திங்கள், 21 மார்ச், 2016

அரசியல் கட்சிகளிடம் நடிகர் நடிகைகள் ரேட்டு பேச தொடங்கிட்டாய்ங்க....ஆயிரத்தில இருந்து கோடி வரை பேச்சுங்க....

கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திரை பிரபலங்கள் பலரும் பங்கெடுத்தனர். குறிப்பாக திமுகவின் பிரச்சாரத்தில் வைகை புயல் என புகழப்படும் நடிகர் வடிவேல் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலிலும் நடிகர்-நடிகைகள் பிரசாரத்துக்கு தயாராகிறார்கள்.குறிப்பாக ஏராளமான சின்னத்திரை நடிகைகளும் தற்போது பேரத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். எல்லா கட்சிகளும் கூட்டம் சேர்க்க பெரிய திரை சின்னத்திரை நட்ச்சதிங்களையே பெரிதும் நம்பி இருக்கின்றன. கலையுலக வாய்ப்பை இழந்து நிற்கும் நடிகர் நடிகைகளுக்கு வரும் சட்டசபை தேர்தல் ஒரு வரப்பிரசாதமாகும்...மந்திரிங்க அடிச்சா காசில கொஞ்சம் இவங்களுக்கும் சேரட்டுமே.   வடிவேலு போன்ற ஓரிருவரை தவிர மத்த எல்லாரும் ரேட்டுகாகத்தான் பிரசாரம் செய்வாங்க.
ராமராஜன், ஆனந்தராஜ், செந்தில், குண்டுகல்யாணம், மனோபாலா, ஆர்.வி.உதயகுமார், விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி, உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவும், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, வாசு விக்ரம் உள்ளிட்டோர் தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நடிகைகள் குஷ்பு, நக்மா இருவரும் காங்கிரசுக்கு வாக்கு சேகரிக்கிறார்கள். எஸ்.வி.சேகர், விசு, விஜயகுமார், கஸ்தூரிராஜா, பா.ஜனதாவுக்கு பிரசாரம் செய்கிறார்கள்.

ரசிகர்கள் பலம் உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்கள் ஆதரவு எந்த கட்சிக்கு கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவர்கள் ஆதரவை பெற அரசியல் கட்சியினரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ரஜினிகாந்த் ஆதரவை பெறுவதற்கு பா.ஜனதா கட்சியினர் தீவிரமாக உள்ளனர். அவரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்போம் என்று அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் பேசி வருகின்றனர்.
கமல்ஹாசன் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் தேர்தலில் ஓட்டுப்போடுவது மட்டுமே எனது அரசியல் பணியாக இருக்கும் என்றும் கூறி விட்டார். எனவே ரசிகர்கள் அந்தந்த தொகுதிகளில் பிடித்த வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட முடிவு செய்துள்ளனர்.
விஜய், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி சமூக சேவை பணிகளில் ஈடுபடுகிறார். அவர் அரசியலில் ஈடுபடலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது  தினமணி.com

கருத்துகள் இல்லை: