செவ்வாய், 22 மார்ச், 2016

தேமுதிக கூட்டணி முடிவு நெல்லையில் பிரேமலதா அறிவிக்கிறார்....எத்தினி சூட்கேசப்பா.....

நெல்லையில்யில் வரும் 25 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள தேமுதிக பொதுக் கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை பிரேமலதா வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் வேடல் மாநாட்டில் பிரேமலதா அதிமுக, திமுக இரண்டையும் விமர்சித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய விஜயகாந்த் பிரேமலதா பேசியதையே பேசினார். இந்த நிலையில், தேமுதிக - திமுக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுத்தார். இந்த நிலையில் மகளிர் தின மாநாட்டில் பேசிய விஜயகாந்த், தேமுதிக தனித்துப் போட்டி என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், தேமுதிக-வே உடையும் அளவு நிலைமை மோசமானது.   முதல்ல காஞ்சிபுரத்தில  கப்டன்,  இப்போ நெல்லையில் பிரேமா அடுத்து குமரியில் சுதீஷ் அப்புறம் கோவையில்  சண்முகபாண்டியன் அதுக்கப்புறம் நீலகிர்யில விஜய பிரபாகரன் ,,,,,ஒங்க பாடு  ஒரே  குஷிதான்  போங்க 


இந்த தகவலை மெதுவாக மோப்பம் பிடித்த தேமுதிக தலைமை கூட்டணி அமைக்கும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டுள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், கூட்டணியை இழுத்தால் நல்லது அல்ல என்பதால், நெல்லையில்யில் வரும் 25 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள தேமுதிக பொதுக் கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் மனைவி பிரேமலதா வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, அதிமுக-வை வீழ்த்தும் வகையில், அநேகமாக தேமுதிக - திமுக கூட்டணி மலர வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: