புதன், 24 ஆகஸ்ட், 2016

உள்ளாட்சித் தேர்தல்:மகளிரணியைக் கிளப்பும் கனிமொழி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணிக் கூட்டம் நடைபெற்றது. திமுக மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமையில் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் ஐம்பது விழுக்காடு மகளிர் இட-ஒதுக்கீடுஅறிவிக்கப்பட்டுள்ளது. இது நமக்கான வாய்ப்பு. மகளிர் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது மகளிரணியில் ஆர்வமுள்ளவர்கள்,வாய்ப்புள்ளவர்கள் லிஸ்ட் கொடுங்க. அனைவரும் தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும். இந்த ஆட்சியில் பெண்களுக்கு எதிராகநடந்துவரும் குற்றங்கள் குறித்து பெண்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். வீடுவீடாக கேன்வாஸ் தொடங்கணும் என, பல்வேறு வலியுறுத்தல்களைகனிமொழி வழங்கினார். அதன்பின், தமிழகத்தில் மகளிருக்கு எதிராக நடைபெற்றுவரும் குற்றங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

நளினி சிதம்பரம்:அமலாக்கத்துறை சம்மன்! சாரதா நிதி நிறுவன மோசடி...

பல்லாயிரம் கோடி மோசடியில் சிக்கிய சாரதா நிதி நிறுவன மோசடியில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினிக்குஅமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேற்குவங்கத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனத்தை, சுதீப்த சென் என்பவர் 2006ஆம் ஆண்டு தொடங்கினார். சிறிய,பெரிய முதலீடுகளுக்குக்கூட நல்ல வட்டி கொடுக்கிறோம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்போடு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம், நளினி சிதம்பரத்தின் தந்தை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கைலாசம்,தாய் பிரபல கவிஞர் சௌந்தரா கைலாசம் ஆகும் 

இந்திய நீர்மூழ்கிக் கப்பல்: கசிந்தது ரகசியம்!


 minnambalam.com :ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புலனாய்வு ஊடகவியலாளர் கேமரூன் ஸ்டீவர்ட் ஆஸ்திரேலிய இணைய ஊடகத்தில் அம்பலப்படுத்தியுள்ள ஆவணம் ஒன்று இந்தியாவின் பாதுகாப்புத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய கடற்படையில் இணைப்பதற்காக அதி நவீன நீர்முழ்கிக் கப்பல்களாக தொடர்பான ஆயிரம் பக்க ஆவணங்கள் ஆஸ்திரேலிய ஊடகத்தில் கசிந்துள்ளது.
இந்திய கடற்படைக்கு பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த ஸ்கார்ப்பியன் நீர்முழ்கி கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளது எப்படி என்ற கேள்வி வியப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கி உள்ளது.

நாரயண பெருமாள் பதவி நீக்கம் .. சசிகலா புஷ்பா: யாரையெல்லாம் நீக்குகிறாங்களோ அது அவங்களுக்கு நன்மைதான்

‘நெல்லையைச் சேர்ந்த நாராயணபெருமாள் அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 18.8.16 அன்று, டிஜிட்டல் திண்ணையில் இந்த நாராயணபெருமாள் பற்றி நான் சொல்லியிருக்கிறேன்.
‘நெல்லை புறநகர் மாவட்டச் செயலர் நாராயணபெருமாள். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அதிரடியாக மாவட்டச் செயலாளர்களை மாற்றினார் ஜெயலலிதா. அதாவது, தேர்தல் சமயத்தில் சரியாகப் பணியாற்றாத பலரின் பதவிகள் காலியானது. அப்படி பதவி பறிக்கப்பட்டவர் நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முருகையாபாண்டியன். இவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டவர்தான் நாராயணபெருமாள். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரான நாராயண பெருமாளுக்கு ஆரம்பத்திலிருந்தே பலவகையில் உதவியாக இருந்தது சசிகலா புஷ்பாதான். நாராயணபெருமாளுக்கு ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை பெற்றுத்தந்தவரும் புஷ்பாதான். மாவட்டச் செயலாளர் பதவிக்கு நாராயணபெருமாள் பெயரை அமைச்சர் ஒருவரின் மூலமாக சிபாரிசு செய்த பெருமையும் புஷ்பாவுக்கு உண்டு. அந்த நன்றிக்காகவே அவர் புஷ்பாவுடன் தொடர்ந்து பேசியிருக்கிறார். அதுதான் அவருக்கு சிக்கலில் முடிந்திருக்கிறது’ என்பதுதான் நான் அப்போது சொன்ன தககவல்.

தலாக் தலாக் தலாக் விவாகரத்தை எதிர்க்கும் வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது

புதுடில்லி : மூன்று முறை, 'தலாக்' என கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறையை எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்துள்ள வழக்கை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. மூன்று முறை, 'தலாக்' எனக் கூறி, விவாகரத்து பெற்றுக் கொள்ளும் முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது. இதற்கிடையே, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஷ்ரத் ஜகான் என்ற பெண் தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதிகள், அனில் தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற அமர்வு, வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக கூறியுள்ளது.    கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா :ஷா பானு ன்னு ஒரு அம்மா. நிக்காஹ் முடிஞ்சி 25 வருசம் கழிச்சு தலாக்கு சொல்லிட்டாரு அவுக்க புருசன். அலகாபாது ஐ கோர்ட்டு மாசம் கேவலம் 25 ரூ ஜீவனாம்சம் குடுத்திச்சு. பொத்துக்கிட்டு வந்திடுச்சு இந்த அரபிகளுக்கு கோவம். முடியவே முடியாது, தலாக்கான ஆனா அந்தம்மா வக்பு போர்டு போடற பிச்சையில தான் வாழணும் ன்னு போராட்டம். ஜீவனாம்சம் குடுத்தா இந்த பொம்பளைங்க ரொம்ப துள்ளுவாங்க இது ஷரி-ஆஹ் க்கு எதிர் ஆச்சா போச்சா ன்னு கத்தி குய்யோ முறையோன்னு கூக்குரல் எளுப்பி அவசர சட்டம் பொட்டாக முசுலீம் பெண்களுக்கு ஜீவனாம்சம் கெடையாதுனுட்டு. இந்த மார்க்ககாரங்க போராடுவாங்க. ஆண் ஆதிக்கம் ரொம்ப முக்கியம் அவுங்களுக்கு.

சீனு ராமசாமி: தலைகீழ் பாரதிராஜா ... நகரம் வெகுளி; கிராமம் வஞ்சனை!

tdharumaraj.blogspot.com:
நான் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிற ‘கிராமத்திலிருந்து தப்பித்தல்' தான் படத்தின் கதை!   அதாவது, பாரதிராஜா பாணி ‘கிராமப் புல்லரிப்புகளுக்கு' முற்றிலும் எதிரான கதை.கதை இவ்வளவு தான்.  பட்டறிவும் பகுத்தறிவும் பெற்று, கிராமத்திற்கு திரும்பி வருகிறான் ஒருவன்.   அவனை, ஊரும் உறவும் பிய்த்து எறிகின்றன .  உயிர் பிழைத்தால் போதும் என்று அவன் தப்பித்து ஓடுகிறான்.  இதை, சீனு ராமசாமி திகிலும் கருணையும் கலந்து சொல்லியிருக்கிறார்.  கிராமத்தில் திகில்; நகரத்தில் கருணை!இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால், 16 வயதினிலே படத்தில் ‘மயிலு, மயிலு’ என்று நாடகத்தனமாக சொல்லித் திரியும் ஒரு மருத்துவரை ஞாபகம் இருக்கிறதா? அந்தப் படத்தில் ஒரு அசட்டு வில்லனாக அவர் வந்து போயிருப்பார்.   நாகரீக நகரம், கிராமத்து வெகுளித்தனத்தை எவ்வாறு வஞ்சிக்கிறது என்று விளக்க அவரைக் காட்டியிருப்பார்கள்
ஏறக்குறைய 40 வருடங்கள் கழித்து, மொத்தமும் தலைகீழாக மாறியிருக்கிறது.   இப்பொழுது நகரம் வெகுளி; கிராமம் வஞ்சனை!

வாடகை தாய் புதிய சட்டவரைவு.. உறவினர்கள் மட்டும்தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை....

வாடகைத் தாய் சட்ட வரைவு மசோதா 2016-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களும், பழங்குடியின பகுதிகளில் இருக்கும் பெண்களும் வெளிநாட்டவரால் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க இச்சட்ட மசோதா வழி செய்கிறது.
கடந்த ஏப்ரல் மாதமே நாடாளுமன்றத்தில் இந்த புதிய சட்ட வரைவு மசோதாவை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மசோதா இறுதி வடிவம் பெறாததால் கைவிடப்பட்டது.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையின் பேரில் ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, வணிகவரித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ராட் கவுர் பாதல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் "வாடகைத் தாய் சட்ட மசோதா- 2016"-க்கு இறுதி வடிவம் கொடுத்தனர்.

வீட்டில் தயாரித்த குண்டு வெடித்து இறந்த பாஜக பயங்கரவாதி + தொண்டர்’ இவன்தான்

A Bharatiya Janata Party (BJP) worker was killed in a bomb explosion in a house at Kottayampoyil, near Koothuparamba, here on Saturday evening. The police identified the deceased as Deeshith (23), son of a local BJP worker.
Six swords, axes and knives were recovered from the damaged house of 27-year-old Dikshith during a police search in the house.சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் குண்டு
தயாரிக்கும்போது வெடித்து இறந்த பாஜக ‘தொண்டர்’ பற்றி செய்திகள் அதிகமாக பரப்பப் பட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் இப்படி குண்டு தயாரித்து இறந்திருந்தால் அவரை ‘தீவிரவாதியாக’ சித்தரிக்கும் ஊடகங்கள், பாஜகட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ‘தொண்டர்’ என அழைப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. ஒரு செய்தித் தொலைக்காட்சி இணையதளத்தின் லட்சினையுடன் அந்தச் செய்தி பரவியது, தொடர்புடைய நிறுவனம் இது நாங்கள் வெளியிட்ட செய்தி இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தது. அந்த நிறுவனம் செய்தி வெளியிடவில்லை என்பது உண்மையானாலும் அந்தச் செய்தி உண்மைதான்.

பெரியார் மீது விமர்சனம் இல்லை! - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 1

andhimazhai.com :  ஒரு திரைப்பட இயக்குநர் இந்த அளவுக்குப் பேசப்படுவது இதுவே முதல்முறை என்கிற அளவுக்கு கபாலி பட இயக்குநர் ரஞ்சித் மீது கவனம் குவிந்திருக்கிறது. ரஜினியின் படத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலைப் பேசும் படமாக எடுத்துவிட்ட ரஞ்சித் மரபான தமிழ்ச் சமூகத்தில் நிச்சயம் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார். அவருடன் அந்திமழைக்காக நிகழ்த்திய நேர்காணல் இது.
ரஞ்சித் யார்? எங்கிருந்து வந்தீர்கள். உங்கள் பயணத்தின் துவக்கம், பாதை இவற்றை பகிர்ந்துகொள்ள முடியுமா? நான் கரலப்பாக்கத்தைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பம் அங்குள்ள கீழ்க்கொண்டையார் காலனியில் இருந்தது.  இப்போது அதற்கு அம்பேத்கர் நகர் என்று பெயர்.  அப்பா  பாண்டுரங்கன், அம்மா  குணவதி,  அண்ணன் பிரபு   தம்பி சரவணன். எங்கள் ஊரில் ஐம்பது அறுபது தலித் குடும்பங்கள் உண்டு.  தள்ளேறி என்றழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் வேலையில் இருந்தார் தாத்தா. அங்குள்ள பள்ளியில்தான் படித்தேன். பாண்டீஸ்வரம், வெங்கலூர், ஆவடி என்று மாறி மாறிப் படித்தேன்.

பெண் ஊழியர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்.. வீடியோ எடுத்து எம்.டி மிரட்டல்!

பெங்களூர்: தனது அலுவலகத்தில் பணியாற்றும் 3 பெண்களை பலாத்காரம் செய்து அதை வீடியோவும் எடுத்து வைத்து மிரட்டிய பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன தலைவர் மீது போலீசில் பரபரப்பு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் வேலியே பயிரை மேய்ந்த கதை போல நடந்துள்ள இந்த சம்பவம் பணிக்கு செல்லும் பெண்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Private office MD raped and videographed embloyees in Bangalore பெங்களூரின் மத்திய பகுதியிலுள்ளது எம்.ஜி.ரோடு. இங்குள்ள பிரபல, ரகஜா கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது My Family Health Options என்ற நிறுவனம். இது மருத்துவம், ஆரோக்கியம் தொடர்பான தனியார் கன்சல்டன்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் (Md) பதவியில் இருப்பவர் பானு பிரகாஷ். பெங்களூரின் மைக்கோ லேஅவுட் பகுதியில் இவரது வீடு உள்ளது.

பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை: 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி; ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை, பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரியை கொலை செய்த வழக்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 வாலிபர்களுக்கு செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. பெண் மாயம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி (வயது 23). சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தன் தோழிகளுடன் மேடவாக்கத்தில் தங்கியிருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் அவரது தந்தை பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். இந்தநிலையில், அதே ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்டு, அழுகிய நிலையில் உமா மகேஸ்வரியின் சடலம் கண்டு எடுக்கப்பட்டது.

குஜராத்தில் ஊடகவியலாளர் குத்தி கொலை


ஊடகவியலாளர் கிஷோர் தாவேவின் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். திங்கட்கிழமை இரவு, தன்னுடைய அலுவலகத்தில் வைத்து இன்னும் அடையாளம் காணப்படாத நபர்களால், கிஷோர் தாவே கொலை செய்யப்பட்டிருக்கிறார். 53 வயதான கிஷோர், ராஜ்கோட்டில்  இருந்து வெளிவரும் ஜெய்ஹிந் - சஞ்ச் சமாச்சர் தினசரி பத்திரிகையின் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றியவர் என, காவல்துறை அதிகாரி நிலேஷ் ஜஜாதியா தெரிவித்திருக்கிறார். மேலும், ‘அவர் ஆறேழு முறை கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். காயங்களை வைத்துப் பார்க்கும்போது, கொலைக்குப்பின் இருக்கும் காரணம் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாக இருக்கலாம் எனத் தெரிகிறது’ என்றும் கூறினார். ஜுனாகத் பி டிவிஷன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்னமம்பலம் .com

கலைஞர் :நம்மை ஏமாற்றி, தோற்கடிக்க யார்? யார்? புல்லுருவிகளாக இருந்தார்கள்? யாரு ராஜேஷ் லக்கானியா?


தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில், திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை தங்கச்சாலை மணிக்கூண்டு அருகில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ‘ஜெயலலிதா அவர்களே, கருணாநிதியை கேள்வி கேட்கிறீர்களே... நாங்கள், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயார். ஆனால் அவைத் தலைவரிடம் நாங்கள் பேசுவதற்கான உரிமையை முறையாக பெற்றுத்தரக்கூடிய தகுதி, தெம்பு, திராணி, யோக்கியதை, அருகதை முதலமைச்சராக இருக்கக்கூடிய உங்களுக்கு உள்ளதா?‘ என்ற காட்டமான உரை திரண்டிருந்த திமுக-வினரை உற்சாகப்படுத்தியது.
இந்நிலையில் கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்திய திமுக தலைவர் கலைஞர், ‘என்னைப் பொருத்தவரை, நான் தேர்தலில் ஏற்படுகிற வெற்றி, தோல்விகளைப் பற்றி கவலைப்படுகிறவன் அல்ல. குறிப்பாக, இந்தத் தேர்தலிலே நான் ஆட்சியைக் கைப்பற்றமுடியாத ஒரு சூழ்நிலைக்கு ஆளானது என்றால் அதற்குக் காரணம், மேடையில் அமர்ந்திருக்கின்ற நாங்கள் அல்ல. எதிரே வீற்றிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான நீங்கள்தான். நான் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

தூய்மை இந்தியாவின் மனித கழிவுகளை எவன் சுத்தம் செய்வான்? பெச்வடா வில்சன் கேள்வி!

மகசேசே விருது வென்ற சமூக செயல்பாட்டாளர் பெஸ்வாடா வில்சன். | படம்: சந்தீப் சக்சேனா.
மகசேசே விருது வென்ற சமூக செயல்பாட்டாளர் பெஸ்வாடா வில்சன். | படம்: சந்தீப் சக்சேனா. சந்திர மண்டலத்துக்கு இந்தியா ராக்கெட் விடலாம், ஆனால் இன்னமும் கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்துவதை அகற்றுவதற்கான தொழில்நுட்பத்திற்கு முதலீடு செய்ய விரும்பவில்லை என்று மகசேசே விருது வென்ற சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். சஃபாய் கரம்சாரி ஆந்தோலன் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான மகசேசே விருது வென்ற பெஸ்வாடா வில்சன் டெல்லி, ஜாகீர் உசைன் கல்லூரியில் சாதியும் சமத்துவமின்மையும் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகையில் மத்திய அரசின் மீது சரமாரி கேள்வி எழுப்பினார்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

நடிகை ரம்யா மீது தேசத்துரோக வழக்கு.. பாகிஸ்தான் நல்ல நாடு என்றதால் .. மன்னிப்பு கேட்க மறுப்பு!

பாகிஸ்தான் நல்ல நாடு என கருத்து தெரிவித்த நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிய வலியுறுத்தி மைசூரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா அண்மையில் கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "பாகிஸ்தானில் நடைபெற்ற 'சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்' கருத்தரங்கில் கலந்துக்கொண்டேன். அங்குள்ள மக்கள் நம்மைப் போலவே சாதாரணமாக வாழ்கின்றனர்.

குஷ்பு சன் டிவிக்கு வருகிறார்... .. ராதிகா ஜெயா டிவிக்கு செல்கிறார்

சூரிய சேனலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் ரயில் நடிகை. சித்தியாக கூவி... இப்போது ராணியாக ராத்திரி நேரத்தில் இல்லத்தரசிகளை சந்தித்து வருகிறார். வேறு எந்த சேனலுக்கும் இதுவரை நிகழ்ச்சியோ சீரியலோ எடுத்து கொடுத்ததில்லை. ஆளுங்கட்சிக்கு கணவர் போன போது கூட சேனலை மாற்றவில்லை சித்தி. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலைச் சேனலில் உச்ச நடிகரின் படத்தை வைத்து திடீரென டாக் ஷோ நடத்தினார். அதோடு சீரியல், டாக்ஷோ என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். இதனால் கடுப்பான சூரிய சேனல், இப்போது பூ நடிகையை வரவேற்ற கையோடு, சரித்திர சீரியல், டாக் ஷோ நடத்தச் சொல்லியிருக்கிறதாம்.

சுவாதி வழக்கில் போலீசார் மவுனம் கடைபிடித்தால் ஆதாரங்களை வெளியிடுவேன் : தமிழச்சி மிரட்டல்

சென்னயில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து கள்ள மவுனத்தை கடைபிடித்தால், தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவேன் என்று தமிழச்சி என்பவர் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.;சுவாதி வழக்கில், ராம்குமாரை அப்பாவி என்றும், தொடக்கத்திலிருந்தே போலீசார் உண்மைகளை மறைத்து வருகின்றனர் என்றும், சமூக வலைதளத்தில் பிரபலமான தமிழச்சி என்பவர்  குற்றம் சாட்டிவருகிறார்.சுவாதி வழக்கில் யார் குற்றவாளி என்ற உண்மை தெரிந்த பெண்ணை, தமிழகத்தை சேர்ந்த ஒரு காவல் அதிகாரியே கொலை செய்ய முயன்றார் என்று கூறி, அந்த பெண் பேசிய ஆடியோவையும் சமீபத்தில் முகநூலில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்."இந்நிலையில், நேற்று தன்னுடைய முகநூலில் அவர் மீண்டும் ஒரு பரபரப்பு குற்றசாட்டுகளை தமிழக போலீசார் மீது கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:t;சுவாதி படுகொலை வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி என்று அறிவித்த சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் தனக்கு கிடைத்த உண்மையான தகவல்களை மறைத்து விட்டு, அதன் அடிப்படையில் காவல்துறையினருக்கு விசாரணை நடத்த உத்தரவிடாமல், குற்றம் செய்யாத அப்பாவி இளைஞன் ராம்குமாரை 'குற்றவாளி' என்று அறிவித்ததன் மூலம் யாரை திருப்திப்படுத்த முனைகிறார்?

மறைந்த சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் வரலாறு

விகடன்.காம் :சிங்கப்பூரில் 5 லட்சத்துக்குத் மேற்பட்டத் தமிழர்கள் வசிப்பதோடு உயரிய பொறுப்பிலும் இருக்கின்றனர். சிங்கப்பூரின் 6வது அதிபராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஆர். நாதன். மிக முக்கியமானவர். சிங்கப்பூரின் 'இரண்டாவது தந்தை ' என்று அழைக்கப்படும் எஸ்.ஆர். நாதன் அந்த நாட்டு வரலாற்றில் நீண்ட காலமாக அதிபர் பதவியில் இருந்தவர். >1924ம் ஆண்டு செல்லப்பன் - அபிராமி தம்பதிக்கு நாதன் பிறந்தார். அவருடன் சேர்ந்து வீட்டில் நான்கு குழந்தைகள். அப்போது சிங்கப்பூர் மலேசியாவுடன்தான் இருந்தது. குடும்பத்தில் கஷ்ட ஜீவனம்தான். நாதனின் தந்தை மலேசியாவுக்கு சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்தார். அவருக்கு ஒரு மலேசிய ரப்பர் தோட்டத்தில் குமாஸ்தா வேலை கிடைக்கிறது. சிங்கப்பூரில் இருந்து மலேசியாவில் உள்ள ஜோகூருக்கு குடும்பம் இடம் பெயர்கிறது. ரப்பர் தொழில் நசிவை கண்ட நிலையில், குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழலில் செல்லப்பன் தற்கொலை செய்து கொள்ளகிறார். நான்கு குழந்தைகளுடன் தொடர்ந்து மலேசியாவில் வசிக்க முடியத நிலையில் தவிக்கிறார்  நாதனின் தாயார்  . குழந்தைகளை அழைத்துக் கொண்டு மீண்டும் சிங்கப்பூருக்கே வருகிறார்..

சுவாதி கொலையாளியை நெருங்குகிறது போலீஸ்- ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தகவல்.. அப்ப ராம்குமார் கழுத்தை யார் வெட்டியது ?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி | கோப்புப் படம்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி | கோப்புப் படம்
சுவாதி கொலையாளி குறித்த நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஏறக்குறைய கொலையாளியை நெருங்கிவிட்டோம். கொலையாளி விரைவில் பிடிபடுவார் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நபரின் புகைப்படத்தை சூளைமேடு மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் வீடு வீடாகக் காட்டி போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர்.
காலை 6.30 மணி அளவில் சுவாதியை கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலையாளி காலை 8.15 மணிக்குதான் அதை ‘சுவிட்ச் ஆப்’ செய்துள்ளார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டபோது அவரது செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. சுவாதியின் செல்போன் எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. எனவே சுவாதியை கொலை செய்துவிட்டு, அந்த நபர் சூளைமேட்டுக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

செவாலியே விருது பெற்ற ஆசிரியர் மதன கல்யாணி.. 2010 இல் இவற்றுக்கு இவ்விருது வழங்கப்பட்டது

thetimestamil.com :பலர் நினைப்பதுபோல், சினிமாத்துறையைச் சேர்ந்த சிவாஜி
கணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்கு மட்டுமல்ல, பிரெஞ்சு-தமிழ் ஆசிரியர் மதனகல்யாணி என்பவரும் செவாலியே விருது பெற்றிருக்கிறார். 2010-ஆம் ஆண்டு மதனகல்யாணிக்கு, பிரான்ஸ் அரசு இந்த விருதை வழங்கியுள்ளது. மதனகல்யாணி சிலப்பதிகாரத்தை தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்தவர்.
மேலும் இவர் குறித்து முனைவர் மு. இளங்கோவன் எழுதிய பதிவு இங்கே:
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”
என்னும் பாரதி வாக்குக்கு ஏற்ப அமைதியாகத் தமிழ்ப்பணியைப் புதுச்சேரியில் ஆற்றி வருபவர் அம்மா மதனகல்யாணி அவர்கள். தமிழ்ப்பற்றும் தமிழ் இலக்கிய ஈடுபாடும் கொண்ட இவர்கள் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சுமொழிகளில் வல்லவர். இவர்தம் பெற்றோர்: தந்தை: செ. கிருட்டினசாமி (காவல்துறை ஆணையர், தாய்: கி. இராசாம்பாள்.
மதனகல்யாணி அவர்கள் 5-10-1938 இல் புதுச்சேரியில் பிறந்தவர்.

பிரகாஷ் ஜவடேகர் ;நேரு, படேல், போஸ் தூக்கிலிடப்பட்டனர் ! அடங்கொப்பரான... மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலையில் இவ்வளவு வளம் இருக்கிறதே?

மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “சுதந்திரத்துக்கான போராட்டம் 1857-ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் கழித்து பிரிட்டீஷாரை நாம் தூக்கி எறிந்தோம். நாம் நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் பட்டேல், பண்டிட் ஜவஹர்லால் நேரு, பகத் சிங் மற்றும் ராஜகுரு ஆகியோர் தூக்கிடப்பட்டனர். அவர்களுக்காக நாம் வணக்கம் செலுத்த வேண்டும்” என்று பேசினார்.
நேருவும் பட்டேலும் 74 வயதுக்கு மேல் வாழ்ந்தவர். வயோதிகம் காரணமாகவே இறந்தவர்கள். நேதாஜியின் மரணம் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரையும் தூக்கிடப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியாது.
இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்களின் தலைவராக விளங்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், இப்படி வரலாறு தெரியாமல் பேசலாமா? என விமர்சனம் எழுந்துள்ளது.   thetimestamil.com

டொனால்ட் ட்ரம்ப் : இந்தியர்களால் அமெரிக்காவுக்கு நன்மை இல்லை.. பணத்தை எடுத்து செல்கிறார்கள !


minnambalam.com  :பொதுவாக, அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்து அதற்கேற்ப திட்டம் வகுத்து அவ்விலக்கை நோக்கிப் பயணிப்பார்கள். இதில் இந்தியா, அமெரிக்கா என்ற வேறுபாடு இல்லை. தமிழ்நாட்டில் தேர்தல் அலை ஓய்ந்து முடிந்து மூன்று மாதங்கள் ஆக, அந்த அலை இப்போது அமெரிக்காவில் ஆர்ப்பரிக்கத் தொடங்கியுள்ளது. நவம்பர் 8ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்காக ஆளும் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், எதிர்க்கட்சி குடியரசுக் கட்சியில் டொனால்ட் ட்ரம்ப்பும் எதிரும்புதிருமாக தீவிரமாக களத்தில் வலம் வருகின்றனர்.
பன்முகவாதத்தை ஹிலாரியும், முழுமையான அமெரிக்கமயத்தை டொனால்ட் ட்ரம்ப்பும் முன்வைக்கின்றனர். இந்த தீவிர அமெரிக்கமயம், இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இந்திய மக்களுக்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கும் என்கின்றனர் அரசியலைக் கூர்ந்து நோக்குபவர்கள். எந்தவகையில் நெருக்கடி?

வைகுண்டராஜன் கோஷ்டிக்கு விருந்து வைத்த அதிமுக நாராயணபெருமாள்... அமைப்பு செயலர் பதவி பறிப்பு !

P.Narayana Perumal loses post after Sasikala issueசென்னை: சசிகலா புஷ்பா விவகாரத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை பறிகொடுத்த நாராயணயப் பெருமாள், மகனிள் திருமண வரவேற்பில் வைகுண்டராஜன் தரப்பு ஆட்களுக்கு விருந்து வைத்ததே அவரது அமைப்புச் செயலாளர் பதவி பறிப்புக்குக் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக அமைப்புச் செயலாளர் நாராயண பெருமாளை அப்பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து பா.நாராயண பெருமாள் நீக்கப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'

நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 10 பணக்கார நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த தனிநபர் சொத்து 5,600 பில்லியன் டாலர்கள். அமெரிக்கா இதில் முதலிடம் வகிக்கிறது. மொத்த தனிநபர் சொத்துக்கள் விவரங்களின் படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கனடா (4,700 பில்.டாலர்), ஆஸ்திரேலியா (4,500பில். டாலர்), இத்தாலி (4,400 பில். டால்ர்), ஆகிய நாடுகள் முறையே 8,9, 10-வது இடத்தில் உள்ளன.

மொத்த தனிநபர் சொத்து விவரத்தில் 48,900 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே 2 மற்றும் 3-ம் இடங்களில் உள்ளது. 4-ம் இடத்தில் யு.கே, 5-ம் இடத்தில் ஜெர்மனி, 6-ம் இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

நபர்களின் நிகர சொத்து மதிப்பு என்ற அளவுகோலில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அவரது அசையும் சொத்துக்கள், ரொக்கம், பங்குகள், மற்றும் பிற வர்த்தக வருவாய்கள் அடங்கும். இதிலிருந்து கடன்கள் கழிக்கப்படுகின்றன. அரசு நிதிகளை கணக்கில் சேர்க்கவில்லை. இந்தியா டாப் 10-ல் இருக்கக் காரணம் அதன் மக்கள் தொகையே என்கிறது நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கை. 22 மில்லியன் மக்கள் தொகையே கொண்ட ஆஸ்திரேலியா டாப் 10-ல் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

சசிகலா புஷ்பா நேரில் ஆஜராக மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு !

சசிகலா புஷ்பா எம்.பி., வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. முன் ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.புலன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சசிகலா புஷ்பா வெளிநாடு சென்றுவிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் புகார் கூறினார். ;வெளிநாடு சென்ற சசிகலா புஷ்பா முன் ஜாமீன் மனுவில் கையெழுத்திட்டது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினார்.இதையடுத்து நீதிபதி வேலுமணி, அரசின் சந்தேகத்தை தீர்க்க வரும் திங்கட்கிழமை சசிகலா புஷ்பா, அவரது கணவன், மகன் நேரில் ஆஜராகவேண்டும். சசிகலா புஷ்பா ஜாமீன் மனு மீது திங்கள் அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.