புதன், 23 மார்ச், 2016

வைகோ, திருமா வருகைக்காக காத்திருந்து ஏமாந்த விஜயகாந்த்

வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் வருகைக்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இரண்டரை மணி நேரம் காத்திருந்தார்.மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க., இணைய வேண்டும் என, அதன் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் கூறி வருகின்றனர். அதற்கு, 'நீங்கள் என் தலைமையை ஏற்க வேண்டும்'என, விஜயகாந்த் நிபந்தனை விதிக்கிறார். இதனால், ம.ந.கூட்டணியில் தே.மு.தி.க., சேருமா அல்லது விஜயகாந்த் தலைமையின் கீழ், ம.ந.கூ., இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ம.ந.கூ., தலைவர்கள், விஜயகாந்தை சந்திக்க இருப்பதாக, நேற்று காலை தகவல் பரவியது. அதனால், தன் தலைமையை ஏற்க, அவர்கள் முடிவு செய்து விட்டதாக
விஜயகாந்த் நம்பினார். தற்போது எந்தக் கட்சி / கூட்டணி யிடமும், தடாலடியாக நிபந்தனை விதித்துப் பேசும் தகுதியில் விஜயகாந்த் இல்லை. அதற்கான காலம் கடந்துவிட்டது. அவர்களாகப் பார்த்துக் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு, அய்சா-பைசா வையெல்லாம் மறந்துவிட்டு அரசியலை ஒட்டவேண்டியதுதான் இல்லையேல் கொஞ்சநஞ்சம் உள்ள வாக்கு வங்கியும் புஸ்வாணமாகிவிடும் .


வழக்கமாக, சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு, பகல், 12:00 மணி அளவில் தான், விஜயகாந்த் வருவார். ஆனால், ம.ந.கூ., தலைவர்கள் வருகையை எதிர்பார்த்து, காலை, 11:00 மணிக்கே வந்துவிட்டார். அந்த நேரத்தில், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ம.ந.கூ., தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், அவர்கள் புறப்பட்டு வர வாய்ப்புள்ளதாக, விஜயகாந்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆர்ப்பாட்டம் முடிந்ததும், அவர்கள் வீட்டுக்கு போய் விட்டனர். இதனால், 1:30 மணி வரை காத்திருந்து பார்த்த விஜயகாந்த் வெறுத்துப் போய் கிளம்பினார். - நமது நிருபர் -- dinamalar.com

கருத்துகள் இல்லை: