டுனிஷியா என்ற நாட்டிற்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்வதற்காக வட இந்தியாவை சேர்ந்த ஒருவர் பயணமாகிறார். முற்றிலும் வியாபார தந்திரங்கள் நிறைந்த அவர் அந்த நாட்டில் சென்றதும் தனக்கு கிடைத்த பெட்ரோல் பங்கு வேலையை கால் பங்கும் மீதி முக்கால் பங்கு நேரத்தில் அந்நாட்டின் சட்டத்தின் ஓட்டைகளை அறிந்து கொள்வதற்காக செலவிடுகிறார்.
ஒருகட்டத்தில்
ஓட்டைகளையும் பாதாளங்களையும் கண்டறிந்த அவர் தான் வேலை செய்த ஊர் மக்களிடம்
அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட நாணயத்தை கொண்டு வருவீர்களேயானால் இருமடங்கு
பணம் தருகிறேன் என்று உறுதியளிக்கிறார்.






















