திங்கள், 21 மார்ச், 2016

எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆயிட்டய்ங்க...

எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட் டாங்களே?'' ""விஜயகாந்த் பற்றி தே.மு.தி.க நிர்வாகி களும் இப்படித் தான் சொல் றாங்க தலைவரே.. .. 10 நாள் முன் னாடி வரைக்கும் தமிழகத் தேர்தல் களத்தின் மையப்புள்ளியா அவர்தான் இருந் தாரு.
தனித்துப் போட்டின்னு அவர் அறிவித்து, கேப்டன் தலை மையில் சேர்ற வங்க வரலாம்னு பிரேமலதா விளக்கம் கொடுத்த பிறகு நிலை மையே தலைகீழா மாறிப்போயிடிச்சி. தனிச்சுப் போட்டியிடுறதால நமக்கு சீட்டும் கிடைக்கப் போறதில்லை. வாக்கு வங்கியும் அதிகரிக்கப் போவதில்லைன்னு குடும்ப உறுப்பினர்கள் தரப்பிலும், தே.மு.தி.கவின் 7 பேர் கமிட்டி தரப்பிலும் அலசப்பட்டிருக்குது.
இதையடுத்து மக்கள் நலக்கூட்டணி, பா.ஜ.க., த.மா.கா.ன்னு மூணு தரப்பிலும் தே.மு.தி.க குழு பேசியிருக்குது.'' ""என்ன ரெஸ்பான்சாம்?'' ""ஒரு நேரத்தில் தே.மு.தி.க ஆபீசுக்குத் தேடிப்போய் விஜயகாந்த்தை சந்திச்சவங்கதான் மக்கள்நலக் கூட்டணித் தலைவர்கள். தி.மு.க வோடு தே.மு.தி.க சேர்ந்திடக்கூடாதுங்கிறதில் கவனமா இருந்தாங்க. தி.மு.க தரப்பிலான கூட்டணிப் பேச்சு கனியவும் இல்லை. பாலில் விழவும் இல்லைன்னு ஆனபிறகு தே.மு.தி.க.வை வைகோ உள்ளிட்ட ம.ந.கூ தலைவர்கள் பெருசா கண்டுக்கலை.


விஜயகாந்த் எங்க கூட் டணிக்கு வரலாம். அவர் தலைமையில் கூட்டணி இல்லைன்னு வைகோ சொல்ல, தே.மு.தி.கவிடம் நாங்க பிச்சை கேட்க லைன்னு தா.பாண்டியன் போடு போட்டாரு.
இந்த நிலையில், பா.ஜ.க தரப்பை தே.மு.தி.க குழு தொடர்பு கொண்டப்ப, கண்டிஷன் எதுவுமில் லைன்னா பேசலாம்னு சொல்லப்பட்டிருக்குது. கடைசியா த.மா.கா தலைவர் ஜி.கே.வாச னைத் தொடர்புகொண் டப்ப அவர் ஒரு வாரம் பொறுத்துக்குங்கன்னு சொல்லியிருக்காரு.
'' ""கூட்டணி விஷ யத்தில் எல்லாரையும் காக்க வச்சவராச்சே விஜயகாந்த்!'' ""இப்ப தன்னை எல்லோரும் காக்க வைப் பதில் விஜயகாந்த் ரொம்பவே விரக்தியாகி, பிரேமலதா தொடங்கி கட்சி நிர்வாகிகள் வரை எல்லார்கிட்டேயும் கோபத்தை வெளிப் படுத்தியிருக்காரு.

தே.மு.தி.க.வின் 7 பேர் குழுவில் சுதீஷ் உள்பட 6 பேர் தி.மு.க கூட்டணி யில் ஆர்வமுள்ளவங்க தான். அதனால அடுத்த ரவுண்டு பேச்சுவார்த்தை களை ஆரம்பிக்கலாம்னு முயற்சிகள் நடந்தன.

இந்த முறை தி.மு.க கூட்டணி தொடர்பா காங்கிரஸ் தரப்பிலிருந்து பேச்சு தொடங்கியது. அதுவும் டெல்லியிலிருந்து.'' ""காங்கிரசின் டெல்லித் தலைமைக்கு இந்தக் கூட்டணியில் ரொம்ப ஆர்வமா?'' ""ராகுலைப் பொறுத்தவரை ஜெ. ஆட்சியை வீழ்த்தணும்ங்கிறதிலோ, தி.மு.க ஆட்சி மறுபடியும் அமையணும்ங்கிறதிலோ பெரிய ஆர்வம் கிடையாது. ஆனா தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு கவுரவமான வெற்றி கிடைக்க ணும்னு நினைக்கிறாரு.

ஏற்கனவே பீகாரில் வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ் இடம் பிடித்து, பா.ஜ.க.வின் கனவை நொறுக்கிடிச்சி. அதுபோல தமிழ்நாட்டிலும் பா.ஜ.க அமைக்க நினைக்கும் கூட்டணி முயற்சிகளைத் தகர்த்து, தங்கள் பக்கம் தே.மு.தி.க.வை இழுக்கணும்னு நினைக்கிறாரு.

'' ""தி.மு.க எந்தவிதத்தில் ஆர்வமா இருக்குது?'' ""கூட்டணி விஷயத்தில் இரண்டுவிதமான மனநிலை இருக்குது. தே.மு.தி.கவை விடவேண் டாம்னு ஒரு தரப்பும், நாமே 200 தொகுதி அளவுக்கு நிற்கலாம்னு இன்னொரு தரப்பும் நினைக்குது.
கலைஞரை தினமும் சந்திக்கிறவ ரான துரைமுருகன், தே.மு.தி.க இல்லாமலே ஜெயிக்கலாம்னு கட்சி நிகழ்ச்சியில் பேசியதும் உற்றுப் பார்க்கப்படுது.
தி.மு.கவின் அதிகாரப் பூர்வ நிர்வாகிகள் யாரும் நேரடியா கூட்டணி பேசலை. அவுட் சோர்ஸிங்தானாம்.
அதுவும் கூட இப்போதைக்கு வேகமா இருக்கவேண் டாம்னு கலைஞர் நினைக்கிறாராம்.
ஸ்டாலினும் பேச்சுவார்த்தையை மறுத்திருக்காரு. இதற் கிடையில், ஜெ.வின் திட்டத்தைத் தெரிஞ்சிக் கிட்டு முடிவெடுக்கலாம்னும் விஜயகாந்த்கிட்டே தி.மு.க.வுக்காகப் பேசுன ஆட்கள் சொல்லி யிருக்காங்க. அவரும் வெயிட் பண்றாரு.' nakkheeran.in

கருத்துகள் இல்லை: