புதன், 23 மார்ச், 2016

வைகோ, திருமா வருகைக்காக காத்திருந்து ஏமாந்த விஜயகாந்த்

வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் வருகைக்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இரண்டரை மணி நேரம் காத்திருந்தார்.மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க., இணைய வேண்டும் என, அதன் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் கூறி வருகின்றனர். அதற்கு, 'நீங்கள் என் தலைமையை ஏற்க வேண்டும்'என, விஜயகாந்த் நிபந்தனை விதிக்கிறார். இதனால், ம.ந.கூட்டணியில் தே.மு.தி.க., சேருமா அல்லது விஜயகாந்த் தலைமையின் கீழ், ம.ந.கூ., இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ம.ந.கூ., தலைவர்கள், விஜயகாந்தை சந்திக்க இருப்பதாக, நேற்று காலை தகவல் பரவியது. அதனால், தன் தலைமையை ஏற்க, அவர்கள் முடிவு செய்து விட்டதாக
விஜயகாந்த் நம்பினார். தற்போது எந்தக் கட்சி / கூட்டணி யிடமும், தடாலடியாக நிபந்தனை விதித்துப் பேசும் தகுதியில் விஜயகாந்த் இல்லை. அதற்கான காலம் கடந்துவிட்டது. அவர்களாகப் பார்த்துக் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு, அய்சா-பைசா வையெல்லாம் மறந்துவிட்டு அரசியலை ஒட்டவேண்டியதுதான் இல்லையேல் கொஞ்சநஞ்சம் உள்ள வாக்கு வங்கியும் புஸ்வாணமாகிவிடும் .

செவ்வாய், 22 மார்ச், 2016

வெளிநாட்டு பெண்களின் சுற்றுலா வருகையில் பெரும் வீழ்ச்சி...டெல்லி சம்பவத்தால் அச்சம்


டெல்லி ஜோதி சிங் பாலியல் வன்முறை  சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில்
தங்களின் பாதுகாப்பு குறித்து ஏற்பட்ட அச்சத்தால் சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஜோதி சிங் என்ற கல்லூரி மாணவி (நிர்பயா) ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது சர்வதேச நாடுகள் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டது. இது இந்திய சுற்றுலாத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது.

JNU கன்ஹையா குமார் - ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்ஹையா குமார் இன்று சந்தித்து பேசினார். தீவிரவாதி அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் நினைவு தினம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அப்சலுக்கு  ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து. இதனையடுத்து தேச விரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கன்ஹையா குமார் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் வந்த  காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை கன்ஹையா குமார் இன்று சந்தித்தார்.

BBC :பெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்: 34 பேர் பலி

விமான நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரில் உடலுக்கு அருகில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜாவுண்டெம் விமான நிலையத்தில் முதல் தாக்குதல் இடம்பெற்றது இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பெல்ஜியத்தின் சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
விமான நிலையத்தில் 81 பேரும், ரயில் நிலையத்தில் 55 பேரும் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரஸல்ஸ் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என பெல்ஜியப் பிரதமர் ஷார்ல் மிஷேல் கூறுகிறார்.

அவமானத்தால் கொலை செய்தோம்: கெளசல்யா தந்தை பரபரப்பு வாக்கு மூலம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.13) சாதி மாறி காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக சங்கர்-கௌசல்யா தம்பதியை 6 பேர் கொண்ட கும்பல் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் பட்டப்பகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் உயிரிழந்தார். கௌசல்யா தலையில் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துமவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை ஆணவக்கொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதையடுத்து கெளசல்யாவின் அப்பா சொல்லியே இந்த கொலையை செய்ததாக கைது செய்யப்பட்ட 5 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

அமைச்சர் காமராஜ் வீட்டில் இருந்து 4 மூட்டைகள் JRS HAPPY TRAVELS AP 01 F 9135 பேருந்தில் பறந்தது

4 மூட்டைகளில் சென்றது பணமா? ஆவணமா? கார்டன் உத்தரவா? அமைச்சர் இடம் மாற்றி வைக்கிறாரா? தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜின் மன்னார்குடி வீட்டில் இருந்து திங்கள்கிழமை இரவு ஆட்டோ மூலம் கொண்டுவரப்பட்ட 4 மூட்டைகள், மன்னார்குடி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த "JRS HAPPY TRAVELS AP 01 F 9135 பேருந்தில் ஏற்றப்பட்டது. காமராஜ் அண்ணன் மகன் குட்டி என்பவர் 4 முட்டைகளையும் ஏற்றினார். மேலும் சென்னையைச் சேர்ந்த இருவர் அப்பேருந்தில் ஏறினர். பின்னர் இரவு 10:30 மணிக்கு பயணிகளுடன் அந்த பேருந்து ECR வழியாக பாதுகாப்புடன் சென்னை சென்றது. அந்த மூட்டைகளில் சொத்துப் பத்திரங்கள் மற்றும் ரொக்கப் பணம், நகைகள் இருந்திருக்க கூடும் என சொல்லப்படுகின்றது. மற்ற அமைச்சர்களின் வீடுகளில் சோதனை என்ற தகவலால், இவை இடமாற்றம் செய்து வைக்கப்படுகிறதா? இல்லை கார்டன் உத்தரவின் பேரில் இவை எடுத்துச் செல்லப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. செம்பருத்தி< nakkheeran.in

தேமுதிக கூட்டணி முடிவு நெல்லையில் பிரேமலதா அறிவிக்கிறார்....எத்தினி சூட்கேசப்பா.....

நெல்லையில்யில் வரும் 25 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள தேமுதிக பொதுக் கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை பிரேமலதா வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் வேடல் மாநாட்டில் பிரேமலதா அதிமுக, திமுக இரண்டையும் விமர்சித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய விஜயகாந்த் பிரேமலதா பேசியதையே பேசினார். இந்த நிலையில், தேமுதிக - திமுக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுத்தார். இந்த நிலையில் மகளிர் தின மாநாட்டில் பேசிய விஜயகாந்த், தேமுதிக தனித்துப் போட்டி என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், தேமுதிக-வே உடையும் அளவு நிலைமை மோசமானது.   முதல்ல காஞ்சிபுரத்தில  கப்டன்,  இப்போ நெல்லையில் பிரேமா அடுத்து குமரியில் சுதீஷ் அப்புறம் கோவையில்  சண்முகபாண்டியன் அதுக்கப்புறம் நீலகிர்யில விஜய பிரபாகரன் ,,,,,ஒங்க பாடு  ஒரே  குஷிதான்  போங்க 

மக்கள் நல கூட்டணி பேசாம ட்ராபிக் ராமசாமியுடன் கூட்டணி வச்சுக்கலாம்...


கம்யூனிஸ்டு புரட்சியாளர்களும் கம்யூனிஸ்டு அல்லாத புரட்சியாளர்களும் அடங்கிய ஒரு கூட்டணி, புரட்சிக் கலைஞர் என்ற ஒரே காரணத்துக்காக விஜயகாந்துக்குக் கொடி பிடிக்க முன்வருவதெல்லாம் எம்மாதிரியான மாற்று அரசியல் என்று தெரியவில்லை.தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் சமூகம், மக்கள் நலக் கூட்டணிக்காக இலவசப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருப்பதைக் கடந்த சில தினங்களாக இணையத்தில் பார்க்கிறேன். ஊழல் இல்லை, அப்பழுக்கில்லை, குறுகிய நோக்கில்லை, பதவி ஆசையில்லை, சமூக நலனைத் தவிர வேறு சிந்தனையே இல்லை என்று சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக அப்படியொரு உணர்ச்சிப் பிரவாகம்.
ஊழல் என்பதே அதிகாரம் கைக்கு வந்த பிறகு நடைபெறுகிற சங்கதிதான். கரி அள்ளிப் போடாமலேயே கறை படியாத கரங்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

மந்திரிகளின் பி.ஏ.,க்கள் சொத்து விபரம் சேகரிப்பு...கமிஷன் சதவீதம் கணக்குல காட்டல்லியோ? குமாரசாமி போல தள்ளுபடி?

அமைச்சர்களைத் தொடர்ந்து, அவர்களிடம் பி.ஏ.,க்களாக இருந்தவர்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
அ.தி.மு.க., அமைச்சர்களில் சிலர் அளவுக்கு அதிகமாக, சொத்துக்களை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, கட்சியின் தலைமைக்கு நிர்வாகிகள் பலர் புகார் மனுக்களை அனுப்பினர்.இதையடுத்து, அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து, தனியார் ஏஜன்சி விசாரணை நடத்தியது. இதில், அவர்கள் செய்த முறைகேடுகள் தெரியவந்தன. அதன் காரணமாக, செல்வாக்கோடு வலம் வந்த, அமைச்சர்கள்
சிலர் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். பத்திரிக்கைகள் பக்கம், பக்கமாக எழுதிய போதெல்லாம் ஒன்னும் தெரியாத பாப்பாவுக்கு  , இப்போ தேர்தல் நேரத்தின் போதுதான் இவர்கள் சேர்த்த சொத்துக்கள் பற்றி தெரிந்ததா? எல்லாம் பங்கு தகராறில்  வெடித்த விவகாரம்தான். 

4 மாதத்தில் வேலை ; பொங்கலுக்கு ஒரு வாரம் லீவு - தே.மு.தி.க., தேர்தல் அறிக்கை

சென்னை: வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4 மாதத்தில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்; கிராமப்புற கோயில் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும்; அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படும்; பொங்கலுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படும் என்று தேமுதிக., தனது வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது. தே.மு.தி.க.வின் 2ம் கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * அரசுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களின் பங்குகள் பங்கு சந்தையில் வெளியிடப்படும். அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பங்குகள் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் சந்தை மதிப்பில் குறைந்தது ரூ.3 லட்சத்துக்கு குறையாமல் பங்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் 25 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

ஆசிரியை கோதை லட்சுமிக்கு நீதி கிடைக்கவில்லை....இருட்டறை சட்டத்தால் தப்பிவிட்டான் சிவசுப்ரமணியன்

சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்!
1464641_1234220469939352_5651842948863647735_nvadhini.com: 16 வயதிலேயே 25 வயது இளைஞன் மாதிரி மீசை தாடி முளைத்திருக்கிறது இந்த பையனுக்கு வயதுக்கு மீறிய வளர்ச்சியிலேயே தெரிகிறது இவன் எந்த அளவிற்கு முதிர்ச்சியான எண்ணம் கொண்டவன் என்று! ஆசிரியராக இருந்தாலும் வெளியுலகம் தெரியாத கிராமத்து பெண்தான் இந்த கோதை லட்சுமி என்கிற 22வயது இளம் பெண்…
தன் காம பசிக்கு இந்த பெண்ணை தன் காதல்வலையில் வீழ்த்தி இந்த பையன்தான் கூட்டிக்கொண்டு ஓடியிருக்கிறான்..
அந்த பெண்ணை ஒரு வருடம் அனுபவித்து குடும்பம் நடத்திவிட்டு இப்போது அவள் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் இவன் ஒன்னும் தெரியாத பையன் போல் பெற்றோர்களிடம் திரும்பிவிட்டான் .சிறுவர் சீர்திருத்த சட்டம்  சிறுபிள்ளை தனமாக இருக்கிறது....மைனர் கிருமினல்கள் எல்லாருக்குமே சட்டம் தங்களை பாதுகாக்கும் என்ற தைரியத்தில் குற்றம் செய்கிறார்கள்...அவனால் அது முடியும் என்றால் அவனும் பெரியவனே.  

பிலிம் நியுஸ் ஆனந்தன்....60 ஆண்டுகளாக இவர்தான் தமிழ் சினிமாவின் ஆவணக்காப்பகம்

film new mar 21
நெட்டின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கடைசி போஸ்ட் கார்டும் தபால் பெட்டிக்குள் போட்டுப் பூட்டப்பட்டுவிட்டன! உலகப் புகழ் பெற்ற நியூயார்க் போஸ்ட் பத்திரிகையும் கடந்த ஆண்டு மூடப்பட்டு டாட் காம் வடிவத்துக்கு வந்துவிட்டது. எது குறித்த தகவலும் கூகிளைத் தட்டினால் கிடைத்துவிடும் என்பது ப்ரீ கே ஜி குழந்தைக்கும் தெரிகிறது. இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன்பு பத்திரிகை வேலைக்கு சேர்ந்தபோது மேற்சொன்ன மாற்றங்கள் நிகழும் என்று எனக்கு ஒரு துளியும் தெரியாது! எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இதுவே நேர்ந்திருக்கும் என்பது என் யூகம்!

அதிமுக பேச்சாளர்கள் விஜயகாந்த் பிரேமா குறித்து பேச தடை...கோபத்தில கோபாலபுரம் போயிட்டா? இன்னா ராசதந்திரம்?

தே.மு.தி.க., மற்றும் அக்கட்சி தலைமை குறித்து பேச, அ.தி.மு.க.,வினருக்கும், அக்கட்சி பேச்சாளர்களுக்கும், முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில், 29 தொகுதிகளில், அக்கட்சி வெற்றி பெற்றதுடன், தி.மு.க.,விடம் இருந்த, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் தட்டிப் பறித்தது. அடுத்த சில மாதங்களிலேயே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து தே.மு.தி.க., கழற்றி விடப்பட்டது.  தேன்குடிச்ச நரி சாராயமும் குடிச்ச மாதிரி அந்த ஆளு எல்லாரையும் என்னா பாடு படுத்துறார்? கொஞ்ச நாளு ஆட்சியை இதுகிட்ட கொடுத்து பார்க்கணும்....கோவிந்தா கோவிந்தா..  

சூப்பர் சிங்கர் போட்டி... ஏமாற்று வேலை?

விஜய் டிவியின் சுப்பர் சிங்கரில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்ற நபர் வெற்றி பெற்றார் என்பதை தெரியாதவர்கள் இன்று தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது. அதில் ஒரு எபிசோட் கூட பார்த்ததில்லை என்பதால் அந்த நபரின் முகம் கூட எனக்கு தெரியாது. ஆனால் சற்றே வித்தியாசமான அந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரியே இருந்ததாக மனதை குடைந்து கொண்டே இருந்தது.
பாட்டு கேட்பது ரொம்ப பிடித்தமான பொழுதுபோக்கு என்பதால் என் மொபைலில் கிட்டத்தட்ட 2500 பாடல்கள் வைத்திருக்கிறேன். பெரும்பாலானவையில் பாடல்களை பற்றிய விவரங்களை (படத்தின் பெயர், பாடகர்கள், இசையமைப்பாளர்..) தெளிவாக tag செய்திருப்பேன்.
அந்த தொகுப்பில் இந்த பெயரை போட்டு தேடியதில் வந்து விழுந்தன

திங்கள், 21 மார்ச், 2016

வெங்கையா நாயுடு : கடவுள் தந்த பரிசு பிரதமர் மோடி.......ஏனுங்க சுனாமி, நிலநடுக்கம் எல்லாம்..?

பிரதமர் மோடி கடவுள் தந்த பரிசு என மத்திய அமைச்சர் வெங்கயைா நாயுடு கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் வெங்கையா பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் பேசுகையில் ; இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய அரசு வளர்ச்சியை மட்டுமே இலக்காக டைம் பத்திரிகை மோடிய தலை சிறந்த தலைவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. சமூக வலை தளங்களில் மோடி புகழ் பெற்றவராக திகழ்கிறார். பேஸ் புக்கில் 32 மில்லியன் மக்கள் , டுவிட்டரில் 18 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர்.  வெங்காயம் இனி மண்சோறு துண்றதுதான் பாக்கி...வெங்காயத்துக்கு மட்டும் அல்ல அதானி அம்பானி மல்லையா சு.சாமி எல்லாருக்கும்தான் மோடி ஒரு பம்பர்  பரிசுதான்..

விஜயகாந்துக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன்...அன்புமணிக்கு எதிராக பண்ருட்டி வேல்முருகன்...அதிமுக அதிரடி!

சென்னை: முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிடும் தேமுதிகவின் விஜயகாந்துக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரனையும், பாமகவின் அன்புமணி ராமதாசுக்கு எதிராக பண்ருட்டி வேல்முருகனையும் களமிறக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டசபைத் பொதுத்தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுகிறது. அதிமுகவை பொறுத்தவரை, கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. 200 தொகுதிகள் வரை அதிமுக போட்டியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் பட்டியலும் ஏற்கெனவே தயாராகிவிட்டதாம். பெண்கள், படித்தவர்கள், இளைஞர்கள் என அதிக அளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது.

அரசியல் கட்சிகளிடம் நடிகர் நடிகைகள் ரேட்டு பேச தொடங்கிட்டாய்ங்க....ஆயிரத்தில இருந்து கோடி வரை பேச்சுங்க....

கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திரை பிரபலங்கள் பலரும் பங்கெடுத்தனர். குறிப்பாக திமுகவின் பிரச்சாரத்தில் வைகை புயல் என புகழப்படும் நடிகர் வடிவேல் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலிலும் நடிகர்-நடிகைகள் பிரசாரத்துக்கு தயாராகிறார்கள்.குறிப்பாக ஏராளமான சின்னத்திரை நடிகைகளும் தற்போது பேரத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். எல்லா கட்சிகளும் கூட்டம் சேர்க்க பெரிய திரை சின்னத்திரை நட்ச்சதிங்களையே பெரிதும் நம்பி இருக்கின்றன. கலையுலக வாய்ப்பை இழந்து நிற்கும் நடிகர் நடிகைகளுக்கு வரும் சட்டசபை தேர்தல் ஒரு வரப்பிரசாதமாகும்...மந்திரிங்க அடிச்சா காசில கொஞ்சம் இவங்களுக்கும் சேரட்டுமே.   வடிவேலு போன்ற ஓரிருவரை தவிர மத்த எல்லாரும் ரேட்டுகாகத்தான் பிரசாரம் செய்வாங்க.
ராமராஜன், ஆனந்தராஜ், செந்தில், குண்டுகல்யாணம், மனோபாலா, ஆர்.வி.உதயகுமார், விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி, உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவும், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, வாசு விக்ரம் உள்ளிட்டோர் தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நடிகைகள் குஷ்பு, நக்மா இருவரும் காங்கிரசுக்கு வாக்கு சேகரிக்கிறார்கள். எஸ்.வி.சேகர், விசு, விஜயகுமார், கஸ்தூரிராஜா, பா.ஜனதாவுக்கு பிரசாரம் செய்கிறார்கள்.

சசி தரூர் : கண்ணய்யா குமார் தனது அரசியல் நம்பிக்கைகளுக்காக போராடுபவர்..பகத் சிங் போன்றவர்

சசி தரூர். | படம்: ரோஹித் ஜெயின் பராஸ்.ஜே.என்.யூ. மாணவர் தலைவர் கண்ணய்யா குமாரை, பகத் சிங்குடன் ஒப்பிட்டு பேசினார் சசி தரூர். இதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ஞாயிறு இரவு ஜே.என்.யூ. மாணவர்களிடையே உரையாற்றிய சசி தரூர், தற்காலத்திய பகத் சிங்தான் கண்ணய்யா குமார் என்று பேசினார்.  “பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் தேசத் துரோக வழக்கினால் அதிகம் பாதிக்கப்பட்டது, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பால கங்காதர திலகர், அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் பகத் சிங்” என்றார் அப்போது ஒரு மாணவி கண்ணய்யா குமாரின் பெயரை எடுத்துக் கொடுக்க, சசி தரூர், “இவரது காலத்தில் கண்ணய்யா குமார்தான் பகத்சிங்” என்றார்.

BBC: அதிபர் ஒபாமாவின் கியூப விஜயத்தின் தாத்பரியம்

அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக உலகின் பெரும் வல்லரசான அமெரிக்காவின் பரம எதிரியாக கணிக்கப்பட்ட நாடு கியூபா. ஆனால், 1928இல் கல்வின் கூலிஜ் கியூபாவுக்கு விஜயம் செய்ததற்கு பிறகு , இன்று பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க அதிபராக ஒபாமா அங்கு விஜயம் செய்கிறார். இரு நாட்டுக்கும் இடையில் கொள்கை முரண்பாடு இன்னமும் தொடர்கிறது. ஆனால், அரசியல் நிலைமைகளில் மாற்றங்கள் வருகின்றன. வணிக வாய்ப்புகளுந்தான். இவை குறித்த பிபிசியின் காணொளி.

நான் கடவுள் ! கதாநாயகியை கதாநாயகன்(Honer killing?) கொலைசெய்வதை காவியப்படுத்திய ஜெயமோகன் + பாலா GANG

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான (honer killing) ஆணவக் கொலைகள் தொடர்கிறது. அதை கண்டித்து அதற்கெதிரான முழக்கத்தை ஓங்கி ஒலிக்க பெரிய கட்சிகளோ அல்லது சினிமா பிரபலங்களோ தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்த சமயத்தில் பெண்கள் மீதான உச்சபட்ச பயங்கரத்தை நியாயப்படுத்தி ஒரு தமிழ் திரைப்படம் வெளியாகி ஓடிவிட்டது, இன்றுவரை அந்த திரைப்படத்தின் மையக்கருத்து பற்றி சரியான விமர்சனம் வெளிவரவே இல்லை.
நான் கடவுள்....ஆம்பிளை கடவுள்.  அதாவது  பெண்களின் கற்பு கௌரவம் மற்றும் பெண்மை அல்லது பாரம்பரியம் இன்னும் என்னனவோ காரணங்கள் இருப்பதாக ஆண்கள் கருதினால் அந்த பெண்ணை  கொல்வது அவளுக்கு நீங்கள் செய்த சேவையாகும். இதுதான் ஜெயமோகன் எழுதி பாலா இயக்கிய நான் கடவுள் படத்தின் செய்தியாகும்

ஸ்டாலின் :தி.மு.க.விடம் இருந்து என்னை பிரித்துவிட முடியாது...வழக்கமா அழகிரி அல்லவா....?

 தி.மு.க.விடம் இருந்து என்னை பிரித்துவிட முடியாது : மு.க.ஸ்டாலின்
tamil.chennaionline.com :சென்னை,மார்ச் 21 (டி.என்.எஸ்) திமுக-விடம் இருந்து என்னை பிரித்துவிட முடியாது, என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ஆங்கில நாளிதல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முழுவதும் நான் நடத்திய 'நமக்கு நாமே' பயணத்தின் போது மக்களிடையே மாபெரும் எழுச்சியைப் பார்த்தேன். அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிவிட்டு தி.மு.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

சென்னை: ஜே.என்.யூ – ஹைதராபாத் மாணவர்கள் உரை – வீடியோ

எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஜே.என்.யூ மாணவர் ஆனந்த் ஆற்றிய உரை! பாருங்கள் – பகிருங்கள்! ஆனந்த், ஜே.என்.யு

பிலிம் நியுஸ் ஆனந்தன் மறைவு...நடமாடும் திரையுலக நூலகம்..அரசு செய்யவேண்டியதை தனிமனிதனாக செய்தவர்

தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று காலமானார்.  அவரது மறைவு குறித்து திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள இரங்கல் “கலைமாமணி" பிலிம் நியூஸ் ஆனந்தன்,  கடந்த சில வாரங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்து இன்று காலையில் மறைந்து விட்டார் என்ற செய்தியினை அறிந்து வருந்துகிறேன்.   தமிழக திரையுலகில் மக்கள் தொடர்பாளராக  தன் வாழ்க்கையைத் தொடங்கி,  திரைப்படத் துறை குறித்த பல்வேறு  தகவல்களைச் சேகரித்து வைத்திருந்ததோடு,  அந்த விவரங்களைத் தேவையானவர்களுக்கு வழங்கியும் வந்தார்.ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும்,  அந்த ஆண்டு என்னென்ன திரைப்படங்கள், எந்தெந்த நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன  என்பன போன்ற விவரங்களையெல்லாம் தொகுத்து சிறு கையேடாகவும் வெளியிட்டு வந்தார்.  

எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆயிட்டய்ங்க...

எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட் டாங்களே?'' ""விஜயகாந்த் பற்றி தே.மு.தி.க நிர்வாகி களும் இப்படித் தான் சொல் றாங்க தலைவரே.. .. 10 நாள் முன் னாடி வரைக்கும் தமிழகத் தேர்தல் களத்தின் மையப்புள்ளியா அவர்தான் இருந் தாரு.
தனித்துப் போட்டின்னு அவர் அறிவித்து, கேப்டன் தலை மையில் சேர்ற வங்க வரலாம்னு பிரேமலதா விளக்கம் கொடுத்த பிறகு நிலை மையே தலைகீழா மாறிப்போயிடிச்சி. தனிச்சுப் போட்டியிடுறதால நமக்கு சீட்டும் கிடைக்கப் போறதில்லை. வாக்கு வங்கியும் அதிகரிக்கப் போவதில்லைன்னு குடும்ப உறுப்பினர்கள் தரப்பிலும், தே.மு.தி.கவின் 7 பேர் கமிட்டி தரப்பிலும் அலசப்பட்டிருக்குது.
இதையடுத்து மக்கள் நலக்கூட்டணி, பா.ஜ.க., த.மா.கா.ன்னு மூணு தரப்பிலும் தே.மு.தி.க குழு பேசியிருக்குது.'' ""என்ன ரெஸ்பான்சாம்?'' ""ஒரு நேரத்தில் தே.மு.தி.க ஆபீசுக்குத் தேடிப்போய் விஜயகாந்த்தை சந்திச்சவங்கதான் மக்கள்நலக் கூட்டணித் தலைவர்கள். தி.மு.க வோடு தே.மு.தி.க சேர்ந்திடக்கூடாதுங்கிறதில் கவனமா இருந்தாங்க. தி.மு.க தரப்பிலான கூட்டணிப் பேச்சு கனியவும் இல்லை. பாலில் விழவும் இல்லைன்னு ஆனபிறகு தே.மு.தி.க.வை வைகோ உள்ளிட்ட ம.ந.கூ தலைவர்கள் பெருசா கண்டுக்கலை.

அதிமுக கலெக்ஷன் விபரம் : 60% கட்சிக்கு, 20% மாவட்டத்துக்கு, 20% டெண்டர் அல்லக்கைகளுக்கு....

""ஹலோ தலைவரே... ஐவரணிக்கு ஆப்பு.. வீட்டுச் சிறைன்னு முதலில் சொன்னது நம்ம நக்கீரன்தான். இப்ப எல்லா மீடியாக்களிலும் அதுதான் முதலிடம் பிடிச்சிருக்குது.'' ""ஆமாப்பா… பிப்ரவரி 01-03 தேதியிட்ட நம்ம நக்கீரனிலே, ‘மெஜாரிட்டி சீட் ஜெயிக்காவிட்டாலும் 100க்கும் குறையாமல் அ.தி.மு.க ஜெயித்தாலும் அதற்கேத்த மாதிரி, தங்களால் பதவிக்கு வந்த 54 அ.தி.மு.க மா.செக்களும் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு சீட் கொடுத்து மா.செக்கள் செலவில் அவங்களை ஜெயிக்க வைக்க ணும்ங்கிறதுதான் ஐவரணியின் ப்ளான். எத்தனை பேர் ஜெயிக்கிறாங்களோ அதைப் பொறுத்து ஐவர் அணியோட செல்வாக்கு கட்சியில் இருக்கும். அதற்குத் தகுந்தபடி தேர்தல் வேலைகள் நடக்குதாம்னு நாம பேசியது அப்படியே வந்திருந்ததே!'' ""இந்த செய்திக்குப்பிறகுதான் ஐவரணி பக்கம் கார்டனோட கவனம் திரும்பி யிருக்குது. செமத்தியான கவனிப்பால் நொந்துபோய் கட்சிக்காரங்ககிட்டே வேதனையோடு முனகுது ஐவரணி தரப்பு.