியாற்றிய பல இடங்களில் சர்ச்சைவாதியாகவே இருந்துள்ளார்.
பக்தர்களை அடித்தவர்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முல்லை பெரியாறு அணை பிரச்னை வெடித்ததில் சபரிமலை ஐயப்பன் கோயில் சென்ற தமிழக வாகனங்கள் மீது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்தது பிரானூர் எல்லையில் தமிழக பக்தர்கள் சாலை மறியல் செய்தனர். அப்போது,  தென்காசியில் டி.எஸ்.பி.யாக  பணியாற்றிய பாண்டியராஜன்  ஐயப்ப பக்தர்களை தடியடி செய்து விரட்டினார். கேரளாவிலும் அடிக்கிறார்கள், தமிழ்நாட்டிலும் அடிக்கிறார்கள் என்று தமிழக பக்தர்கள் கதறியது வரலாறு.....   மாமூல் வருமானம் தந்த ருசி பாண்டியராஜன் முகத்தில்  தெரிகிறது

தி இந்து’வின் பார்ப்பனத் திமிரை திமுக எதிர்கொள்ளுமா?. தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவர் கனிமொழி

Thirumurugan Gandhi : சந்தோசம்ம்ம்ம்… ’மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு கம்பேனி-தி இந்து’வின் ’பணியாளர் மற்றும் தேசிய பத்திரிக்கை ஊழியர் சங்கத்திற்கு’, ‘அக்மார்க்’ திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் திமுகவிலிருந்து  தலைவர் வந்திருக்கார்…
தொழிற்சங்கத்திற்கு ‘ தி இந்துவின்’ அரசியல் பார்வை குறித்து முடிவெடுக்கும் அதிகாரப்பகிர்வு இருக்குமா? ( ‘தி இந்து’ என்.ராம் ஒரு கம்ம்யூனிஸ்ஸ்ட் ஆச்சே, மேலும் சி.பி.எம்மின் ஆதரவு பெற்ற கார்ப்பரேட் கம்பெனியாயிற்றே?). அல்லது தொழிலாளர்கள்-ஊழியர்களுக்கு சம்பளம் வாங்கி உழைக்கும் உரிமை மட்டும் கொடுக்கப்படுகிறதா?

‘தி இந்துவின்’ மனித குல விரோத, தமிழின விரோத, சிங்கள ஆதரவு-பார்ப்பனிய ஆதரவு செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்படுமா?
‘இட ஒதுக்கீடு’ குறித்தும், ‘தலித்துகள் வேலைவாய்ப்பு” குறித்தும் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதும் ‘தி இந்துவில்’ பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு பெரும்பான்மை இட ஒதுக்கீடு வேலையில் கிடைக்குமா?  நீண்ட நாட்களின் பின் வெளியாகும் கலைஞரின் புதிய படம் இது

எம்ஜியார் பல்கலை கழக துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் 7 மணி நேர விசாரணை

சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து விசாரணை நடந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணி வரை நடந்தது. விசாரணைக்கு வாராமல் சாக்குபோக்கு   கூறி வந்த கீதாலட்சுமி நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு ஒருமாதிரி விசாரணைக்கு வருகை தந்துள்ளார் .தினகரன்

டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியரசு கடுமையான எச்சரிக்கை .. கடுமையான விளைவுகளை ...

விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வை எதிர்ப்பார்த்து டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை மத்திய அரசு கடுமையாக மிரட்டியுள்ளது. பயிர்க்கடனை தள்ளுபடி செய்யவேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 29-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும் இந்த போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர். பாடைகட்டி போராட்டம், தழைகீழாக நிற்கும் போராட்டம், பாம்புக்கறி, எலிக்கறி தின்னும் போராட்டம், அரைநிர்வாண போராட்டம் என்று தினம் ஒரு வடிவத்தில் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளாததால் முழு நிர்வாண போராட்டமே நடத்தி இந்தியாவையே அதிர வைத்தனர் விவசாயிகள்.

தோழர் மகேஸ்வரன் தீக்குளித்து தற்கொலை... ஆதித்தமிழர் பேரவை ... எழுதிய கடிதம்- படங்கள்

திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட துணைத் தலைவர் தோழர் மகேசுவரன் இன்று ஆதிகாலை 1மணிக்கு திருப்பூர் பார்க் சாலையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்னர், தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் எழுதிவைத்துள்ளார். அக்கடிதத்தில், ‘’தமிழக அரசே! அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்தி வழங்கு’’ என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக மகேஸ்வரனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. 

சாமளாபுரம் தடியடி வழக்கை ஊத்தி மூடிய உயர்நீதிமன்றம்

திருப்பூர் சாமளாபுரம் போலிஸ் தடியடி: வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்! நேற்று திருப்பூர் சாமளாபுரத்தில் மதுபானக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் கே.பாலு மற்றும் ட்ராஃபிக் ராமசாமி ஆகியோர் ,உடனடியாக விசாரிக்கக்கோரி இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை அமர்வின் முன்பு முறையிட்டனர். இந்த வழக்கு மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் அமைக்கப்படாது என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போராட்டதில் ஈடுபட்டவர்கள் காவல்துறையின் தடியடியால் காயமடைந்தவர்களுக்கு, அவர்கள் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த போராட்டத்தில் காயமடைந்த பெண்ணின் உடல்நிலை குறித்த தகவல்களை உறுதி செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. -ஜீவா பாரதி நக்கீரன்

மத்திய அமைச்சர் : விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது ... விவசாய அமைச்சர் சந்தோஷ் குமார்

No waive of farmer loans, says union govtடெல்லி: விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய விவசாய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், பயிர்கள் கருகி பெரும் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாலும் தற்கொலை செய்து வருகின்றனர்.< இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத சூழல் உள்ளது. ஆனால் வங்கிகளோ கடன்களை திருப்பி வசூலிப்பதில் பெரும் கெடுபிடி காட்டி வருகின்றன.

The Hindu தொழிற்சங்க தேர்தலில் கனிமொழி பெருவெற்றி ..

இந்து நாளிதழின் தொழிற்சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கழகத்தின் போர்வாள் அக்கா கனிமொழி எம்.பி. அவர்கள் 405 வாக்குகளை பெற்று வெற்றி.
இந்து நாளிதழின் முதல் பெண் தொழிற்சங்க தலைவர் ஆகிறார்.
ஆறு பதவிகளில் ஐந்து பதவிகளை அவரது அணி அள்ளியது.
நாளை காலை இந்து நாளிதழ் அலுவலகத்தில் பதவி ஏற்கிறார்.
வாழ்த்துக்களும் மகிழ்சியும்..

பெப்சி கோக் தடை நீக்கப்பட மாட்டாது!


பெப்சி கோக் விற்கமாட்டோம் என தமிழக வணிகர் சங்கங்கள் அறிவித்திருப்பது சுதந்திர சந்தையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று முதாலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும், என்ஜிவோ நிறுவனங்களும் வாதிடுவதை அம்பலப்படுத்தும் வீடியோ செய்தித் தொகுப்பு!தமிழக மக்கள் இவ்வாண்டு (2017) ஜனவரி மாதம் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அயல்நாட்டு குளிர்பானங்களான ”பெப்சி, கோக்கைத் தடை செய்” என்பதை ஒரு முழக்கமாகவே முன் வைத்தனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அமெரிக்க கோலாக்களை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பினை மக்கள் பதிவு செய்தனர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜனவரி 26 முதல் தமது பேரவையின் கீழ் உள்ள பல்வேறு சங்கங்களின் கடைகளில் அமெரிக்க கோலாக்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவித்தது.

மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிப்பீங்களா.. மயில்சாமி ஆவேசம்

Actor Mayilsamy condemns Tirupur police
சென்னை: ஒரு காட்டுமிராண்டிதான் பெண்களை அடிப்பான். மனிதனாக இருப்பவன் செய்ய மாட்டான். மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிக்காதீங்க. திருப்பூரில் பெண்ணை அடித்த போலீஸ்காரர் அவரது தங்கச்சியாகவோ, அம்மாவாகவோ இருந்தால் அப்படி அடித்திருப்பாரா என்று நடிகர் மயில்சாமி கேட்டுள்ளார்.
திருப்பூரில் மதுக் கடைக்கு எதிராக போராடிய பெண்களை காட்டுமிராண்டித்தனமாக தடியால் அடித்து வெறித்தனத்தைக் காட்டியுள்ளனர் போலீஸார். போலீஸாரின் இந்த கேவலமான செயல் தமிழக மக்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிலும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் ஒரு பெண்ணைக் கன்னத்தில் பளார் என அறைகிறார்.

கேரளாவில் 10 வகுப்புவரை மலையாளம் கட்டாய பாடம் ... அவசர சட்டம் அமுல்!


திருவனந்தபுரம்- கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது: கேரளாவில் 10ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் மலையாள மொழியை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தில் நேற்று மாலையே கவர்னர் கையெழுத்து போட்டு விட்டார். இதனால் மலையாள மொழியை கட்டாயமாக்கும் அவசர சட்டம் இந்த வருடம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி உள்பட அனைத்து பள்ளிகளிக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்த உத்தரவை அமல்படுத்த தவறினால் பள்ளி தலைமையாசிரியருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

சாமளாபுரத்தில் உண்ணாவிரதம் இருந்த 27 பேர் கைது!

சாமளாபுரத்தில் உண்ணாவிரதம் இருந்த பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், மங்கலம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட சாமளாபுரம் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் மதுக் கடை மூடப்பட்டது. அதற்குப் பதிலாக, சாமளாபுரம், நான்கு சாலை சந்திப்பு அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிய மதுக் கடை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. அந்த மதுக் கடையை மூடக் கோரி, சாமளாபுரம் பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் நான்கு சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்கலம் போலீஸார் சாலைமறியல் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பெண்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து சாமளாபுரம் ஈஸ்வரன் கோயில் அருகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 27 பேரை அதிகாலையில் கைது செய்தது போலீஸ் நக்கீரன்

திமுகவின் இந்தி திணிப்புக்கு எதிரான போர்முழக்கம் ஓய்கிறதா?

:வங்கி ஏடிஎமில் இந்தி வந்துவிட்டது என பொங்க தொடங்கிவிட்டார்கள், ஆனால் ஏடிம் எந்திரத்தில் தார்பூசும் துணிவு யாருக்கும் வரவில்லை, வரவும் வராது...
மைல்கல், தபால் பெட்டி எல்லாம் பூசும் தாரினை, ஏடிஎமில் ஏன் பூசமாட்டார்கள் என்றால் அப்படித்தான்
மத்தியில் தேசிய கட்சி தனிபெரும்பான்மையுடன் அமரும்பொழுதெல்லாம் இம்மாதிரி காட்சிகள் , இந்தி திணிப்புகள் நடைபெறும், மாநில கட்சிகள் கை ஓங்கும்பொழுதெல்லாம் அது பின்வாங்கும்
இப்போது பாஜக மிருகபலத்துடன் ஆளும் காலம் அல்லவா? அதே காட்சிகள் திரும்பிவிட்டன..
தென்னக மாநிலங்கள் எல்லாம் இந்தியில் இருந்து தங்கள் மொழியினினை காக்க கவசம் அணிய தொடங்கிவிட்டன, கேரள அரசின் அறிவிப்பு அதனைத்தான் சொல்கின்றன‌.

பாக்கியராஜ் : திருட்டு விசிடியை ஒழிப்பதற்கு முன் முதலில் நல்ல படங்கள் எடுங்கள்!

திருட்டு விசிடியை ஒழிப்பதற்கு முன் நல்ல படங்களை எடுங்கள் என்று இயக்குனர் பாக்யராஜ் திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோஜா மாளிகை’ படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது 10 சதவீதம்தான். ஆனால், நாம் நல்ல படம் எடுக்கவேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம். சமீபத்தில் வெளிவந்த ‘மாநகரம்’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் பெரிய நடிகர்கள் இல்லாவிட்டாலும் பேசப்படுகிறது என்றால் நல்ல கதைகள்தான் அதற்கு காரணம். தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி தேர்வாகியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிடித்துப்போய் யாரும் தேர்வு செய்யவில்லை.

இந்திய பொருளாதாரம் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவை நம்பிதான் இருக்கிறது..

இந்தியாவின் ஜிடிபி-யில் வெறும் 3 மாநிலம் தான் அதிகளவிலான பங்கீட்டை அளிக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் சரக்கு மற்றும் சேவையின் சந்தை விலையை வைத்து காலாண்டு வாரியாவும், வருடாந்திர வாரியாகக் கணக்கிடப்பட்டும். இதுவே இந்தியாவின் வளர்ச்சி விகிதமாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஜிடிபி அளவீட்டில் விவசாயத் துறை உற்பத்தி முதல் ஐடி துறை ஏற்றுமதி செய்யும் மென்பொருள் சேவை வரை அனைத்தும் அடங்கும்.
இந்தியாவின் ஜிடிபி இந்தியாவின் ஜிடிபி தற்போதைய நிலையில் இந்தியாவின் ஜிடிபி 2.25 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.;500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யாமல் இருந்திருந்தால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கும். 3 மாநிலங்கள் 3 மாநிலங்கள் இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. இந்த 3 மாநிலங்களின் ஜிடிபி மதிப்பு 778 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினகரன் உள்ளே போவார்,, எடப்பாடியும் பன்னீரும் பாஜகவுக்கு கூஜா ... பின்கதவால் RSS ...?

நாட்டுநடப்பை உற்று நோக்கும் பொது சில உண்மைகள் புரிகின்றன.
தினகரன் எதுக்கோ சிறையில் அடைக்கப்படுவார் விரைவில்..
பன்னீரும் எடப்பாடியும் நண்பர்கள் ஆவார்கள்.
பன்னீர் முதல்வர் எடப்பாடி துணை முதல்வர் ஆவார்.
ஒன்றுபட்ட அதிமுக பெரும்பான்மையுடன் ...
"ஒரு பொம்மை ஆட்சி " நடக்கும்
இரட்டை இல்லை திரும்பவும் கிடைக்கும்.
கருப்பு வெள்ளைசிவப்பு கரைந்து காவியாக மாறும்.
ஆர் எஸ் எஸ் திட்டங்கள் எல்லாம் தமிழகத்தில் ஓபிஎஸ் எடப்பாடி தீவிரமாக நிறைவேற்றுவார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் இலையும் தாமரையும் கூட்டு...சரி பாதி..

திமுகவினர் மீது ரைடு பொய் வழக்குகள் பாயும்...
திகவினர் தேச விரோதிகளாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள் குண்டர்த்தடுப்பு சட்டம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாவார்கள்...
ஊடகங்கள் வளர்ச்சி வளர்ச்சி ...ஊழல்... குடும்ப ஆட்சி ...
ஒழிந்தது என்று உரக்க கத்துவார்கள்...
மக்கள் எது எப்படி போனால் நமக்கென்ன என்று
ஹிந்தி படிக்கவும் நீட்டுக்கு தயாராகவும் கோவில் குளங்களில் நேர்த்திக்கடன் செலுத்தவும் போய்விடுவார்கள்...
தமிழ்நாட்டில் சாத்தான்கள் வேதம் ஓதும்...
குத்தாட்டம் போட்டு கும்மி அடிக்கும்...
இதுவெல்லாம் இப்போது அதீத கற்பனையாக தெரியும் சிலருக்கு...போக போக உண்மையாக அரங்கேற காண்பீர்...
தமிழர்கள் பொறுப்பற்று தூங்குவதால்..
இதைவிட மோசமான கொடுமைகள் நடக்கும்...விரைவில்.
தமிழர்கள் நன்றாக குறட்டைவிட்டு தூங்குங்கள்   தாமோதரன்  முகநூல் பதிவு

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மதுக்கடைக்கு எதிராக போராடிய மக்களை அடித்து துவைத்த போலீஸ் ! பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட ரவுடிப்போலீசின் வீரம்?

கொள்ளையடித்தவர்கள், கூட்டு களவானிகள் எல்லாம் கொலுபொம்மைகளாக அரசாங்கத்தில் உலாவர, உரிமைக்கு போராடினால் பொதுமக்களுக்கு இதுதான் தண்டனையா?
கன்னத்தில் அறைந்த போலீஸ் தடியடி மண்டை உடைப்புதொடர் போராட்டம்மதுக்கடைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது கொடூரமாக தடியடி நடத்தி பெண்களை அறைந்து தாக்கிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்: மதுக்கடையை குடியிருப்பில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய திருப்பூர் சாமளாபுரம் பெண்களை ஈவிரக்கமில்லாமல் கன்னத்தில் அறைந்து தாக்கிய திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனின் செயல் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் மதுகடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் சரிபாதை மதுபான கடைகளை மூட வேண்டிய நிலை உருவானது.
மதுபான கடை வருவாயை மலையென நம்பியிருக்கும் தமிழக அரசு விழிபிதுங்கிக் கிடக்கிறது. தமிழகம் முழுவதும் குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுபான கடைகளை திறப்பதில் படுமும்முரமாக இருக்கிறது.

வேற்றுகிரக தொடர்பில் 14 புத்ததகங்கள் எழுதியவரை காணவில்லை

பூமியை
மனிதர்களை தவிர வேற்றுக்கிரகங்களில் வாழக் கூடிய ஜீவன்கள் இருக்கின்றனரா என்ற தேடல் பிரதானமாகி உள்ளது.இந்நிலையில், பிரேசிலைச் சேர்ந்த புருனோ போர்கஸ் என்பவர் வேற்றுக்கிரகவாசி ஒருவருடன் இருப்பதைப் போன்று ஓவியம் ஒன்றை வரைந்து வைத்து விட்டு காணாமல் போய்யுள்ளார்.
;இதில் ஒரு திருப்பு முனையாக காணாமல் போவதற்கு முன்னர் அவர் இரகசிய குறியீட்டு மொழி மூலம் 14 புத்தகங்களை எழுதிவைத்துள்ளார். புத்தகங்கள் மட்டுமின்றி சுவர்களிலும் தரையிலும் இரகசிய குறியீட்டினை எழுதிவைத்துள்ளார்.இவை அனைத்தும் வரைபடங்களிலும் ஏதோ ஓர் மர்மமான மொழியும் உள்ளது. எனவே, அவர் வரைந்துள்ள வரைபடங்கள் குறித்து தற்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.மேலும், அவரது அறையில் இத்தாலிய மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ-வின் சிலை ஒன்றும் காணப்பட்டுள்ளது. 1500களில் வாழ்ந்த ஒருவர் இந்தச் சிலை எப்படி வந்தது என்பதற்கும் விடை இல்லை.வெப்துனியா

மத்திய அரசு :விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை

அகில இந்திய வானொலியின் ட்விட்டர் பக்கத்தின் ஸ்கீர்ன் ஷாட்.அகில இந்திய வானொலியின் ட்விட்டர் பக்கத்தின் ஸ்கீர்ன் ஷாட். விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளதாக அகில இந்திய வானொலியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 29-ம் நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் ரூ.36,359 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

மின்னணு வாக்கு பித்தலாட்டம் ஒழிகிறது? மீண்டும் வாக்குசீட்டு முறைக்கு மாற கட்சிகள் தீர்மானம்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதால், மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமென காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த தேர்தல் ஆணையம் 'வாக்குப்பதிவு இயந்திரங்களில் கண்டிப்பாக முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை' எனத் தெரிவித்தது. மேலும் 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' என்ற பெயரில் கேள்வி- பதில் பாணியிலான அறிக்கையையும் வெளியிட்டது.

மேலும் ஆறு அமைச்சர்களிடம் வருமானவரி துறை அதிகாரிகள்...

செங்கோட்டையன் ரூ.13 கோடி, திண்டுக்கல் சீனிவாசன் ரூ.13 கோடி, தங்கமணி ரூ.12 கோடி, எஸ்.பி.வேலுமணி ரூ.15 கோடி, ஜெயக்குமார் ரூ. 11 கோடி, செல்லூர் ராஜு ரூ.48 லட்சம் பணப் பட்டுவாடா
அடுத்த அதிரடி  : சிக்கும்  6  அமைச்சர்கள்!
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப் பட்டுவாடா நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகிய மூவரிடமும் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை (நேற்று) விசாரணை நடத்தினார்கள்.
விஜயபாஸ்கரிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் 4 மணி நேரமும், சரத்குமாரிடம் 8 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு திருப்தி தரவில்லை. எனவே, விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகிய மூவரிடமும் மீண்டும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் கல் குவாரியில் மீண்டும் சோதனை

விஜயபாஸ்கரின் கல் குவாரியில் மீண்டும் சோதனை!
புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கை வாசலில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியில், மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
திங்கள்கிழமை (நேற்று) சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நடந்த அதேநேரத்தில், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை நடத்தினர். ஏற்கெனவே, புதுக்கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அவரின் உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் தங்கியிருந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.ஜெயலலிதா  அதிமுகவையும் ஆட்சியையும் என்ன ஷேப்பில் விட்டு வைத்து விட்டு போயுள்ளார் என்பது இனியாவது மக்களுக்கு புரியவேண்டும் .இவரா அம்மா? இவரா  புரட்சி தலைவி? தேவதை?   இவரா  மாதர்குல மாணிக்கம்?

அமெரிக்க விமானத்தில் பயணி தரையில் இழுத்து சென்ற அதிகாரிகள்


அமெரிக்காவை மையமாக கொண்ட ஏர்லைன் நிருவனம் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம். இதிலிருந்து பயணி ஒருவரை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரு விமானம் லோயிஸ்வேலிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் சில பாதுகாப்பு அதிகாரிகள் ஏறினர். அப்போது விமானத்தில் உட்கார இடம் இல்லாததால், ஜன்னல் ஓரம் அமர்ந்திருட்ந்த ஆசியாவை சேர்ந்த மருத்தவர் ஒருவரை தரதர வென இழுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்ற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பன்னீரின் சகோதரரர் ராஜா , மகன் ரவீந்திரநாத் கைதுக்கு இடைக்கால தடை!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் சகோதரர் ராஜா ஆகியோரைக் கைது செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. ஏப்ரல் 6-ம் தேதி நேதாஜி நகர் மசூதி அருகே ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கும், அங்கு தேர்தல் பணிமனை அமைத்திருந்த டி.டி.வி. தினகரன் தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் சரவணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் சகோதரர் ராஜா ஆகியோர் மீது தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இரண்டு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.விகடன்

போட்டுக்கொடுத்த பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் !

வாக்குக்குப் பணம் கொடுத்த தினகரன் தரப்பை கையும்களவுமாகப் பிடிக்க, அமைச்சர் விஜயபாஸ்கரைக் குறிவைத்ததாகச் சொல்கிறார்கள் வருமானவரித் துறையில். நடந்தது என்ன என்பது குறித்து நம்மிடம் விளக்கினார், வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். அதன் விவரம்: ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் தரப்பு என்ன செய்துகொண்டிருக்கிறது என தினமும் வருமான வரித்துறைக்கு சொல்லிக் கொண்டிருப்பவர் ஓ.பன்னீரின் மகன் ரவீந்திரநாத். "வருமானவரித்துறை உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமான ஒரு மாநில அரசின் அதிகாரிக்கு அவர் தகவல் சொல்வார். அந்த மாநில அரசு அதிகாரி, வருமான வரித்துறைக்கு சொல்வார். ரவீந்திரநாத் சொன்ன முதல் தகவல், "தினகரன் வகையறா, எடப்பாடி பழனிச்சாமியின் பினாமியான இளங்கோவன் மூலம் கோவையில் தங்கக் காசுகளை வாங்கி சேலம் போச்சம்பள்ளியில் ஆயுதப்படை கமாண்டராக உள்ள பெண் எஸ்.பி. மூலம் கொடுத்து அனுப்புகிறார்கள்' என்பதுதான். அவர் சொன்னதைப்போல அந்த பெண் எஸ்.பி.யும், இளங்கோவனுக்கு சொந்தமான, பதிவு செய்யப்படாத காரில் சென்னைக்கு வந்தார்.